கவரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கவரா
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு
மொழி(கள்)
தமிழ், தெலுங்கு
சமயங்கள்
இந்து
தொடர்புள்ள இனக்குழுக்கள்
பலிஜா, கம்மவார்

கவரா (Gavara), கவரை எனப்படுவோர் தமிழகத்தில் வாழுகின்ற ஒர் இனக்குழுவினர் ஆவர். இச்சமூகத்தினர் பலிஜா இனத்தின் ஒரு பிரிவினராகக் கருதப்படுகின்றனர். பலிஜா என்ற சொல்லின் தமிழ் வடிவம் கவரை என்பதாகும். பலிஜா என்பது சோழர்கால வளஞ்சியர் என்பதன் தெலுங்கு வடிவ சொல். இதன் கன்னட வடிவ சொல் பனாஜிகா என்பதாகும். இதன் பொருள் வணிகர் என்பதாகும். பாண்டிய நாட்டில் வணிகம் செய்துவந்த தென்னிலங்கை வளஞ்சியருடன் தொடர்புடைய குழுக்கள் ஆவர் [1] தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டுப் பட்டியலில், இவர்கள் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ளனர்.[2]

வாழும் பகுதிகள்

இவர்கள் தமிழகத்தில், குறிப்பாக சென்னை, மதுரை, தேனி, விருதுநகர், திருச்சி, தஞ்சாவூர் கோவை, வேலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில், கணிசமாக வசிக்கின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் எது குல கவரை என்ற பிரிவும் இருந்துள்ளது.[3]

குறிப்பிடத்தக்க நபர்கள்

மேற்கோள்கள்

  1. "List of Backward Classes approved by Government of Tamil Nadu".
  2. "எது குல கவரை" (PDF). p. 6. {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)
  3. "தி.மு.க.,வுக்கு எதிராக நாயுடு சங்கம் தீர்மானம்". தினமலர் நாளிதழ். 21 மார்ச் 2011. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கவரா&oldid=3928714" இலிருந்து மீள்விக்கப்பட்டது