வளஞ்சியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சோழர் காலத்தில் வணிகப் பிரிவினரில் வலஞ்சியர் அல்லது வளஞ்சியர் என்று ஒரு குழுவினர் இருந்தனர்.[1] வளஞ்சியர்கள் கடல் வணிகத்தில் சிறந்து விளங்கினர்.[2][3] வளஞ்சியர் என்பது தற்கால பலிஜாஎன்ற வணிகர் மக்களைக் குறிப்பதாகும்.[4][5][6][7] முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கவரை வளஞ்சியர்கள் எனும் வணிக பிரிவினர் பல குடிகளுக்கும் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்[8] வளஞ்சியர் என்ற வாணிகக் குழுவினைப் பற்றி முதலாம் இராசேந்திர சோழன் காலத்திய காட்டுர்க் கல்வெட்டு  ஒன்று விரிவான செய்திகளைக் கூறுகின்றது. வீர வளஞ்சிய சமயத்தைப் பாதுகாப்பவர்கள் இவர்களே என்றும், இவர்கள் வாசுதேவன், கந்தழி, வீரபத்திரன் ஆகிய கடவுளரிடம் தோன்றியவர்கள் என்றும் பட்டாரகி (துர்க்கை)யை வழிபடுபவர்கள் என்றும் அக் கல்வெட்டு கூறுகிறது .இவர்களுள் பல பிரிவினர் உண்டு. நான்கு திசைகளின் ஆயிரம் வட்டங்கள், பதினெண் நகரங்கள்,முப்பத்திரண்டு வேளர்புரங்கள், நான்கு கடிகைத் தானங்கள் ஆகியவற்றினின்றும் இவர்கள் வந்தவர்கள்[9][10][11].

மேற்கோள்கள்[தொகு]

 1. தமிழ்நாட்டு வரலாறு குழு, தொகுப்பாசிரியர் (1988). தமிழ்நாட்டு வரலாறு நான்காம் பகுதி சோழப் பெருவேந்தர் காலம். தமிழ் வளர்ச்சி இயக்கம். பக். 30. https://books.google.co.in/books?id=tD1uAAAAMAAJ&dq=பிரிவினரில்+வளஞ்சியர்+என்று+ஒரு+குழுவினர்&focus=searchwithinvolume&q=பிரிவினரில்+வளஞ்சியர்+என்று+ஒரு++. 
 2. முன்னவர் மா. இராசமாணிக்கம், தொகுப்பாசிரியர் (1964). தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும். தனலட்சுமி பதிப்பகம் , சென்னை. பக். 105. https://books.google.co.in/books?id=E7o9AAAAIAAJ&dq=வளஞ்சியர்+கடல்&focus=searchwithinvolume&q=வளஞ்சியர்++. 
 3. டாக்டர் அ. தட்சிணாமூர்த்தி, தொகுப்பாசிரியர் (1987). தமிழர் நாகரிகமும் பண்பாடும். ஐந்திணைப் பதிப்பகம். பக். 115. https://books.google.co.in/books?id=Hfm1AAAAIAAJ&dq=வளஞ்சியர்+கடல்&focus=searchwithinvolume&q=வளஞ்சியர்+++கடல். 
 4. கி. நாச்சிமுத்து எம்.ஏ, தொகுப்பாசிரியர் (1969). சோழன் பூர்வ பட்டயம் கூறும் கொங்கு நாட்டு ஊர்கள். ஜெயக்குமாரி பதிப்பகம். பக். 39. https://books.google.co.in/books?id=bLE9AAAAIAAJ&dq=வலைஞ்சியர்%27+என்பது+பலிஜர்&focus=searchwithinvolume&q=வலைஞ்சியர்%27+என்ற+என்பது+பலிஜர்+தெலுங்கு. 
 5. நிருபர், தொகுப்பாசிரியர் (8 மார்ச் 2015). வணிகக் குழு கல்வெட்டுகள். தினமணி நாளிதழ். "இடைக்கால தென்னிந்தியாவில் பல்வேறு தொழிற்குழுக்கள் செயல்பட்டுள்ளன. நிகமா, புகா, சிரேணி, சங்கம் ஆகிய தொழிற்குழுக்கள் வட இந்தியாவில் செயல்பட்டுள்ளன. தென்னிந்தியாவில் நாநாதேசி, ஐநூற்றுவர், வளஞ்சியர் (தற்கால பலிஜர்) கவரை, மாயிலட்டி, சித்திரமேழி, கம்மாளர், அக்கசாலை (பொற்கொல்லர்), இடங்கை, வலங்கை, தேசி, சாத்து முதலிய வணிகச் சங்கங்கள் செயல்பட்டுள்ளன" 
 6. Epigraphia Indica And Record Of The Archæological Survey Of India - Volume 18. Office of the Superintendent of Government Printing, India. 1983. பக். 335. "In Telugu the word balija or balijiga has the same meaning. It is therefore probable that the words valañjiyam, valanjiyar,  balañji,  banañji,  banajiga and balija are cognate, and derived from the Sanskrit vanij" 
 7. வணிகக் குழுக் கல்வெட்டுகள், தொகுப்பாசிரியர் (1961). தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை. தமிழ்நாடு அரசு. https://www.tnarch.gov.in/epigraphy/guild-inscriptions. 
 8. கி. நாச்சிமுத்து எம்.ஏ, தொகுப்பாசிரியர் (1969). சோழன் பூர்வ பட்டயம் கூறும் கொங்கு நாட்டு ஊர்கள். ஜெயக்குமாரி பதிப்பகம். பக். 39. https://books.google.co.in/books?id=ny8dAAAAMAAJ&q=பல+குடி+க்கும்+கவறை+வலைஞ்சியர்கள்+தலைவர்களாக்கப்+படுகிரு.ர்+க்ள்&dq=பல+குடி+க்கும்+கவறை+வலைஞ்சியர்கள்+தலைவர்களாக்கப்+படுகிரு.ர்+க்ள்&hl=en&sa=X&ved=0ahUKEwiNrpKmmPjkAhVEPY8KHX3yAlAQ6AEIJzAA. 
 9. கே கே பிள்ளை, தொகுப்பாசிரியர் (2000). தமிழக வரலாறு மக்களும் பண்பாடும். உலகத் தமிழாரய்ச்சி நிறுவனம். பக். 327. 
 10. ஞானி, தொகுப்பாசிரியர் (1999). மார்க்சியத்தின் புதிய பரிமாணங்கள். புதுமலர் படைப்பகம். பக். 30. 
 11. ஆர் ஸ்ரீனிவாசன், தொகுப்பாசிரியர் (1975). சக்தி வழிபாடு. ஜெயா பதிப்பகம். பக். 34. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வளஞ்சியர்&oldid=3302152" இருந்து மீள்விக்கப்பட்டது