கருமுதுகு மரங்கொத்தி
கருமுதுகு மரங்கொத்தி | |
---|---|
ஆண் மரங்கொத்தி, ஐதராபாத் இந்தியா | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | பிசிபார்மிசு
|
குடும்பம்: | |
பேரினம்: | கிரைசோகோலாப்டெசு
|
இனம்: | கி. பெசுடிவசு
|
இருசொற் பெயரீடு | |
கிரைசோகோலாப்டெசு பெசுடிவசு போடெர்ட், 1783 |
கருமுதுகு மரங்கொத்தி (White-naped woodpecker)(கிரைசோகோலாப்டெசு பெசுடிவசு) என்பது மரங்கொத்திப் பறவைச் சிற்றினங்களுள் ஒன்று ஆகும். இது இந்தியத் துணைக்கண்டத்தில் பரவலாக ஆனால் அரிதாகவே இனப்பெருக்கம் செய்யக்கூடியதாக உள்ளது. இது திறந்த காடு மற்றும் சில மரங்களுடன் காணப்படும். இது மரத்துளையில் கூடு கட்டி ஒன்று அல்லது இரண்டு வெள்ளை நிற முட்டைகளை இடும்.
வகைப்பாட்டியல்
[தொகு]இந்தியாவின் தென்மேற்கு கடற்கரையில் உள்ள கோவாவில் சேகரிக்கப்பட்ட ஒரு மாதிரியிலிருந்து 1780ஆம் ஆண்டில் பிரெஞ்சு பாலிமத் ஜார்ஜஸ்-லூயிஸ் லெக்லெர்க், காம்டே டி பஃப்ஃபோன் தனது ஹிஸ்டோயர் நேச்சர்ல் டெஸ் ஓய்சாக்ஸில் கருமுதுகு மரங்கொத்தி குறித்து விவரித்துள்ளார்.[2] பஃபனின் உரையுடன் எட்மே -லூயிஸ் டாபென்டனின் மேற்பார்வையின் கீழ் தயாரிக்கப்பட்ட பிளாஞ்சஸ் என்லுமினீஸ் டி'ஹிஸ்டோயர் நேச்சர்ல்லில் பிரான்சுவா-நிக்கோலஸ் மார்டினெட்டால் பொறிக்கப்பட்ட கை வண்ண படத்தில் இப்பறவையும் விளக்கப்பட்டுள்ளது.[3] ஆனால் படங்களின் தலைப்பு அல்லது பப்பனின் விளக்கத்தில் கருமுதுகு மரங்கொத்தியின் அறிவியல் பெயர் சேர்க்கப்படவில்லை. ஆனால் 1783ஆம் ஆண்டில் இடச்சு இயற்கை ஆர்வலர் பீட்டர் போடார்ட் தனது பிளாஞ்சசு என்லுமினீசு பட்டியலில் பிகசு பெசுடிவசு என்ற இருசொல் பெயரை உருவாக்கினார்.[4] 1843ஆம் ஆண்டு இங்கிலாந்து விலங்கியல் வல்லுநர் எட்வர்ட் பிளைத் அறிமுகப்படுத்திய குரைசோகோலாப்ட்சு பேரினத்தில் கருமுதுகு மரங்கொத்தி இப்போது சேர்க்கப்பட்டுள்ளது.[5][6] இந்தப் பேரினப் பெயர் பண்டைக் கிரேக்க க்ருசோஸ் அதாவது "தங்கம்" மற்றும் கோலப்டேஸ் "உளிவிற்பவர்" என்று ஒருங்கிணைக்கிறது. பெஸ்டிவஸ் என்ற குறிப்பிட்ட பெயர் இலத்தீன் மொழியில் "பண்டிகை" அல்லது "மகிழ்ச்சியானது" என்பதாகும்.[7]
இச்சிற்றினத்தின் கீழ் இரண்டு துணையினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:[6]
- இந்திய கருமுதுகு மரங்கொத்தி கி. பெ. பெசுடிவசு (போடார்ட், 1783) - மத்திய மற்றும் தென் இந்தியா
- கி. பெ. டேனடுசு ரிப்லே, 1946 – இலங்கை
விளக்கம்
[தொகு]கருமுதுகு மரங்கொத்தி 29 செ.மீ. நீளம் வரை வளரக்கூடிய பெரிய சிற்றினமாகும். இது மரங்கொத்திகளுக்கான பொது வடிவத்தில் அமைந்துள்ளது. கருமுதுகு மரங்கொத்தியின் வெள்ளை பின்னங்கழுத்து பின்புறம் கீழே நீண்டுள்ளது. மேலும் கருப்பு தோள்பட்டை திட்டுகளும் வெள்ளை நிறத்தின் எல்லையில் ஆங்கில எழுத்தான V-வடிவத்தில் முதுகில் தொடர்கின்றன. மீதமுள்ள மேல் பகுதிகள் மற்றும் இறக்கைகள் தங்க மஞ்சள் நிறத்தில் இருக்கும். பிட்டம் மற்றும் வால் கருப்பு நிறத்திலும், மற்றும் கீழ்ப் பகுதிகள் இருண்ட அடையாளங்களுடன் வெண்மையானவை. தலையானது வெண்மை நிறத்தில் அடர் மீசைப் பட்டை மற்றும் கழுத்துப் பக்கவாட்டில் விரியும் கருப்புக் கண் இணைப்புடன் காணப்படும். மற்ற மரங்கொத்திகளைப் போலவே, இந்த சிற்றினமும் நேராகக் கூரான வால், மரத்தின் தண்டுகளுக்கு எதிராகத் தாங்கும் விதமாக அமைந்துள்ளது. கால்விரல்களில் இரண்டு முன்னோக்கியும், இரண்டு பின்னோக்கியும் உள்ளன. பூச்சிகளைப் பிடிக்க நீண்ட நாக்கு முன்னோக்கிச் செல்லும் வகையில் அமைந்துள்ளது.
வயது முதிர்ந்த ஆண் கருமுதுகு மரங்கொத்தி சிவப்பு கிரீடம் ஒன்றினை கொண்டுள்ளது. இத்திட்டு பெண் மரங்கொத்தியில் மஞ்சள் நிறத்தில் உள்ளது. இளம் பறவைகளில் இது மஞ்சள் நிறத்தில், மந்தமாகக் காணப்படும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2016). "Chrysocolaptes festivus". IUCN Red List of Threatened Species 2016: e.T22681522A929094002. https://www.iucnredlist.org/species/22681522/929094002. பார்த்த நாள்: 9 November 2021.
- ↑ Buffon, Georges-Louis Leclerc de (1780). "Le pic vert de Goa". Histoire Naturelle des Oiseaux (in பிரெஞ்சு). Vol. 13. Paris: De L'Imprimerie Royale. pp. 31–32.
- ↑ Buffon, Georges-Louis Leclerc de; Martinet, François-Nicolas; Daubenton, Edme-Louis; Daubenton, Louis-Jean-Marie (1765–1783). "Pic verd, de Goa". Planches Enluminées D'Histoire Naturelle. Vol. 7. Paris: De L'Imprimerie Royale. Plate 696.
- ↑ Boddaert, Pieter (1783). Table des planches enluminéez d'histoire naturelle de M. D'Aubenton : avec les denominations de M.M. de Buffon, Brisson, Edwards, Linnaeus et Latham, precedé d'une notice des principaux ouvrages zoologiques enluminés (in பிரெஞ்சு). Utrecht. p. 43, Number 696.
- ↑ Edward Blyth (1843). "Mr Blyth's monthly report for the December meeting, 1842, with addenda subsequently appended". Journal of the Asiatic Society of Bengal 12 Part 2 (143): 925–1011 [1004]. https://biodiversitylibrary.org/page/40060993.
- ↑ 6.0 6.1 Gill, Frank; Donsker, David, eds. (2019). "Woodpeckers". World Bird List Version 9.2. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 11 August 2019.
- ↑ Jobling, James A. (2010). The Helm Dictionary of Scientific Bird Names. London: Christopher Helm. pp. 105, 159. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4081-2501-4.