கருப்பு உப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கருப்பு உப்பு
கருப்பு உப்பு
Black Salt (crystals).jpg
கருப்பு உப்பின் பெரிய துண்டுகள்
மாற்றுப் பெயர்கள்கருப்பு உப்பு
பகுதிதெற்காசியாவின் இமயமலைப் பகுதி
Cookbook: கருப்பு உப்பு  Media: கருப்பு உப்பு

கருப்பு உப்பு; என்பது தெற்காசியாவில் பயன்படுத்தப்படும் காரமான, கடுமையான கந்தக நெடியுடன் கூடிய சூளையில் எரிக்கப்பட்ட பாறை உப்பு ஆகும். இது "இமயமலை கருப்பு உப்பு", சுலேமானி உப்பு, பிட் லோபன், கலாநூன் அல்லது படாலூன் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. இமயமலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெட்டப்பட்ட சுரங்கங்களில் கிடைக்கும் பாறை உப்புகளிலிருந்து கருப்பு உப்பு தயாரிக்கப்படுகிறது.

இந்த உப்பின் சுவை பெரும்பாலும் சோடியம் குளோரைடுகளால் ஆனது, மேலும் இதிலுள்ள பல கூறுகள்இந்த உப்புக்கு அதன் நிறத்தையும் வாசனையையும் தருகின்றன. இதன் காரமான நெடியுடைய வாசனைக்கு, முக்கியமாக அதன் கந்தக உள்ளடக்கம் காரணமாகும். இந்தக் கனிமத்தில் கிரேகைட் (Fe 3 S 4, இரும்பு (II, III) சல்பைடு ) இருப்பதால், இது பழுப்பு நிற இளஞ்சிவப்பு முதல் இருண்ட ஊதாநிற, ஒளி ஊடுருவக்கூடிய படிகங்களை முழுவதுமாக உருவாக்குகிறது. தூளாக அரைக்கப்ட்ட அதன் நிறம் ஊதா முதல் இளஞ்சிவப்பு வரை இருக்கும்.

உப்புகருப்பு ஆயுர்வேதத்தில் உயர்வாக மதிக்கப்படுகிறது. அதன் உணரப்பட்ட மருத்துவ குணங்களால் ஆயுர்வேத சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.[1][2]

உற்பத்தி[தொகு]

கருப்பு உப்பை உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருள் முதலில் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் உள்ள இமயமலை உப்பு எல்லைகளின் சில இடங்களில் சுரங்கங்களிலில் வெட்டியெடுக்கப்பட்ட இயற்கையான பாறை உப்புகளிலிருந்து பெறப்பட்டது,[3][4] அல்லது சம்பர் உப்பு ஏரியின் வட இந்திய உப்பு ஏரிகளில் இருந்து அல்லது ராஜஸ்தான் மாநிலத்தின் தித்வானா மற்றும் நேபாளத்தின் முஸ்டாங் மாவட்டம் ஆகிய இடங்களில் இருந்து பெறப்பட்டது.[5]

பாரம்பரியமாக, உப்பு அதன் ஒப்பீட்டளவில் நிறமற்ற மூல இயற்கை வடிவத்திலிருந்து இருண்ட நிறமாக மாற்றப்படுகிறது. இந்த மூல உப்பில் இயற்கையாகக் கலந்துள்ள சோடியம் சல்பேட் உப்புகளை கடுமையான நெடியுடைய ஐதரசன் சல்பைடு மற்றும் சோடியம் சல்பைடாக மாற்றும் ஓர் ஒடுக்க வேதியல் செயல்பாடுகளினால் கருப்பு உப்பாக மாற்றப்பட்டு பின்பு வணிகரீதியாக கருப்பு உப்பு என விற்கப்படுகிறது.[6]

இந்த மூல உப்புக்கள் வேதிவினையால் மாற்றப்பட்டு இதனுடன் கரி, சிறிதளவு கடுக்காய், நெல்லிக்காய், ஒரு பீங்கான் ஜாடியில் கற்று புகாமல் அடைத்து வைக்கப்பட்டு, இதனுடன் கரி சேர்த்து மேலும் சிறிய அளவில் சேர்த்து கடுக்காய், நெல்லிக்காய்,தான்றிக்காய், கருவேலம் பட்டை, அல்லது நேட்ரன் எனப்படும் சோடியம் சல்பைடு ஆகியவை சேக்கப்பட்டு ஓர் உலை அல்லது சூளையில் 24 மணி நேரம் எரிக்கப்படுகிறது .[5] எரிக்கப்பட்ட உப்பு உருகும் பொழுது வேதியியல் எதிர்வினை ஏற்படுகிறது, பின்னர் உப்பு குளிர்ந்து, சேமிக்கப்பட்டு, சிறிது நாள் வைக்கப்பட்டு பின் விற்பனைக்கு வருகிறது.[3][7] ஹரியானாவின் ஹிசார் மாவட்டத்தை உற்பத்தியை மையமாகக் கொண்டு வட இந்தியாவில் இந்த முறையில் கருப்பு உப்பு தயாரிக்கப்படுகிறது. இந்த உப்பு படிகங்கள் பொதுவாகக் கருப்பு நிறத்தில் இருக்கும். நன்கு தூளாக அரைக்கபப்டும்பொழ்து இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.

தேவையான சேர்மங்களுடன் இயற்கையான உப்புகளிலிருந்து கருப்பு உப்பு தயாரிக்க முடியும் என்றாலும், இப்போது அதைப் பொதுவாக செயற்கையான முறையில் உற்பத்தி செய்வதே நடைபெறுகிறது. சிறிய அளவிலான சோடியம் சல்பேட், சோடியம் பைசல்பேட் மற்றும் ஃபெரிக் சல்பேட் ஆகியவற்றுடன் கலந்த சாதாரண சோடியம் குளோரைடை இணைப்பதன் மூலம் இது செயற்கை முறையில் செய்யப்படுகிறது, பின்னர் இது ஒரு உலையில் எரியூட்டப்படும் வேதியல் வினை மூலம் கரியுடன் சேர்ந்து இதன் வேதியியல் பண்பு குறைக்கப்படுகிறது. சோடியம் குளோரைடு, 5-10% சோடியம் கார்பனேட், சோடியம் சல்பேட் மற்றும் சில சர்க்கரை ஆகியவற்றைக் குறைப்பதன் மூலம் ஒத்த தயாரிப்புகளை உருவாக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. Moorjani, Lachu (2005), Ajanta: Regional feast of India, Gibbs Smith, p. 22, ISBN 978-1-58685-777-6
  2. Case, Frances (6 June 2008), 1001 Foods You Must Eat Before You Die, Cassell Illustrated, ISBN 978-1-84403-612-7
  3. 3.0 3.1 Bitterman, Mark (2010), Salted:A Manifesto on the World's Most Essential Mineral, with Recipes, Ten Speed Press, pp. 166–167, ISBN 978-1580082624
  4. Vorkommen von Schwefelwasserstoff in "Schwarzsalz" (PDF), Bundesinstitut für Risikobewertung (BfR), 2003-08-25
  5. 5.0 5.1 Chandrashekhar, D (1977-02-22), Maqsood Mohammad vs The State Of Uttar Pradesh And Anr. on 22 February 1977, Allahabad High Court
  6. 6.0 6.1 Chandra, S (1970-02-18), Commissioner, Sales Tax vs Balwant Singh Jag Roshan Lal on 18 February 1970, Allahabad High Court
  7. Sher Ali Tiwana (2016-12-05), How black salt is made on big scale, retrieved 2019-02-12
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருப்பு_உப்பு&oldid=2895037" இருந்து மீள்விக்கப்பட்டது