இந்துப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இமயமலை உப்பு எனும் இந்துப்பு (வெள்ளை நிறம்)
உப்பு மலைத்தொடர், பஞ்சாப், பாகிஸ்தான்
முகலாயர் காலத்திலிருந்து இந்துப்பு எடுக்கப்படும் கேவ்ரா உப்புச் சுரங்கம், பாகிஸ்தான்

இந்துப்பு (About this soundஒலிப்பு ) அல்லது இமயமலை உப்பு (Himalayan salt) என்பது ஒரு வகை பாறை உப்பு ஆகும். இவ்வகை உப்பு இந்தியா மற்றும் பாக்கித்தான் நாட்டின் பஞ்சாப் பகுதிகளில் வெட்டி எடுக்கப்படுகிறது. இவ்வுப்பை தமிழில் இந்துப்பு என்பர். பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள உப்பு மலைத்தொடரில் இந்துப்பு வெட்டி எடுக்கப்படுகிறது. இமயமலைலிருந்து 310 கி மீ தொலவிலும், லாகூரிலிருந்து 260 கி மீ தொலைவிலும், அமிர்தசரசிலிருந்து 298 கி மீ தொலைவிலும் உள்ள உப்பு மலைத் தொடரில் இந்துப்பு வெட்டி எடுக்கப்படுகிறது.[1]

இந்தியாவில் இராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதியில் இந்துப்பு, சுரங்கங்களிலிருந்து வெட்டி எடுக்கப்படுகிறது.

இந்துப்பில் உள்ள கனிமங்கள்[தொகு]

இமயமலை உப்பு எனப்படும் இந்துப்பில், சாதாரண உப்பில் உள்ள சோடியம் குளோரைடுடன் (95-98%) பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், சல்பர், புளோரைடு, அயோடின் கனிமங்களும் மற்றும் சில கனிமங்களும் (2-4%) கொண்டுள்ளது (2-4%).[2]

நிறம்[தொகு]

படிக வடிவத்தில் உள்ள இந்துப்பு குறைவான வெண்மை, பிங்க், செம்பழுப்பு, செந்நிறத்திலும் கிடைக்கிறது.[3][4]

பயன்பாடுகள்[தொகு]

சமையல் பயன்பாடு[தொகு]

வட இந்தியா மற்றும் பாகிஸ்தானில் சாதாரண கல் உப்பிற்கு மாற்றாக இந்துப்பை அன்றாட சமையலுக்கு பயன்படுத்துகின்றனர்.

மருத்துவப் பயன்பாடு[தொகு]

சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்துப்பு வாதம், பித்தம் மற்றும் கபம் போன்ற நோய்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. கல் உப்பை விட இந்துப்பு மருத்துவ குணம் நிறைந்தது என்ற கூற்றை இது வரை அறிவியல் ஆய்வுகள் மூலம் நிருபிக்கப்படவில்லை.[5][6]

படக்காட்சிகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்துப்பு&oldid=2702692" இருந்து மீள்விக்கப்பட்டது