கருங்கால் கானாங்கோழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருங்கால் கானாங்கோழி
Slaty-legged crake
இராலினா யூரிசோனாய்டுசு மான்கான், மகாராட்டிராவில்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: குருயிபார்மிசு
குடும்பம்: இராலிடே
பேரினம்: இராலினா
இனம்: இ. யூரிசோனாய்டுசு
இருசொற் பெயரீடு
இராலினா யூரிசோனாய்டுசு
இலாப்ரெசுனாயே, 1845
வேறு பெயர்கள்
  • இராலினா யூரிசோனாய்டுசு
  • இராலினா மினகாசா

கருங்கால் காணான்கோழி (Slaty-legged crake) என்பது ரெயில் மற்றும் கிரேக் குடும்பத்தைச் சேர்ந்த நீர்பறவையான ஒரு காணான்கோழி ஆகும்.

பரவலும் வாழ்விடமும்[தொகு]

இந்தியா, பாக்கித்தான், இலங்கையிலிருந்து பிலிப்பீன்சு மற்றும் இந்தோனேசியா வரை தெற்காசியா முழுவதும் நன்கு மரங்கள் நிறைந்த சதுப்பு நிலங்கள் மற்றும் ஈரமான பகுதிகள் இதன் இதன் இனப்பெருக்க வாழ்விடம் ஆகும். இப்பறவைகள் முக்கியமாக இவற்றின் வாழ்விட எல்லை முழுவதும் நிரந்தரமாக வசிப்பவையாக உள்ளன, என்றாலும் வடக்கிலிருந்து சில பறவைகள் குளிர்காலத்தில் மேலும் தெற்கு நோக்கி வலசை வருகின்றன.

விளக்கம்[தொகு]

கருக்கால் காணான்கோழியானது காடைக்கும் கௌதாரிக்கும் இடைப்பட்ட அளவில் சுமார் 25 செ.மீ நீளம் உள்ளது. இதன் உடல் பக்கவாட்டில் தட்டையாக இருக்கும். இந்த உடல் அமைப்பு மரங்கீழ் வளர்வன வழியாக எளிதாகச் செல்ல வசதியாக உள்ளது. இது நீண்ட கால்விரல்களும் குறுகிய வாலும் கொண்டது. முதுகு வண்ணமயமான பழுப்பு நிறமும், தலை, கழுத்து, மார்பு, பக்கவாட்டு போன்றவை சாக்லைட் பழுப்புத்திலும், வயிறும் வாலடியும் தெளிவான வெள்ளையும் கறுப்புமான வளையங்கள் கொண்டதாக இருக்கும். தொண்டை வெண்மையாகவும், அலகின் அடிப்பகுதி பசுமையாகவும், முனை ஆழ்ந்த பழுப்பாகவும் இருக்கும். விழிபடலம் இரத்த சிவப்பாக இருக்கும். கால்கள் சிலேட் நிறத்தில் இருக்கும். பாலினங்களில் வேறுபாடு இல்லை. குஞ்சுகளின் தொப்பையும் தொண்டையும் வெள்ளையாக இருந்தாலும், மேலேயும் கீழேயும் அடர் பழுப்பு நிறத்தில் இருக்கும்.

நடத்தை[தொகு]

கருங்கால் காணான்கோழிகள் இரவு நேரத்திலேயே வெளிப்பட்டு இரை தேடும் பழக்கம் கொண்டவை. சிறுசந்தடி ஏற்பட்டாலும் புதர்களுக்குள் மறைந்துவிடும். இவை சேற்றில் அல்லது ஆழமற்ற நீரில் தங்கள் அலகுகளில் துழாவியபடி இருக்கும். மேலும் பார்வையில் படும் உணவையும் உண்ணுகின்றன. இவை நீர்த் தாவரங்களின் விதைகள், நத்தை, பூச்சிகளை உணவாக கொள்கின்றன. இவை தரையில் அல்லது சிறிய புதரில் உலர்வான இடத்தில் 4-8 முட்டைகளை இடுகின்றன. தென்னிந்தியாவில் கேரளத்தின் நிலம்பூரில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், இதன் அடைகாக்கும் காலம் சுமார் 20 நாட்கள் என்று தெரியவந்தது. [2]

மேற்கோள்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Rallina eurizonoides
என்பதின் ஊடகங்கள் உள்ளன.