உள்ளடக்கத்துக்குச் செல்

கஞ்சக் கருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கஞ்சக் கருவிகள் என்பது வெண்கலம் அல்லது ஐம்பொன்னால் வார்க்கப்படும் தாளம், கைமணி, சேகண்டி முதலியவைகள் ஆகும்.[1]

கஞ்சம் என்றால் வெண்கலம் என்று பொருள். தூய வெண்கலத்தால் தயாரிக்கப்படும் கஞ்சக்கருவிகளை, தகுந்த இலக்கண வரம்பறிந்து மிக நுணுக்கமாக இசைக்க வேண்டும்.

வகைகள்

[தொகு]
  • தாளம் - கஞ்சக்கருவிகளில் முதன்மையானது. இது சிங்கி, மணி, ஜால்ரா எனும் பெயர்களால் அழைக்கப்படுகிறது. நாகஸ்வரம், மிருதங்கம், கடம், கஞ்சிரா, கொன்னக்கோல் போன்ற லய வாத்தியங்களையும் தாளம் தான் கட்டுப்படுத்துகிறது. ஓதுவார்கள், நட்டுவனார்கள், நாட்டுப்புற பாடகர்கள் போன்றோர் தாளக்கருவியை பயன்படுத்துகின்றனர்.
  • சேகண்டி: - கோயில்களில் குறிப்பாக சிவன் கோயில்களில் பூஜை நேரங்களிலும்; சுவாமி புறப்பாட்டின் போதும் சேகண்டி, சங்கொலியுடன் ஒலிக்கப்படுகிறது. மேலும் இறப்பு நிகழ்வுகளிலும் சேகண்டி ஒலி எழுப்பப்படுகிறது.
  • கைமணி : - அனைத்துக் கோயில்களிலும்; வீடுகளிலும் இறைவனை பூசிக்கும் போது ஒலி எழுப்பப் பயன்படுகிறது. கோயில்களில் பூசை நேரத்தை உணர்த்த எழுப்பப்படும் பெரிய வெண்கல மணியை, கைப்பிடிக்குள் அடங்கும்படி தயாரிப்பது கைமணியாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "கஞ்சக் கருவிகள்". Archived from the original on 2016-05-09. Retrieved 2016-08-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கஞ்சக்_கருவி&oldid=4482963" இலிருந்து மீள்விக்கப்பட்டது