ஒருக் தெமூர் கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒருக் தெமூர் கான்
月魯帖木兒汗
ᠶᠣᠯᠣ ᠲᠡᠮᠦᠷ ᠬᠠᠭᠠᠨ
மங்கோலியர்களின் ககான்
வடக்கு யுவான் அரசமரபின் ககான்
ஆட்சி1402–1408
முடிசூட்டு விழா1402
முன்னிருந்தவர்குண் தெமூர் கான்
பின்வந்தவர்ஒல்ஜெயி தெமூர் கான்
மரபுதோர்குது அல்லது போர்சிசினின் ஒக்தாயி குடும்பம்(?)
அரச குலம்வடக்கு யுவான் அரசமரபு
பிறப்பு1379
இறப்பு1408 (அகவை 28–29)

ஒருக் தெமூர் கான் (மொங்கோலியம்: Ёлтөмөр хаан ᠶᠣᠯᠣ ᠲᠡᠮᠦᠷ ᠬᠠᠭᠠᠨ; மரபுவழிச் சீனம்: 月魯帖木兒汗[1]) (1379–1408) என்பவர் வடக்கு யுவான் அரசமரபின் ஒரு கானாவார். இவர் 1402 - 1408இல் ஆட்சி புரிந்தார். தைமூரிய அரசமரபின் தொகுக்கப்பட்ட வரலாற்றுப் பதிவுகளில் ஒருக் தெமூர் (பாரசீக மொழி: اورک تیمور‎) என்பவர் ஒக்தாயி கானின் ஒரு வழித்தோன்றல் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.[2] இவர் உகேச்சி காசிகா அல்லது குலிச்சி[3] (சீனம்: 鬼力赤; மொங்கோலியம்: ᠭᠤᠢᠷᠠᠨᠴᠢ γuyilinči[4]), என்றும் ஒருவேளை அறியப்பட்டு இருந்திருக்கலாம். துங்குசிக் மொழிகளில் "காசிகா" என்பதன் பொருள் இளவரசர் என்பதாகும். இவர் ஒயிரட்களின் ஒரு தலைவர் ஆவார். குறிப்பாக ஒயிரட்களின் தோர்கூத் இனத்தின் தலைவர் ஆவார். உகேச்சி காசிகா என்பவர் ஒருக் தெமூராக இல்லாதிருக்கவும் வாய்ப்பு இருந்துள்ளது. கிழக்கு மங்கோலியர்களின் ஒரு கைப்பாவை கானாக ஒருக் தெமூரை ஆக்குவதற்கு ஆதரவளித்த ஓர் அனுகூலம் பெற்ற ஒயிரட் மந்திரியாக இருந்திருக்க வாய்ப்பு இருந்துள்ளது.[5] ஒருக் தெமூர் அரிக் போகே அல்லது செங்கிஸ் கானின் தம்பியான கசர் அல்லது தெமுகேயின் வழித் தோன்றலாக இருந்திருக்க வாய்ப்புள்ளது.[6] இவ்வாறாக இன்றும் இவர் ஓர் ஒயிரட் இனத்தவரா அல்லது செங்கிஸ் கானின் வழித்தோன்றலா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

எல்பெக் நிகுலேசுக்சி கான் பாகமுவின் (பத்லை, மகமு, முகமுது) தந்தை தைபூவைத் தவறுதலாக மரண தண்டனைக்கு உட்படுத்தியதற்குப் பிறகு பாகமுவை  நான்கு ஒயிரட்களின் தலைவராக நியமித்தார். ககானின் முடிவு ஒயிரட் தலைவர் குலிச்சியை ஏமாற்றம் அடையச் செய்தது. இக்கால கட்டத்தில் மட்டுமே மிங் அரசமரபால் குலிச்சி குறிப்பிடப்பட்டுள்ளார். குலிச்சியும், பகாமுவும் எல்பெக்கைக் கொல்லத் திட்டம் அமைத்தனர். வெற்றியும் பெற்றனர். இறந்த ககானின் குடும்பம் மற்றும் உடைமைகளைக் குலிச்சி கைப்பற்றினார். 1402இல் குலிச்சி புதிய ககானாக வந்ததாக மிங் வரலாறு பதிவு செய்துள்ளது. குப்லாயால் 1271இல் அறிவிக்கப்பட்ட "மகா யுவான்" (大元) அரச குடும்பப் பட்டத்தை ஒழித்தார். எனினும், 1388இலிலேயே ஆன் பாணி பட்டமானது ஏற்கனவே நீக்கப்பட்டிருந்தது.[7]

ஆட்சி[தொகு]

கிழக்கு மங்கோலியர்களின் சிங்சாங்காக அசுத் இனத்தின் அருக்தையைக் குலிச்சி நியமித்தார். மிங் வரலாற்றுப் பதிவுகளின் படி, இவர் ஒரு "தாதரைக்" (கிழக்கு மங்கோலியர்) கானாக முன்மொழிந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சீனாவின் யோங்லே பேரரசர் குலிச்சியுடனும், அவரது முதன்மை ஆதரவாளரான அருக்தையுடனும் மிங் சீனத் திறை செலுத்தும் அமைப்புக்குள் ஒரு உறவு முறையை நிறுவத் தொடர்பு முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், குலிச்சியும் அருக்தையும் இதை நிராகரித்தனர்.[8] இவர்கள் அமியின் இளவரசரான என்கே தெமூரையும் ஒரு வேளை விடம் வைத்துக் கொன்றனர். என்கே தெமூர் மிங்குடன் கூட்டணி வைத்து இருந்தார்.[8] எனினும், போர்சிசின் மன்னனான ஒல்ஜெயி தெமூர் கானால் குலிச்சி 1403இல் தோற்கடிக்கப்பட்டார். 1408இல் இவரது முந்தைய சிங்சாங்கும், நோயனுமான அருக்தைக்கும் இவருக்கும் இடையில் ஒரு சண்டை ஏற்பட்டதற்குப் பிறகு குலிச்சியை அருக்தை கொன்றார். குலிச்சிக்குப் பிறகு இவரது மகன் எசேகு (இ. 1425) ஆட்சிக்கு வந்தார்.

உசாத்துணை[தொகு]

  1. 宝音德力根, Buyandelger (2000). "15世紀中葉前的北元可汗世系及政局 (Genealogy and political situation of the Northern Yuan Khans of the mid-15th century)". 蒙古史研究 (Mongolian History Research) 6: 132–136. 
  2. C. P. Atwood-Encyclopedia of Mongolia and the Mongol Empire, list of heads of Mongolia
  3. 東京外国語大学. アジア・アフリカ言語文化研究所-アジア・アフリカ言語文化研究, Issues 27–30, p. 152.
  4. 薄音湖 (1987年). "关于北元汗系". 内蒙古大学学报 (第三期): 47. "Explain that Guilichi should be சிறப்புப்பெயர் rather than his real name, meaning "பிச்சையெடுத்தல்" in Mongolian". 
  5. 岡田英弘『モンゴル帝国から大清帝国へ』(藤原書店 p.368)
  6. List of Mongolian rulers
  7. 井上治 (2002). ホトクタイ=セチェン=ホンタイジの研究. 風間書房. 
  8. 8.0 8.1 Ed. Denis Crispin Twitchett, John King Fairbank-The Cambridge history of China, Volume 2; Volume 8, p. 227.
  • René Grousset - Empire of Steppes
  • Ж.Бор - Монгол хийгээд Евразийн дипломат шаштир БОТЬ 3
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர்
குண் தெமூர் கான்
வடக்கு யுவானின் ககான்
1402–1408
பின்னர்
ஒல்ஜெயி தெமூர் கான்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒருக்_தெமூர்_கான்&oldid=3863555" இலிருந்து மீள்விக்கப்பட்டது