ஒண்டுராசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
AswnBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 19:35, 21 ஏப்பிரல் 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கிஇணைப்பு category [[:Category:ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்|ஐக்கிய நாடுகள் சபையின் உறுப...)
ஒண்டுராசு
Republic of Honduras
República de Honduras
கொடி of ஒண்டுராசின்
கொடி
சின்னம் of ஒண்டுராசின்
சின்னம்
குறிக்கோள்: 
நாட்டுப்பண்: "ஒண்டுராசின் நாட்டுப்பண்"
ஒண்டுராசின்அமைவிடம்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
டெகுசிகல்பா
ஆட்சி மொழி(கள்)எசுப்பானியம்
இனக் குழுகள்
([1])
மக்கள்
  • ஒண்டூரான்
  • கத்திராச்சோ
அரசாங்கம்அரசுத்தலைவர் முறை
• அரசுத்தலைவர்
குவான் ஒர்லாந்தோ எர்னான்டெசு
• தேசிய காங்கிரசு தலைவர்
மவுரீசியோ ஒலிவா
சட்டமன்றம்தேசிய காங்கிரசு
விடுதலை
• எசுப்பானியாவிடம்
இருந்து அறிவிப்புb
15 செப்டம்பர் 1821
• 1வது மெக்சிக்கோ பேரரசிடம்
இருந்து விடுதலை அறிவிப்பு
1 சூலை 1823
• ஒண்டுராசாக அறிவிப்பு
(நடு அமெரிக்க கூட்டுக் குடியரசிடம் இருந்து)
5 நவம்பர் 1838
பரப்பு
• மொத்தம்
112,492 km2 (43,433 sq mi) (102-ஆம்)
மக்கள் தொகை
• 2010 மதிப்பிடு
8,249,574 (94-ஆம்)
• 2007 கணக்கெடுப்பு
7,529,403
• அடர்த்தி
64/km2 (165.8/sq mi) (128-ஆம்)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2014 மதிப்பீடு
• மொத்தம்
$40.983 பில்.[2]
• தலைவிகிதம்
$4,959[2]
மொ.உ.உ. (பெயரளவு)2014 மதிப்பீடு
• மொத்தம்
$19.567 பில்.[2]
• தலைவிகிதம்
$2,368[2]
ஜினி (1992–2007)55.3[3]
உயர்
மமேசு (2014) 0.606[4]
மத்திமம் · 131st
நாணயம்லெம்பிரா (HNL)
நேர வலயம்ஒ.அ.நே−6 (நநேவ)
வாகனம் செலுத்தல்வலது
அழைப்புக்குறி+504
இணையக் குறி.hn
  1. ஐரோப்பிய, அமெரிக்க இந்தியக் கலப்பு
  2. நடு அமெரிக்கக் கூட்டுக் குடியரசின் பகுதியாக

ஒண்டுராசு (Honduras, (/hɒnˈdʊərəs/ (கேட்க); எசுப்பானியம்: [onˈduɾas]), அதிகாரபூர்வமாக ஒண்டுராசு குடியரசு (Republic of Honduras), என்பது நடு அமெரிக்காவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும். இது சில வேளைகளில் பிரித்தானிய ஒண்டுராசிடம் இருந்து வேறுபடுத்துவதற்காக எசுப்பானிய ஒண்டுராசு எனவும் அழைக்கப்பட்டது[5] இதன் எல்லைகளாக மேற்கே குவாத்தமாலா, தென்மேற்கே எல் சால்வடோர், தென்கிழக்கே நிக்கராகுவா, தெற்கே பொன்சேகா வளைகுடாவில் பசிபிக் பெருங்கடல், வடக்கே ஒண்டுராசு வளைகுடாவில் கரிபியக் கடல் ஆகியன அமைந்துள்ளன.

ஒண்டுராசு பதினாறாம் நூற்றாண்டில் எசுப்பானியரின் குடியேற்றம் ஆரம்பமாவதற்கு முன்னர் குறிப்பாக மாயா போன்ற பல முக்கிய இடையமெரிக்கப் பண்பாடுகளைக் கொண்டிருந்த நாடாகும். எசுப்பானியர்கள் இங்கு உரோமைக் கத்தோலிக்கத்தை அறிமுகப்படுத்தியதில் இருந்து, இது பெரும்பான்மையாக எசுப்பானிய மொழி பேசும் நாடாக உள்ளது. அத்துடன் பழங்குடியினரின் கலாசாரங்களுடன் கலந்த பல பண்பாடுகள் வழக்கிலுள்ளன. ஒண்டுராசு 1821 இல் விடுதலை பெற்று, குடியரசான போதிலும், மேற்கு அரைக்கோளத்தில் மிகவும் வறிய நிலையில் உள்ள நாடுகளில் ஒன்றாக உள்ளது. ஒண்டுராசு உலகின் மிக அதிகமான மனிதக்கொலைகள் நடக்கும் நாடுகளில் முன்னிலையில் உள்ளது.[6]

ஒண்டுராசு 112,492 கிமீ2 பரப்பளவைக் கொண்டது. இதன் மக்கள்தொகை 8 மில்லியனுக்கும் அதிகமானதாகும். இங்கு கனிமம், காப்பி, வெப்பமண்டலப் பழவகைகள், கரும்பு உட்படப் பல இயற்கை வளங்கள் நிறைந்துள்ளன. அத்துடன் இங்கு துணித் தொழிற்சாலைகள் பன்னாட்டு வணிகத்தில் ஈடுபட்டுள்ளன.

ஹொண்டுராஸ் வரைபடம்

மேற்கோள்கள்

  1. "Honduras". த வேர்ல்டு ஃபக்ட்புக். 5 சனவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-02-09.
  2. 2.0 2.1 2.2 2.3 "Honduras". அனைத்துலக நாணய நிதியம். பார்க்கப்பட்ட நாள் 18 October 2014.
  3. 1992–2007: "Human Development Report 2009 – M Economy and inequality – Gini index". Human Development Report Office, United Nations Development Programme. Archived from the original on 17 October 2009. பார்க்கப்பட்ட நாள் 17 October 2009. {{cite web}}: Unknown parameter |deadurl= ignored (help)
  4. "Human Development Report 2015" (PDF). ஐக்கிய நாடுகள் அவை. 2015. பார்க்கப்பட்ட நாள் 15 December 2015.
  5. "Archeological Investigations in the Bay Islands, Spanish Honduras". Aboututila.com. பார்க்கப்பட்ட நாள் 27 சூன் 2010.
  6. Parkinson, Charles (21 ஏப்ரல் 2014). "Latin America is World's Most Violent Region: UN". InSight Crime. பார்க்கப்பட்ட நாள் 2016-02-09. {{cite web}}: Check date values in: |date= (help)

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒண்டுராசு&oldid=2261571" இலிருந்து மீள்விக்கப்பட்டது