உள்ளடக்கத்துக்குச் செல்

ஐன் துபாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐன் துபாய் (Arabic: عين دبي‎) என்பது ஐக்கிய அரபு எமிரேட்ஸின், துபாயில், துபாய் மெரினாவுக்கு அருகிலுள்ள ப்ளூவாட்டர்ஸ் தீவில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய மற்றும் உயரமான ஒரு பெரும் இராட்டினம் (சக்கரம்) ஆகும்.

அமைப்பு

[தொகு]

ஐன் துபாயின் உயரம் 250 மீட்டர் (820 அடி), துபாய் கண் அல்லதுதுபாய் -1 என்று பெயரிடப்பட்டடு பிப்ரவரி 2013 இல் அறிவிக்கப்பட்டது.[1]) ஹூண்டாய் பொறியியல் கட்டுமான நிறுவனம் மற்றும் ஸ்டார்னெத் பொறியியல் நிறுவனமும் முதன்மை வடிவமைப்பு மற்றும் கட்டுமான ஒப்பந்ததாரர்களாக நியமிக்கப்பட்டனர்.[2],[2][3] கட்டுமானம் மே 2015 இல் தொடங்கியது, அக்டோபர் 20, 2020 க்கு எக்ஸ்போ 2020 உடன் இணைந்து திறப்பதற்க்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் உலகளாவிய கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக தாமதமானது.[4]

உயர சாதனை

[தொகு]

இதன் (ஐன் துபாய்) பணிகள் நிறைவடையும் போது, தற்போதைய உலகின் மிக உயரமான இராட்டினம் (சக்கரத்தை) விட 82.4 மீ (270 அடி) உயரமாக இருக்கும், தற்போதைய உலகின் மிக உயரமான இராட்டினம் (சக்கரம்) அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் மார்ச் 2014 இல் திறக்கப்பட்டது, இது 167.6 மீ (550 அடி) ஆகும்.[5]

பயணிகள் எண்ணிக்கை

[தொகு]

இந்த சக்கரத்தில் 48 பெட்டிகளில் தலா 10 பயணிகள் வரை ஒவ்வொரு பெட்டியிலும் ஏற்றிச் செல்ல முடியும், இதிலிருந்து துபாய் மெரினா மற்றும் பூர்ஜ் அல் அராப், பாம் ஜுமேரா மற்றும் புர்ஜ் கலிஃபா போன்ற இடங்களை பார்க்க முடியும்.[6],[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Ain Dubai is the new name for Dubai-I – update". Time Out Dubai. 11 July 2016. பார்க்கப்பட்ட நாள் 12 July 2016.
  2. 2.0 2.1 "Dubai plans to outdo Staten Island in race for world's biggest Ferris wheel". www.nydailynews.com. New York Daily News. Archived from the original on 11 ஏப்ரல் 2020. பார்க்கப்பட்ட நாள் 4 October 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Dubai to build the tallest observation wheel". Travel. CNN. பார்க்கப்பட்ட நாள் 4 October 2018.
  4. Bhatia, Nehi (June 7, 2019). "Hyundai E&C awards Ain Dubai EPCI subcontract to France's Poma". ConstructionWeek. https://www.constructionweekonline.com/projects-tenders/241703-hyundai-ec-awards-ain-dubai-epci-subcontract-to-frances-poma. 
  5. Trejos, Nancy. "World's tallest Ferris wheel opens in Vegas". USA Today. Knight Ridder. பார்க்கப்பட்ட நாள் 31 March 2014.
  6. "Dh6b tourism project in Dubai unveiled". Gulf News. பார்க்கப்பட்ட நாள் 18 February 2013.
  7. "உலகின் மிக் உயரமான இராட்டின சக்கரம்". Gulf News. பார்க்கப்பட்ட நாள் 18 February 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐன்_துபாய்&oldid=3928342" இலிருந்து மீள்விக்கப்பட்டது