ஊசிவால் கோரை உள்ளான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஊசிவால் கோரை உள்ளான்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
இசுகோலோபாசிடே
பேரினம்:
கல்லினாகோ
இனம்:
G. stenura
இருசொற் பெயரீடு
Gallinago stenura
(போனாபர்தி, 1831)
வேறு பெயர்கள்

Scolopax stenura போனாபர்தி, 1831

ஊசிவால் கோரை உள்ளான் தலை மற்றும் அலகு

ஊசிவால் கோரை உள்ளான் (Pin-tailed snipe) அல்லது ஊசிவால் உள்ளான் (கல்லினாகோ டெனுரா) என்பது ஸ்கோலோபாசிடே, மண்கொத்தி குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும்.

பரவல்[தொகு]

இது உருசியாவின் வடக்கு பகுதியில் இனப்பெருக்கம் செய்கிறது. தெற்காசியாவில் இனப்பெருக்கம் செய்யாத பருவத்தை பாக்கித்தானிலிருந்து இந்தோனேசியா வரை கழிக்கின்றது. இது தென்னிந்தியா, இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பெரும்பகுதியில் மிகவும் பொதுவான புலம்பெயரும் உள்ளான் ஆகும். இது வடமேற்கு மற்றும் வடக்கு ஆத்திரேலியாவிற்கும், கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள கென்யாவிற்கும் அலைந்து திரிகிறது.

வாழ்விடம்[தொகு]

இதன் இனப்பெருக்க வாழ்விடம் ஆர்க்டிக் மற்றும் போரியல் உருசியாவில் ஈரமான சதுப்புநிலங்கள் மற்றும் டன்ட்ரா ஆகும். இனப்பெருக்கம் செய்யாத காலத்தில் இப்பறவைகள் பெரும்பாலும் விசிறிவால் உள்ளானுடன் பல்வேறு ஈரநிலங்களைப் பயன்படுத்துகின்றன. ஆனால் இவற்றின் உறவினரை விட வறண்ட வாழ்விடங்களிலும் காணப்படலாம். இவை தரையில் நன்கு மறைவான இடத்தில் கூடு கட்டுகின்றன.

இந்தப் பறவைகள் சேறு அல்லது மென்மையான மண்ணில் இரை தேடுகின்றன. பார்வையால் உணவைப் பறித்து எடுக்கின்றன. இவை பூச்சிகள் மற்றும் மண்புழுக்களை முக்கியமாகச் சாப்பிடுகின்றன. ஆனால் சில தாவர பொருட்களையும் சாப்பிடுகின்றன.

விளக்கம்[தொகு]

ஊசிவால் கோரை உள்ளான் 25-27 செ.மீ. நீளமுள்ள பறவை. இதன் நீண்ட அலகும் நீண்ட வாலும் விசிறிவால் உள்ளானைப் போன்றது. முதிர்ச்சியடைந்த பறவைகள் குறுகிய பச்சை-சாம்பல் கால்கள் மற்றும் நீண்ட நேரான இருண்ட அலகினைக் கொண்டிருக்கும். உடல் மேல் பகுதி பழுப்பு நிறத்தில் உள்ளது. இவற்றின் முதுகில் நுரை நிறத்தில் கோடுகள் உள்ளன. இக்கோடுகள் நிறைந்த மார்பகம் மற்றும் வெள்ளை வயிற்றுடன் கீழ்ப் பகுதி வெளிர் நிறத்தில் உள்ளன. இவை கண்ணின் வழியாக இருண்ட பட்டையைக் கொண்டுள்ளன. இதன் மேல் மற்றும் கீழ் ஒளிர் நிறக் கோடுகள் உள்ளன. பாலினங்கள் ஒரே மாதிரியானவை. மேலும் முதிர்ச்சியடையாத நிலையில் இறகுகளில் சில வேறுபாடுகள் உள்ளன.

சிறகுகள் பொதுவான விசிறிவால் உள்ளானை விட குறுகி காணப்படும். மேலும் இந்த சிற்றினத்தின் வெள்ளை பின் விளிம்பு இல்லை.

ஆண் ஊசி வால் உள்ளான் பெரும்பாலும் குழுவில் உரத்த திரும்பத் திரும்ப வரும் டிசெகா ஒலியினை ஏற்படுத்து, மேலும் இந்த சிற்றினத்திற்கு இதன் ஆங்கிலப் பெயரைக் கொடுக்கும் முள் போன்ற வெளிப்புற வால் இறகுகளால் பறக்கும் போது விசில் சத்தங்கள் ஏற்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Gallinago stenura". IUCN Red List of Threatened Species 2016: e.T22693085A86630671. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22693085A86630671.en. https://www.iucnredlist.org/species/22693085/86630671. பார்த்த நாள்: 19 November 2021. 

குறிப்புகள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊசிவால்_கோரை_உள்ளான்&oldid=3928107" இலிருந்து மீள்விக்கப்பட்டது