உதயநத்தம் (கிழக்கு)
உதயநத்தம் Udayanatham | |
---|---|
Country | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | அரியலூர் மாவட்டம் |
அரசு | |
• நிர்வாகம் | நாடாளுமன்றம் |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 1,486 |
மொழி | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | TN-61 |
Coastline | 0 கிலோமீட்டர்கள் (0 mi) |
பாலின விகிதம் | .997 ஆண் (பால்)/பெண் (பால்) |
எழுத்தறிவு | 77.30% |
உதயநத்தம் (கிழக்கு)(Udayanatham East) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அரியலூர் மாவட்டத்தில் உடையார்பாளையம் வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இது மாவட்டத் துணைத் தலைமையகமான ஜெயங்கொண்டத்திலிருந்து 14 கிமீ தொலைவிலும் (வட்டாட்சியர் அலுவலகம்) மாவட்டத் தலைமையகமான அரியலூரிலிருந்து 50 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
மக்கள்தொகை
[தொகு]உதயநத்தத்தின் மொத்த மக்கள்தொகை 3,547 ஆகும். இதில் ஆண்கள் 1,733 பேர். பெண்கள் 1,814 பேர். உதயநத்தம் கிராமத்தின் கல்வியறிவு விகிதம் 71.02% ஆகும். இதில் 77.73% ஆண்கள் மற்றும் 64.61% பெண்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர்.
நிர்வாகம்
[தொகு]உதயநத்தம் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி மற்றும் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வருகின்றது.
கல்வி
[தொகு]இங்கு அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது.
சுகாதாரம்
[தொகு]அரசு மருத்துவமனை ஒன்றும் உதயநத்தத்தில் உள்ளது.
பொருளாதாரம்
[தொகு]அரசின் பாரத ஸ்டேட் வங்கியும், வேளாண்மை வங்கியும், கைத்தறி நெசவாளர் சங்கமும் இங்குச் செயல்படுகிறது. இராணி மகால் (திருமண மண்டபம்) அரசுக்குச் சொந்தமான வணிக மையமாகும். உள்ளூர் வணிகங்களில் மளிகைக் கடைகள், தேநீர்க் கடைகள், ஒரு வன்பொருள் கடை, அடைமானக் கடைகள், சிறிய மருந்தகம், மற்றும் அடுமனை ஒன்றும் இங்கு உள்ளது.[1]
கோயில்கள்
[தொகு]- விநாயகர் கோயில் (ஏரிக்கு அருகில்)
- அருள்மிகு காத்தாயி அம்மன் கோயில் (இடம் - தெற்கு தெரு)
- சாமுண்டீசுவரி கோயில் (முதன்மைச் சாலை)
- அய்யனார் கோயில் (வடக்கு)
- மாரியம்மன் கோயில் (உதயநத்தம் அருகில்)
- காளியம்மன் கோயில்(முதன்மைச் சாலை)
- சிறீ கிருஷ்ணர் கோயில்
இக்கோயில்களில் தொடர்ந்து பூசைகளும் திருவிழாக்களும் நடைபெறுகின்றன.