உள்ளடக்கத்துக்குச் செல்

உடல் நீர்மம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(உடல் திரவம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

உடல் நீர்மம் அல்லது (இலங்கை வழக்கில்:) உடற்பாயம் (Body fluid) என்பது உயிரினங்களின் உள்ளே உருவாகும், அல்லது சுரக்கும் அல்லது கழிவாக வெளியேறும் நீர்மப் பதார்த்தங்களாகும். இந்த உடல் நீர்மத்தின் முக்கியமான பகுதி உடல் நீர் (body water) ஆகும். குருதி, நிணநீர் (Lymph), சிறுநீர், விந்துப் பாய்மம், உமிழ்நீர், சளி (Sputum), கண்ணீர், பால் யோனிச் சுரப்புக்கள் போன்ற அனைத்து நீர்ம வடிவிலான பதார்த்தங்களும் உடல் நீர்மங்களாக இருக்கின்றன. ஆனாலும், பொதுவாக மருத்துவச் சோதனைகளில் சேகரிக்கப்பட்டு சோதிக்கப்படும் உடல் நீர்மங்களைக் குறிக்கவே இந்தச் சொல் பயன்படுத்தப்படுகின்றது.

இந்த உடல் நீர்மத்தின் கிட்டத்தட்ட 2/3 பகுதி உயிரணுக்களின் உள்ளாக இருக்கும் அகஉயிரணு நீர்மம் (Intracellular fluid) ஆகவும், 1/3 பகுதி உயிரணுக்களுக்கு வெளியாக இருக்கும் வெளிஉயிரணு நீர்மம் (Extracellular fluid) ஆகவும் காணப்படும்).[1]. அகஉயிரணு நீர்மம் என்பது உயிரணுக்களின் உள்ளே உள்ள முதலுருவில் உள்ள நீர்மப் பதார்த்தத்தைக் குறிக்கும். வெளிஉயிரணு நீர்மமானது உயிரணுக்களுக்கு இடையே உள்ள இடைவெளிகளிலும், அனைத்து உடல் நீர்மங்களிலும் காணப்படும் நீர்மப் பதார்த்தத்தைக் குறிக்கும்.

உடல் நீர்மமும் மருத்துவச் சோதனையும்

[தொகு]

நோய்களைக் கண்டறிவதற்கு பல் வேறு உடல் நீர்மங்களில் செய்யப்படும் மருத்துவ சோதனைகள் உதவுகின்றன. நோய்களைக் கண்டறிய குருதியே மிகவும் பொதுவான உடல் நீர்மச் சோதனையாக உள்ளது[2]. ஆனாலும் வேறு பல உடல் நீர்மச் சோதனைகளும் நோய் பற்றிய நேரடியான முடிவுக்கு வர உதவுகின்றன[3]. சில எடுத்துக்காட்டுகள்:

உடல் நீர்மமும், உடல் நலமும்

[தொகு]

உடல் நீர்மங்கள் ஒரு உயிரினத்தில் இருந்து வேறொரு உயிரினத்தினுள் செல்லும்போது, அல்லது மாற்றீடு செய்யப்படும்போது அவதானமாக இருக்க வேண்டியது அவசியமாகும். ஏனெனில் உடல் நீர்மங்கள் தொற்றுநோய்களை ஏற்படுத்தக்ககூடிய, நோய்க்காவியாக இருக்கும் சாத்தியங்கள் உண்டு. குருதி மாற்றீடு செய்யப்படும்போது, மாற்றீடு செய்யப்படும் குருதி தூய்மையானதாக இருப்பது அவசியம். வேறு வழிகளில் குருதி ஒருவரில் இருந்து இன்னொருவருக்கு கடத்தப்படும்போதும் கவனமாக இருக்க வேண்டும்.[8]. இல்லாவிடின், குருதியில் இருக்கக் கூடிய நோய்க்காரணிகள், இன்னொரு உடலினுள் சென்று, அங்கேயும் நோய் ஏற்படக் காரணமாகலாம். இதேபோல் பால்வினை நோய்கள் பரவுவதற்கும் உடல் நீர்மம் காரணமாகலாம்.[9].

உடல் நீர்மமும் தடய அறிவியலும்

[தொகு]

தடய அறிவியலில் உயிரியல் ஆதாரமாகக் காட்டுவதற்கு எலும்பு, பல், நகம், தசை போன்ற பல்வேறு உயிரியல் பொருட்களுடன், இந்த உடல் நீர்மங்களும் பயன்படுகின்றன[10].

மேற்கோள்கள்

[தொகு]
  1. Patlak, Joe. "Fluid Compartments in the Body". Archived from the original on 2012-07-30. பார்க்கப்பட்ட நாள் 2012-10-29.
  2. "Venipuncture - the extraction of blood using a needle and syringe". பார்க்கப்பட்ட நாள் 21 June 2012.
  3. "Body Fluid Analysis". Lab Test Online. பார்க்கப்பட்ட நாள் 30 அக்டோபர் 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Urinalaysis". Lab Test Online.
  5. Escalante, P (2009-06-02). "In the clinic. Tuberculosis.". Annals of internal medicine 150 (11): ITC61-614; quiz ITV616. பப்மெட்:19487708. 
  6. Manser, RL; Irving LB, Stone C et al. (2004). "Screening for lung cancer". Cochrane Database of Systematic Reviews (1): CD001991. doi:10.1002/14651858.CD001991.pub2. பப்மெட்:14973979. http://onlinelibrary.wiley.com/doi/10.1002/14651858.CD001991.pub2/full. 
  7. "Semen Analysis". Lab Test Online. Archived from the original on 2012-11-11. பார்க்கப்பட்ட நாள் 2012-10-30.
  8. "BLOODBORNE INFECTIOUS DISEASES: HIV/AIDS, HEPATITIS B, HEPATITIS C]".
  9. "Sexually transmitted diseases (STDs)". Archived from the original on 2012-06-11. பார்க்கப்பட்ட நாள் 2012-10-29.
  10. Kelly Virkler, Igor K. Lednev (சூலை 1, 2009). "Analysis of body fluids for forensic purposes: From laboratory testing to non-destructive rapid confirmatory identification at a crime scene". Forensic Science International. pp. 1-17 (Volume 188, Issue 1).
"https://ta.wikipedia.org/w/index.php?title=உடல்_நீர்மம்&oldid=3788110" இலிருந்து மீள்விக்கப்பட்டது