உமிழ்நீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வாயில் உமிழ்நீர் சுரக்கும் இடங்கள். படத்தில் உமிழ்நீர் சுரப்பிகள் காட்டப்பட்டுள்ளது. படத்தில் 1, 2, 3 என்று காட்டப்பட்டுள்ளன வெவ்வேறு உமிழ்நீர்ச் சுரப்பிகள் ஆகும்.

உமிழ்நீர் (About this soundஒலிப்பு ) என்பது வாயில் ஊறும் நீர்மம். இது நாம் உண்ணும் உணவை எளிதாக உட்கொள்ள உதவுமாறு ஈரப்படுத்தியும், உணவைச் செரிக்க உதவும் அமிலேசு என்னும் நொதியம் கொண்டதாகவும் உள்ள வாயூறுநீர் ஆகும். தமிழில் உமிழ்நீர் என்பதை எச்சில், வாயூறுநீர், வாய்நீர் என்றும் சொல்வர். ஒரு நாளைக்கு மாந்தர்களின் வாயில் 1-2 லீட்டர் அளவும் உமிழ்நீர் சுரக்கின்றது. உமிழ்நீர் சுரத்தல் பிற முதுகெலும்புள்ள விலங்குகளிலும் உண்டு. மாந்தர்களின் வாயில் உள்ள மூன்று பெரிய உமிழ்நீர்ச் சுரப்பிகளும் (படத்தைப் பார்க்கவும்), நாக்கு, கன்னம் (கன்னக் கதுப்பு), உதடு, மேலண்ணம் போன்ற பகுதிகளில் உள்ள சிறுசிறு சுரப்பிகளும் உமிழ்நீரை வாயில் ஊறச் செய்கின்றது. உணவின் மணம் உணர்ந்தாலேயே வாயில் உமிழ்நீர் சுரத்தல் இயல்பாக நடத்தல்.

உமிழ்நீரானது உணவை ஈரப்படுத்தி உட்கொள்ளவும், செரிமானம் செய்யவும் உதவுவது மட்டும் அல்லாமல், நாவை அசைத்து மொழி பேசவும் உதவுகின்றது. உமிழ்நீர் உணவுத் துகள்களைக் கரைப்பதால் உணவின் சுவை உணரப்படுகின்றது. உடலில் நீரின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றது. உடலில் நீரின் அளவு குறைந்தால், நா வரண்டு போவது, உமிழ்நீர் குறைவதாலேயே. இதலால் நீர் அருந்த குறிப்பு தருகின்றது. உமிழ்நீர் பற்களின் நலம் கெடாமலும், உணவுத்துணுக்குகள் வாயுள் கிடந்து பிற நுண்ணுயிர்களால் நோய் உண்டாக்காமல் வாயில் இருந்து நீக்கியும் உதவுகின்றது. உமிழ்நீரில் உள்ள அமிலேசு என்னும் நொதியம் மாவுப்பொருளான கார்போஹைடிரேட்டுகளை வேதியியல் முறையில் பிரித்து செரிப்பதற்கு எளிமையான பொருளாக மாற்ற உதவுகின்றது.

உமிழ்நீரில் உள்ள உட் கூறுகள்[தொகு]

உமிழ்நீரில் 98% நீர்தான் எனினும், சிறிதளவு பல்வேறு முக்கியமான பொருட்களும் அடங்கியுள்ளன.

இதில் அடங்கியுள்ள உட் கூறுகளின் முக்கியமானவைகளை கீழே காணலாம் [1]:

 • சளியம். இச் சளியம் பெரும்பாலும் மியூக்கோ-பாலி-சாக்கரைடு (mucopolysaccharides) (சளிய பல் இனிசியம்), கிளைக்கோ புரோட்டின் (glycoproteins) ஆகியவை அடங்கியவை.
 • நுண்ணியிரியை எதிர்க்கும் பொருட்கள் (தையோ-சயனேட் (thiocyanate), ஹைடிரஜன் பெராக்சைடும் (hydrogen peroxide), நோய்த்தடுப்புக்குளியம்-A ஆகிய இம்யூனோகுளோபின் A (immunoglobulin A)
 • பல நொதியங்கள் உள்ளன. முக்கியமானவை மூன்று.
  • α-amylase (EC3.2.1.1). அமிலேசு மாவுப்பொருள் மற்றும் லிப்பேசு என்னும் கணையத்தில் இருந்து பெறப்படும் நொதியம் செரிமானத்தைத் தொடங்குகின்றது. இதன் pH optima மதிப்பு 7.4
  • lysozyme (EC3.2.1.17). லைசோசைம் (Lysozyme) நுண்ணுயிரிகளைக் கொல்லும் நொதியம்.
  • உமிழ்நீர் லிப்பேசு (lingual lipase (EC3.1.1.3)). இது டிரை-கிளிசரைடு (Triglyceride) முதலிய கொழுப்புப் பொருட்களை பிரித்து ஒருவகையான கொழுப்புக் காடிகளாக மாற்றுகின்றது. lingual lipase (EC3.1.1.3). இந்த உமிழ்நீர் லிப்பேசு கொண்டுள்ள pH optimum ~4.0 ஆகும் எனவே இது போதிய அளவு காடிச் சூழல் பெறும் வரை செயலுந்தப்படுவதில்லை.
  • இவையன்றி சிறுசிறு பிற நொதியங்களும உள்ளன. அவையாவன: உமிழ்நீர்க் காடி பாஸ்பட்டேசு A+B (EC3.1.3.2), N-அசிட்டைல்முராமி-L-அலனைன் அமிடேசு (N-acetylmuramyl-L-alanine amidase) (EC3.5.1.28), NAD(P)H டி-ஹைடிரோ-கெனேசு-கியுனோன் (NAD(P)H dehydrogenase-quinon)e (EC1.6.99.2), உமிழ்நீர் லாக்ட்டோ-பெராக்சைடேசு (salivary lactoperoxidase) (EC1.11.1.7), சூப்பர்-ஆக்சைடு டிஸ்ம்யூட்டேசு (superoxide dismutase) (EC1.15.1.1), குளூட்டா-தியோன் டிரான்ஸ்ஃவெரேசு (glutathione transferase) (EC2.5.1.18), வகுப்பு-3 ஆல்டிஹைடு டெ-ஹைடிரோஜெனேசு (class 3 aldehyde dehydrogenase) (EC1.2.1.3), குளூக்கோசு-6-பாஸ்பேட்டு ஐசோமெரேசு (glucose-6-phosphate isomerase )(EC5.3.1.9), மற்றும் டிஸ்யு கல்லிக்ரைன் (tissue kallikrein) (EC3.4.21.35) ஆகும்.
 • செல்கள் (கலங்கள் (Cells): ஒரு மில்லி லிட்டரில் சுமார் 8 மில்லியன் மனித செல்களும், 500 மில்லியன் நுண்ணுயிரி செல்களும் இருக்கின்றன. நுண்ணியிரியின் செல்கள் இருப்பதால் சில நேரங்களில் கெட்ட வாய் நாற்றம் ஏற்படுகின்றது.

நோய் தடுப்பு சக்தி[தொகு]

உமிழ்நீரில் உள்ள புரதங்களால் நோய் கிருமிகளை அழிக்க முடியும். பறவைக் காய்ச்சல், பன்றி காய்ச்சல் போன்ற தொற்று நோய்களில் இருந்து முதியவர்களை காப்பாற்றுவதில் உமிழ்நீரில் உள்ள புரதங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

 1. [1]
 2. நோய் தடுப்பு சக்தி
"https://ta.wikipedia.org/w/index.php?title=உமிழ்நீர்&oldid=2832530" இருந்து மீள்விக்கப்பட்டது