இலானோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலானோ

Elano with Galatasaray in 2009
சுய தகவல்கள்
முழுப் பெயர்இலானோ புளூமர்[1]
பிறந்த நாள்14 சூன் 1981 (1981-06-14) (அகவை 42)
பிறந்த இடம்ஐராசிமாபொலீஸ்(Iracemápolis), பிரேசில்
உயரம்1.74 m (5 அடி 9 அங்) (5 அடி 9 அங்)
ஆடும் நிலை(கள்)தாக்கும் நடுக்கள வீரர்
கழகத் தகவல்கள்
தற்போதைய கழகம்
சென்னையின் (சான்டோஸ் அணியிலிருந்து கடன்முறையில்)
எண்7
இளநிலை வாழ்வழி
1998–1999குவாரனி கால்பந்துக் கழகம்
2000Associação Atlética Internacional (Limeira)
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
2001–2004சான்டோஸ்129(34)
2004–2007ஷக்தர் டொனெட்ஸ்க்49(14)
2007–2009மான்செஸ்டர் சிட்டி62(14)
2009–2011கலட்டசரே கால்பந்துக் கழகம்32(3)
2011–2012சான்டோஸ்15(1)
2012–2014கிரெமியோ கால்பந்துக் கழகம்47(10)
2014→ ஃபிளெமெங்கோ கால்பந்துக் கழகம் (கடன்)4(0)
2014சென்னையின்11(8)
2015–சான்டோஸ்5(0)
2015சென்னையின் (கடன்)4(2)
பன்னாட்டு வாழ்வழி
2004–2011பிரேசில்50(9)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும், 16:53, 16 October 2015 (UTC) அன்று சேகரிக்கப்பட்டது.

இலானோ புளூமர் (Elano Blumer) (பிறப்பு: ஜீன் 14, 1981) பிரேசில் நாட்டைச் சேர்ந்த தொழில்முறை கால்பந்து வீரராவார்.  இவர் இலானோ (Elano) என்ற சுருக்கமானப் பெயரில் பெருவாரியாக அறியப்படுகிறார்.  இவர் முதன்மையாக, தாக்கும் நடுக்கள வீரராக ஆடுபவர். தற்போது, பிரேசில் நாட்டுக் கால்பந்துக் கழகமான சான்டோஸ் அணியிலிருந்து கடன்முறையில் இந்தியன் சூப்பர் லீக் அணியான சென்னையின் எப் சி-யில் ஆடி வருகிறார்.  இவர் தனது நுணுக்கமான மற்றும் துல்லியமான பந்து கடத்தும் திறன், அணியினருக்கு பந்தளித்தல் மற்றும் நிலைப்பந்தை துல்லியமாக உதைத்தலுக்குப் பெயர் பெற்றவராவார்.[2]

கழக தொழில்முறை வாழ்க்கை[தொகு]

ஆரம்பகால தொழில்முறை வாழ்க்கை[தொகு]

சாவோ பாவுலோ மாநிலத்தின் "குவாரனி" எனும் காற்பந்துக் கழகத்தில் தனது இளவயது தொழில்முறை காற்பந்து வாழ்க்கையை இலானோ துவக்கினார். "இன்டர்நேசியோனல்" எனும் அணியில் சிறிது காலம் இருந்த பிறகு, உலகப்புகழ்பெற்ற கால்பந்து ஜாம்பவான் "பெலே"-வின் அணியான சான்டோசுக்கு மாற்றலானார். அங்கு ஆடிய காலகட்டத்தில் தனது ஆட்டத்திறனை மேம்படுத்தியதோடு, கோல்களடிக்கும் நடுக்கள வீரராக உருவெடுத்தார். 2004-ஆம் ஆண்டில் பிரேசிலியரோ பட்டம் வென்ற சான்டோஸ் அணியில் முக்கிய அங்கம் வகித்தார். மூன்றாண்டுகள் சான்டோஸ் அணியில் விளையாடி 34 கோல்கள் அடித்திருந்த நிலையில், உக்ரைனிய அணியான "ஷக்தார் டொனெட்ஸ்க்"-குக்கு மாற்றலானார்.

ஷக்தார் டோனெட்ஸ்க்[தொகு]

தனது முதல் பருவத்தில் அணியில் அதிகம் பங்களிக்காத இலானோ, தனது இரண்டாம் பருவத்தில் மிகச்சிறப்பாக விளையாடி அணியின் மிக முக்கிய வீரராக உருமாறினார். மேலும், உக்ரைனிய கால்பந்துக் கூட்டிணைவில் ஆடி பிரேசில் நாட்டின் தேசிய அணியில் இடம்பிடித்த முதல் வீரர் எனும் பெருமையும் பெற்றார்.

மான்செஸ்டர் சிட்டி[தொகு]

₤8 மில்லியன் பரிமாற்றத் தொகைக்கு ஆகத்து 2007-இல் மான்செஸ்டர் சிட்டி அணிக்கு மாற்றலானார். 4 ஆண்டுக்கான ஒப்பந்தத்துடன் இப்பரிமாற்றம் நிகழ்ந்தது. இரண்டு பருவங்கள் மான்செஸ்டர் சிட்டி அணியில் விளையாடிய இலானோ, 64 போட்டிகளில் பங்கெடுத்து 17 கோல்கள் அடித்தார்.

கலாட்டாசாரே[தொகு]

சூலை 2009-இல் துருக்கி நாட்டு அணியான கலட்டசரேக்கு நான்கு ஆண்டுகள் ஒப்பந்தத்துடன் மாற்றலானார். அங்கு 9 எண் சீருடையுடன் ஆடிய இவர், 32 போட்டிகளில் ஆடி 3 கோல்கள் அடித்தார்.

மீண்டும் பிரேசிலில்[தொகு]

2010-ஆம் ஆண்டில் மீண்டும் பிரேசிலுக்குத் திரும்பிய இலானோ, சான்டோஸ், கிரெமியோ, பிளெமெங்கோ அணிகளுக்காக ஆடினார். 2014-ஆம் ஆண்டில் பிளெமெங்கோ அணியிலிருந்து கிரெமியோ கழகத்துக்குத் திரும்பிய இலானோ, கிரெமியோ கழகத்துடனான ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டார்.

சென்னையின் எப் சி[தொகு]

2014-ஆம் ஆண்டில் மூன்றுமாத ஒப்பந்தத்துடன் இந்தியன் பிரீமியர் லீக் அணியான சென்னையின் எப் சியில் இணைந்தார். தனது முதல் பருவத்தில் எட்டு கோல்களுடன் கூட்டிணைவின் அதிகபட்ச கோல்களடித்த வீரராக விளங்கினார். தனது இரண்டாவது பருவத்தில் சென்னையின் எப் சி, இந்தியன் பிரீமியர் லீக் கோப்பையை வெல்ல உதவினார்.

சர்வதேச விளையாட்டு வாழ்க்கை[தொகு]

2004-ஆம் ஆண்டில் முதன்முதலில் பிரேசில் தேசிய காற்பந்து அணிக்காக ஆடிய இலானோ, மொத்தமாக 50 போட்டிகளில் ஆடி 9 கோல்களை அடித்திருக்கிறார்.

2007 கோபா அமெரிக்கா, 2010 காற்பந்து உலகக்கோப்பை மற்றும் 2011 கோபா அமெரிக்கா போட்டிகளில் ஆடிய பிரேசில் அணியில் இலானோ இடம்பிடித்தார்.

2010 காற்பந்து உலகக்கோப்பை[தொகு]

2010 உலகக் கோப்பைப் போட்டித் தொடரில், பிரேசிலின் முதல் இரண்டு போட்டிகளிலும் (வடக்கு கொரியா, ஐவரி கோஸ்ட் அணிகளுக்கெதிராக) கோல்கள் அடித்த இலானோ, இரண்டாவது போட்டியில் காயத்துடன் வெளியேறினார். அதன்பிறகான போட்டிகளில் இலானோ பங்கேற்கவில்லை.

2011 கோபா அமெரிக்கா[தொகு]

அர்ஜென்டினாவில் நடைபெற்ற 2011 கோபா அமெரிக்காவுக்கான பிரேசில் அணியில் இடம்பெற்ற இலானோ, இரண்டு போட்டிகளில் பதில்வீரராக ஆடினார். ஆட்டமுடிவில் சமநிலையில் இருந்த காலிறுதியில் தண்ட-உதையைத் தவறவிட்ட மூன்று வீரர்களுள் ஒருவராகி, பிரேசில் அப்போட்டித் தொடரிலிருந்து வெளியேறக் காரணமானார்.

References[தொகு]

  1. Wilson, Paul (7 அக்டோபர் 2007). "Scottish rapture used to be as rare as Brazilians called Ralph". தி கார்டியன். பார்க்கப்பட்ட நாள் 19 திசம்பர் 2011.
  2. Spot king Elano பரணிடப்பட்டது 2015-07-23 at the வந்தவழி இயந்திரம் Manchester City FC, 24 April 2009; Retrieved 21 October 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலானோ&oldid=3364365" இலிருந்து மீள்விக்கப்பட்டது