இராஜேந்திர பிரசாத் (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இராஜேந்திர பிரசாத்
Rajendra Prasad at QGM audio launch.jpg
குயிக் கன் முருகன் (2009) இசை வெளியீட்டு நிகழ்வில் பிரசாத்.
பிறப்பு19 சூலை 1956 (1956-07-19) (அகவை 64)
நிம்மக்கூரு, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
செயற்பாட்டுக்
காலம்
1977– தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
கத்தே விஜய சாமூண்டீசுவரி
பிள்ளைகள்2

கத்தே இராஜேந்திர பிரசாத் (Gadde Rajendra Prasad) (பிறப்பு: சூலை 19, 1956) ஒரு இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் முக்கியமாக தெலுங்குத் திரைப்படத்துறையில் பணியாற்றுகிறார். 1991 ஆம் ஆண்டில், எர்ரா மந்தரம் என்ற படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆந்திர மாநில நந்தி விருதைப் பெற்றார் [1] கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆ நலுகுரு என்ற படத்திற்கான சிறந்த நடிகருக்கான தனது இரண்டாவது நந்தி விருதையும் பெற்றார். கூடுதலாக, ஆந்திர பல்கலைக்கழகத்தில் மதிப்புறு முனைவர் பட்டமும் பெற்றார். [2] 2012ஆம் ஆண்டில், இவர் டிரீம் என்ற படத்தில் நடித்தார், இதற்காக கனடா சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குனர் கே. பவானி சங்கருடன் "ராயல் ரீல்" விருதை வென்றார். [3] [4]

மிசிசாகாவில் நடைபெற்ற கனடாவின் தெலுங்கு கூட்டணிகளால் இவருக்கு "ஹாஸ்யா கிரீத்தி" என்ற தலைப்பு வழங்கப்பட்டது. [5] குயிக் கன் முருகன் என்ற ஆங்கில மொழித் திரைப்படத்தில் இவரது நடிப்பை பாராட்டும் வகையில், 2009இல் நடைபெற்ற சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் இவர் கௌரரவிக்கப்பட்டார் . [6] இந்தப் படம் இலண்டன் திரைப்பட விழா, லாஸ் ஏஞ்சல்ஸ் இந்திய திரைப்பட விழா, நியூயார்க் ஆசிய திரைப்பட விழா, நியூயார்க்கின் நவீன கலை அருங்காட்சியகத்திலும் திரையிடப்பட்டது. [7]

இவர் ஏப்ரல் 2015 இல் இரண்டு ஆண்டுகள் திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [8]

சொந்த வாழ்க்கை[தொகு]

ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டம் நிம்மகூருவைச் சேர்ந்த கத்தே வெங்கட நாராயணா, மாணிக்காம்பா ஆகியோருக்கு ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிரசாத் பிறந்தார். [9] இவரது தந்தை ஒரு ஆசிரியர். திரையுலகில் நுழைவதற்கு முன்பு பீங்கான் பொறியியலில் பட்டம் பெற்றார். தாத்தம்மா கலா என்ற படத்தின் படப்பிடிப்பைக் கண்ட பிறகு, இவருக்கு திரையுலகில் நுழைய சேர வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. என். டி. ராமராவ், என். திரிவிக்ரம ராவ் ஆகியோரின் ஆலோசனையுடன் இவர் ஒரு நடிப்புப் பள்ளியில் சேர்ந்தார்.

தொழில்[தொகு]

பாபு இயக்கிய சினேகம் (1977) படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நடிகராக அறிமுகமானார். ஆரம்பத்தில் இவர் ஒரு குரல் கலைஞராக பணியாற்றினார். மேலும் பல துணை வேடங்களில் நடித்து வந்தார். கிருட்டிணா நடித்த இராமராஜ்யம்லோ பீமராஜு படத்தில் இவர் துணை வேடத்தில் நடித்தார். இது இவருக்கு 14 படங்களில் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது.

தனது படமான பிரேமிஞ்சு பெல்லாடு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து இயக்குனர் வம்சி இவரை அடையாளம் காட்டினார். இவர் வம்சியின் லேடீஸ் டைலர் என்ற படத்தின் மூலம் புகழ் பெற்றார். இவர் தொடர்ந்து துணை வேடங்களில் நடித்து வந்தார். 35 ஆண்டுகளுக்கும் மேலான வாழ்க்கையில் 200க்கும் மேற்பட்ட தெலுங்குப் படங்களிலும், ஒரு சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். இவர் ஒரு சிறந்த நகைச்சுவை நடிகராக [10] அறியப்படுகிறார். மேலும் ஆந்திராவில் நகைச்சுவை மன்னன் என்றும், நாடகிரீத்தி என்றும் அழைக்கப்படுகிறார். [11]

ஆகா நா பெல்லாண்டா படத்தில் இயக்குனர் ஜந்தியாலா இயக்கத்தில் நடித்த பிறகு சிறந்த திரை நட்சத்திரமாக நிறுவியது. இயக்குனர்களான வம்சி, ஈ.வி.வி சத்யநாராயணா, எஸ். வி. கிருட்டிண ரெட்டி மற்றும் இரிலாங்கி நரசிம்மராவ் ஆகியோர் இயக்கத்தில் ஒரு வெற்றிகரமான நடிகராக வலம் வந்தார். குறிப்பிடத்தக்க வகையில், இரிலாங்கி பிரசாத்துடன் 32 படங்களில் (இயக்குனராக அவரது 70 படங்களில்) நடித்தார். இவருக்கு ஏராளமான பாராட்டுக்களைப் பெற்றுத்தந்த ஒரு முக்கிய பாத்திரம் ஆ நலுகுரு திரைப்படத்தில் இருந்தது. இதற்காக இவர் தனது வாழ்க்கையில் இரண்டாவது முறையாக மாநில நந்தி விருதை வென்றுள்ளார். [12] விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட படங்களான மீ ஸ்ரயோபிலாஷி, ஒனமாலு ஆகிய படங்கள் இவரை தெலுங்குத் திரையுலகில் மிகவும் நம்பிக்கைக்குரிய நடிகர்களில் ஒருவராக ஆக்கியது. மிகப்பெரிய வெற்றிப் பெற்ற தேவுல்லு படத்தில் அனுமனாக நடித்தார்.

ஜுலை, ஆகடு, த/பெ சத்தியமூர்த்தி, சீமந்துடு, நானக்கு பிரேமத்தோ போன்ற படங்களில் துணைக் கலைஞராக குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களில் நடித்தார். அத்துடன் தாகுதமூதா தண்டகோரே படத்தில் வயதான கதாபாத்திரத்தில் நடித்தார்.

அப்போதைய பிரதமர் பி. வி. நரசிம்ம ராவ் இவரது பெரும் ரசிகராவார். [13]

திரைப்பட கலைஞர் சங்கம்[தொகு]

நடிகை ஜெயசுதாவுக்கு எதிராக 85 வாக்குகள் பெற்று 2015 ஆம் ஆண்டில் திரைப்பட கலைஞர் சங்கத்தின் (எம்ஏஏ) தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நடிகர் சிவாஜி ராஜா பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]