த/பெ சத்தியமூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
த/பெ சத்தியமூர்த்தி
S/O Satyamurthy
இயக்கம்திரிவிக்ரம் சீனிவாஸ்
தயாரிப்புஎஸ். ராதா கிருஷ்ணா
கதைதிரிவிக்ரம் சீனிவாஸ்
கதைசொல்லிஅல்லு அர்ஜுன் சங்கட் மோதர் (இந்திப் பதிப்பில் அல்லு அர்ஜுனாக)
இசைதேவி ஸ்ரீ பிரசாத்[1]
நடிப்புஅல்லு அர்ஜுன்
உபேந்திரா
பிரகாஷ் ராஜ்
பிரம்மானந்தம்
ராசேந்திர பிரசாத்
சமந்தா ருத் பிரபு
சினேகா
அடா ஷர்மா
நித்யா மேனன்
ஒளிப்பதிவுபிரசாத் முரெல்லா
படத்தொகுப்புபிரவின் புட்டி
கலையகம்அரிகா & ஆசினி கிரியேசன்சு
விநியோகம்கிளாசிக் எண்டர்டெயின்மெண்ட்ஸ்
(வெளிநாடு)[2]
ஸ்ரீ வெங்கடேசுவரா கிரியேசன்ஸ்
(Nizam)[3]
வெளியீடுஏப்ரல் 9, 2015 (2015-04-09)
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு
ஆக்கச்செலவு400 — 500 மில்லியன்[a]
மொத்த வருவாய்900 மில்லியன்[6]

த/பெ சத்தியமூர்த்தி (S/O Satyamurthy) (சன் ஆப் சத்தியமூர்த்தி என படிக்கவேண்டும்) என்பது 2015 ஆண்டைய இந்திய தெலுங்கு நாடகத் திரைப்படமாகும். படத்தை திரிவிக்ரம் சீனிவாஸ் இயக்க, அரிகா & ஆசினி கிரியேசன்சுக்காக, எஸ் ராதாகிருஷ்ணா தயாரித்துள்ளார். படத்தில் அல்லு அர்ஜுன், உபேந்திரா, சமந்தா ருத் பிரபு, சினேகா, அடா ஷர்மா, நித்யா மேனன், ராசேந்திர பிரசாத், பிரம்மானந்தம் , அலி. பிரகாஷ் ராஜ் ஆகிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படத்தின் ஒளிப்பதிவை சத்தியமூர்த்தி செய்துள்ளார்.

திரைப்படத்தை இயக்கிய சீனிவாஸ் அதனுடன் திரைக்கதையையும் எழுதியுள்ளார். படத்தை முதலில் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரு பன்மொழி திரைப்படமாக எடுக்க திட்டமிடப்பட்டது, ஆனால் தயாரிப்பாளர் தெலுங்கு மொழியில் படமாக்கி, அதே பெயரில் மலையாளத்தில் மொழிமாற்றம் செய்தனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, பிரசாத் மெரெல்லா ஒளிப்திவு செய்தார். படத்தயாரிப்பானது 2014 ஏப்ரலில் ஐதராபாத்தில் உள்ள ராமாநாயுடு ஸ்டுடியோவில் துவங்கியது. படத்தின் முதன்மை ஒளிப்பதிவு 2014 செப்டம்ர் 22 இல் ஐதராபாத்தில் துவங்கி, 2015 மார்ச் மத்தியில் நிறைவடைந்தது. ஐரோப்பாவில் படம்பிடிக்கப்பட்ட மூன்று பாடல்களை விடுத்து மீதமுள்ள படக் காட்சிகள் ஐதராபாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் படம்பிடிக்கப்பட்டது.

படத்தின் தெலுங்குப் பதிப்பானது உலகளவில் 2015 ஏப்ரல் 9 அன்று 1375 திரையரங்குகளில் வெளியிடப்பட்டு வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் மலையாளப் பதிப்பானது 2015 ஏப்ரல் 24 அன்று வெளியிடப்பட்டது. 400–500-மில்லியன் செலவில் தயாரிக்கப்பட்ட இப்படமானது விநியோகத்தர்களின் பங்கான 519 மில்லியனையும் சேர்த்து 905 மில்லியனை வசூலித்தது. உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் மிக அதிக அளவில் வசூலித்த தெலுங்கு படங்களில் இது ஏழாவது இடத்தில் உள்ளது. இந்தத் திரைப்படத்தின் வழியாக, உலகளவில் 540 மில்லியன் சம்பாதித்த படத்தில் நடித்த முதல் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் என்ற பெயர் இப்படத்தால் கிட்டியது.

கதை[தொகு]

வீராஜ் ஆனந்துக்கு (அல்லு அர்ஜுன்) திருமணம் நிச்சயமாகிறது, இந்தச் சமயத்தில் அவரது தந்தை சத்யமூர்த்தி (பிரகாஷ்ராஜ்) விபத்தில் இறந்துவிட எல்லாம் தலைகீழாகிறது. பணம், வசதி எல்லாம் இழப்பதோடு நடக்க இருந்த திருமணமும் நின்று விடுகிறது. இதற்கிடையில் தன் தந்தை மீது விழும் ஒரு பழியை தவறென நிரூபிக்க வீராஜ் ஆனந்த் கிளம்புகிறார். தன் தந்தை மீது ஏற்பட்ட களங்கத்தை எப்படி துடைத்தார் என்பதே மீதிக் கதை.

வெளியீடு[தொகு]

த / பெ சத்யமூர்த்தி படத்தை வெளியிட 2015 நவம்பர் 5, இல் வெளியிடும் திட்டத்துடன், 2015 பிப்ரவரி 5 பணிகள் துவங்கின.[7] ஆனால் படத்தின் பிந்தைய தயாரிப்பு தாமதங்கள் காரணமாக ஏப்ரல் 2 (2015 உலகக் கோப்பைக்குப் பின்னர்) தள்ளி வைக்கப்பட்டது.[8][9] 2015 மார்ச் 30, அன்று தணிக்கைக்குப் பிறகு, அதன் வெளியீட்டு தேதி ஏப்ரல் 9 ஏப்ரல் என முடிவு செய்யப்பட்டது.[10]

த / பெ சத்தியமூர்த்தி தெலுங்குப் படமானது, தமிழ் நாட்டில் வெளியிடப்பட்ட தெலுங்கு திரைப்படங்களில் ஆங்கில சப்டைட்டில்களுடன் வெளியிடப்பட்ட ஒருசில தெலுங்கு படங்களில் ஒன்றாகும்.[11]

குறிப்புகள்[தொகு]

 1. International Business Times India claims the film's budget as 400 million,[4] whereas Oneindia Entertainment claims it as 500 மில்லியன்.[5]

மேற்கோள்கள்[தொகு]

 1. Times News Network (19 December 2013). "Devi Sri Prasad to compose tunes for Allu Arjun's next". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 31 October 2014. பார்க்கப்பட்ட நாள் 8 April 2014.
 2. "Allu Arjun's film overseas rights sold out". The Times of India. 21 October 2014. Archived from the original on 22 October 2014. பார்க்கப்பட்ட நாள் 22 October 2014.
 3. "Allu Arjun — Trivikram movie Nizam rights sold for a bomb". IndiaGlitz. 21 November 2014. Archived from the original on 21 November 2014. பார்க்கப்பட்ட நாள் 21 November 2014.
 4. V. P., Nicy (4 April 2015). "Allu Arjun to Join Twitter Ahead of 'S/O Sathyamurthy' Release". International Business Times India. Archived from the original on 4 April 2015. பார்க்கப்பட்ட நாள் 4 April 2015.
 5. Anjuri, Pravallika (31 March 2015). "Son Of Satyamurthy Enters Profit Zone Before Its Release". Oneindia Entertainment. Archived from the original on 31 March 2015. பார்க்கப்பட்ட நாள் 31 March 2015.
 6. Pudipeddi, Harichandran (1 July 2015). "Content over star power: Story of south cinema in first half of 2015". ஹிந்துஸ்தான் டைம்ஸ். Archived from the original on 11 July 2015. பார்க்கப்பட்ட நாள் 11 July 2015.
 7. Seshagiri, Sangeetha (25 November 2014). "Allu Arjun-Trivikram Film to Release on 5 February; Will it Clash with 'Rudhramadevi'?". International Business Times India. Archived from the original on 25 November 2014. பார்க்கப்பட்ட நாள் 25 November 2014.
 8. Kamal, S. S. (22 January 2015). "Allu will come after World Cup". Bangalore Mirror. Archived from the original on 26 January 2015. பார்க்கப்பட்ட நாள் 26 January 2015.
 9. Srinivasan, Latha (6 March 2015). "Allu Arjun-Trivikram film Son of Satyamurthy to release on April 2!". Bollywood Life. Archived from the original on 7 March 2015. பார்க்கப்பட்ட நாள் 7 March 2015.
 10. Anjuri, Pravallika (30 March 2015). "Son Of Satyamurthy Clears Censor And Gets A Release Date". Oneindia Entertainment. Archived from the original on 30 March 2015. பார்க்கப்பட்ட நாள் 30 March 2015.
 11. "Allu Arjun to make a grand entry ..." Behindwoods. 5 April 2015. Archived from the original on 5 April 2015. பார்க்கப்பட்ட நாள் 5 April 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=த/பெ_சத்தியமூர்த்தி&oldid=3769488" இலிருந்து மீள்விக்கப்பட்டது