இரஞ்சித் சீதாராம் பண்டிட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இரஞ்சித் சீதாராம் பண்டிட்
Ranjit Sitaram Pandit.jpg
இரஞ்சித் சீதாராம் பண்டிட் (1937)[1]
பிறப்பு1893
ராஜ்கோட், பிரிட்டிசு இந்தியா
இறப்பு1944 சனவரி 14 (வயது 50)
தேசியம்இந்தியன்
பணிவழக்கறிஞர்
வாழ்க்கைத்
துணை
விஜயலட்சுமி பண்டித்
பிள்ளைகள்நயந்தரா சாகல் உட்பட மூன்று குழந்தைகள்
கல்விப் பின்னணி
கல்விகிறிஸ்ட் சர்ச் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்
Influences
கல்விப் பணி
Notable works

இரஞ்சித் சீதாராம் பண்டிட் (Ranjit Sitaram Pandit) (1893 - 14 சனவரி 1944) இவர் பிரிட்டிசு இந்தியாவின் கத்தியாவார் மாவட்டத்தில் ராஜ்கோட்டைச் சேர்ந்த இந்திய வழக்கறிஞரும், காங்கிரசுகாரரும், மொழியியலாளரும், அறிஞரும் ஆவார். இந்திய ஒத்துழையாமை இயக்கத்தில் இவர் வகித்த பங்கிற்கும், சமசுகிருத நூல்களான முத்ரா ராட்சசம், ருது சம்காரம், கல்கணரின் இராஜதரங்கிணி ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததற்காகவும் இவர் அறியப்படுகிறார்.

இவர் விஜயலட்சுமி பண்டிட்டின் கணவர், மோதிலால் நேருவின் மருமகன், ஜவகர்லால் நேருவின் மைத்துனர் மற்றும் நயன்தாரா சாகலின் தந்தையாவார்.

1926 வரை, இவர் கொல்கத்தாவில் ஒரு வழக்கறிஞராக இருந்தார். இவர் இந்திய ஒத்துழையாமை இயக்கத்தில் சேர வழக்கறிஞர் தொழிலை விட்டு வெளியேறினார். 1930 ஆம் ஆண்டில், வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் ஏற்பட்ட சிக்கல்களை விசாரித்த பெசாவர் விசாரணைக் குழுவின் செயலாளராக இருந்தார். பின்னர், இவர் ஆக்ரா மற்றும் அயோத்தி ஐக்கிய மாகாணங்களின் சட்டமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

நான்காவது முறை ஆங்கிலேயர்களால் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்ட சிறிது காலத்தில், பண்டிட் 1944 இல் இறந்தார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

இரஞ்சித் சீதாராம் பண்டிட் 1893 ஆம் ஆண்டில், [2] பிரிட்டிசு இந்தியாவின் கத்தியாவார் மாவட்டத்தில் ராஜ்கோட்டில் ஒரு பணக்கார ஆங்கிலம் படித்த வழக்கறிஞர் சீதாராம் நாராயனண் பண்டிட் என்பவருக்குப் பிறந்தார். [3] [4] இவரது மூதாதையர்கள் மகாராட்டிராவின் இரத்னகிரி மாவட்டத்தில் உள்ள பம்புலி கிராமத்திலிருந்து வந்தவர்கள். இவரது குடும்பத்தினர் ஏராளமான வழக்கறிஞர்கள் மற்றும் சமசுகிருத அறிஞர்களைக் கொண்டிருந்தனர். இவருக்கு பிரதாப் என்ற சகோதரரும், இரமாபாய் மற்றும் தாராபாய் என்ற இரண்டு சகோதரிகளும் இருந்தனர். ஒரு மொழியியலாளரான இவர். இந்தி, பாரசீகம், வங்காளம், ஆங்கிலம், பிரெஞ்சு, இடாய்ச்சு உட்பட பதினொரு மொழிகளை பேசினார். இவரது தந்தை போன்றே இவரும் இங்கிலாந்தில் சட்டம் பயின்றார். மத்திய கோவிலுக்குள் நுழைவதற்கு முன்பு, ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தின் கிறிஸ்ட் சர்ச்சில் பயின்றார். [5] இவர் சோர்போன் பல்கலைக்கழகம், ஐடல்பேர்க் பல்கலைக்கழகத்திலும் பயின்றார்.

இவருக்கு தோட்டக்கலை மீது ஆர்வம் இருந்தது. [6] வயலின் வாசிக்கத் தெரிந்த இவர் துடுப்பாட்டம், நீச்சல், வேட்டையாடுதல் ஆகியவற்றிலும் திறமையானவராக இருந்தார். [7]

திருமணம்[தொகு]

இவரது கல்லூரி நண்பரான மகாதேவ தேசாய், 1920 ஆம் ஆண்டில் மோதிலால் நேருவின் மகளான சொரூப குமாரியிடம், மாடர்ன் ரிவியூ என்ற பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட பண்டிட்டின் "அட் த பீட் ஆப் த குரு" என்ற கட்டுரையை படிக்க பரிந்துரைத்தார். [8] தேசாய் அப்போது மகாத்மா காந்தியின் செயலாளராக இருந்தார். தேசாய் கத்தியவாரில் பண்டிதர்களுக்கு குடும்ப நண்பராக இருந்த காரணத்தால் இவர் மூலம் சொரூப குமாரி நேருவை பண்டிட்டுக்கு திருமணம் செய்து வைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. [9] 1857 ஆம் ஆண்டு இந்தியக் கிளர்ச்சியின் ஆண்டுவிழாவான 10 மே 1921 இல், இவர்கள் திருமணம் செய்து கொண்டனர், [10] [11] அதன் பின்னர், இவர் விஜயலட்சுமி பண்டிட் என்ற பெயரை ஏற்றுக்கொண்டார். நேரு குடும்பம் அப்போது இந்திய ஒத்துழையாமை இயக்கத்திலும், அன்னியப் பொருட்களை புறக்கணிப்பதிலும் ஈடுபட்டிருந்த நிலையில், இத்திருமணமானது ஆனந்த பவனில் நடந்தது. இவர்களது முதல் மகள் வத்சலா தனது ஒன்பது மாத குழந்தையாக இருக்கும் போதே இறந்தார். அதைத் தொடர்ந்து, இவர்களுக்கு சந்திரலேகா மேத்தா, நயன்தாரா சாகல் மற்றும் இரீட்டா தர் என்ற மூன்று மகள்கள் [12] முறையே 1924, 1927 மற்றும் 1929 இல் பிறந்தார்கள்.

ஒத்துழையாமை இயக்கம்[தொகு]

நேரு-காந்தி குடும்பக் குழு புகைப்படம். ர.சீ. பண்டிட் வலதுபுறத்தில் நிற்கிறார். [13]
விஜயலட்சுமி பண்டிட் [14]

மார்ச் 1, 1926 அன்று, பண்டிட், தனது மனைவி விஜயலட்சுமி, தனது மைத்துனர் ஜவகர்லால் நேரு, மைத்துனி கமலா நேரு மற்றும் மருமகள் இந்திரா ஆகியோருடன் ஐரோப்பாவுக்கு பயணம் செய்தார். [15] அடுத்த நவம்பரில் இவர் விஜயலட்சுமியுடன் திரும்பினார். [16] [17] இந்த ஐரோப்பிய பயணம் வரை, பண்டிட் ஒரு வெற்றிகரமான வழக்கறிஞராக இருந்தா. இவர் சர் பி.எல் மிட்டருடன் கொல்கத்தாவில் சட்டப்ப்யிற்சியில் ஈடுபட்டிருந்தார். [18] ராஜ்கோட்டில் உள்ள இவரது குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாக, இவர் ஒரு சத்தியாக்கிரகியாக மாறி, மகாத்மா காந்தி மற்றும் மோதிலால் நேரு ஆகியோருடன் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்து அலகாபாத்தில் குடியேறினார். அங்கு இவர் நீதிமன்றங்களில் வழக்குகளை எடுத்துக் கொண்டார். பின்னர், இவர்கள் அல்மோராவுக்கு அருகிலுள்ள மலைகளில் உள்ள காளி என்ற இடத்தில் குடிபெயர்ந்தனர். [19]

மேலாட்சி அரசு முறைக்கான இந்திய தேசிய காங்கிரசின் 1928 முன்மொழிவு ஆங்கிலேயர்களால் நிராகரிக்கப்பட்டபோது, கட்சி ஒத்துழைக்காத உறுதிமொழியை எடுத்து "முழுமையான சுதந்திரம்" கோரியது. [16] விஜயலட்சுமி பின்னர் தனது சுயசரிதையில் இவ்வாறு பதிவுசெய்தார். திசம்பர் 29, 1929 அன்று, காங்கிரசின் அப்போதைய தலைவர் ஜவகர்லால் நேரு முழு தன்னாட்சி அறிவித்தபின், பண்டிட் அவருடன் கொண்டாட்டங்களில் சேர்ந்தார்.

1930 ஆம் ஆண்டில், வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் ஏற்பட்ட சிக்கல்களை விசாரிக்க பெசாவர் விசாரணைக் குழுவின் செயலாளராக பண்டிட்டை மோதிலால் நேரு நியமித்தார். [18] 1937 ஆம் ஆண்டில், இவர் இந்திய வருடாந்திர பதிவேட்டில் ஆக்ரா மற்றும் அயோத்தி ஐக்கிய மாகாணங்களின் சட்டமன்ற உறுப்பினராக நியமிக்கப்ப்பட்டார். [20] இவருடன் சேர்ந்து விஜயலட்சுமியும் தேர்ந்தெடுக்கப்பட்டார். [21]

இவர் ஜவகர்லால் நேருவுடன் இரண்டு சிறைத் தண்டனைகள், 1931 இல் நைனி மத்திய சிறையில் ஒரு முறை, தேராதூன் சிறையில் ஒரு முறை என பல சிறைத் தண்டனைகளை அனுபவித்துள்ளார் . [22] [23] [24] எழுத்தாளரான இவரது மகள் நயன்தாரா பின்னர் தனது தந்தை சிறைக்குச் சென்ற நாளில் சாக்லேட் கேக்கை எப்படி சாப்பிட்டார் என்பதை விவரித்து சிறைச்சாலையுடன் சாக்லேட் கேக்கை இணைத்து, பிரிசன் அன்ட் சாக்லேட் கேக் என்ற புத்தகத்தை எழுதினார். [25] [26]

மொழிபெயர்ப்புகள்[தொகு]

பண்டிட், தான் சிறையில் இருந்தபோது, [27] 1148 -1149 கால கட்டத்தில் சமசுகிருத மொழியில் எழுதப்பட்ட கல்கணரின் இராஜதரங்கிணியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். [28] [29] மொழிபெயர்ப்பின் முன்னுரையை ஜவஹர்லால் நேரு எழுதியுள்ளார். [30]

இவர், விசாகதத்தர் என்னும் சமசுகிருத மொழிப் புலவரால் எழுதப்பட்ட ஒரு அரசியல் வரலாற்று நாடகமான முத்ரா ராட்சசம் என்பதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். காளிதாசரின் சமசுகிருத மொழி செய்யுள் காவியமான ருது சம்காரம் என்பதை 1942 ல் மொழியாக்கம் செய்தார். [31] [32]

இறப்பு[தொகு]

1943 ஆம் ஆண்டில், இவர் பரேலி மத்திய சிறையில் இருந்தபோது நிமோனியா, புளூரிசி மற்றும் மாரடைப்பு ஏற்பட்டு [33] இறந்தார். [28] [34]

தேர்ந்தெடுக்கப்பட்ட வெளியீடுகள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

 1. Sahgal, Nayantara, (Ed.) (2004) Before Freedom, 1909–1947: Nehru's Letters to His Sister, நொய்டா: Roli Books. ISBN 9788174363473
 2. "Ranjit Sitaram Pandit".
 3. Mehta, Chandralekha. (2008) Freedom's Child: Growing Up During Satyagraha. UK: Puffin Books. p. 35. ISBN 978-81-8475-966-2
 4. Frank, 2010, p. 168
 5. Nayantara Sahgal's Prison and Chocolate Cake: An Autobiographical Saga. Shodhganga. Chapter III, Part 1, pp. 75-105.
 6. Ganesh, Deepa. "In the face of truth". https://www.thehindu.com/features/metroplus/in-the-face-of-truth/article2042256.ece. 
 7. Andrews, Robert Hardy. A Lamp For India: The Story of Madame Pandit. London: Arthur Barker Limited. பக். 96–102. https://archive.org/details/in.ernet.dli.2015.135725. 
 8. Pandit, Vijaya Lakshmi. (1945) Prison Days. Calcutta: The Signet Press. p. 19-20.
 9. "Pandit, Vijaya Lakshmi (1900–1990) | Encyclopedia.com".
 10. Nanda, Bal Ram (1962). The Nehrus Motilal and Jawaharlal. New York: The JohnDay Company, p. 192.
 11. Sahgal, 2004, p. 29.
 12. "How Vijaya Lakshmi Pandit Built a Political Career in British India's Man's World" (en-US) (3 October 2017).
 13. "Photo Gallery - Jawaharlal Nehru with family members". மூல முகவரியிலிருந்து 22 டிசம்பர் 2019 அன்று பரணிடப்பட்டது.
 14. "Vijaya Lakshmi Pandit (née Sarup Kumari Nehru) - National Portrait Gallery" (en).
 15. Katherine Frank (2010). "2. 'Hua'". Indira: The Life of Indira Nehru Gandhi. London: HarperCollins Publishers. பக். 32. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-00-638715-2. https://books.google.com/books?id=3bt5jZv2DHsC&pg=PA32. 
 16. 16.0 16.1 Sahgal, 2004, pp. 30-31.
 17. Nehru, Jawaharlal. (1936). Jawaharlal Nehru. (1936) An Autobiography. New Delhi: Oxford University Press. p. 147
 18. 18.0 18.1 Mehta, Chandralekha. (2008) Freedom's Child: Growing Up During Satyagraha. UK: Puffin Books. p. 35. ISBN 978-81-8475-966-2ISBN 978-81-8475-966-2
 19. Frank, 2010, p. 187-189
 20. The Indian Annual Register July Dec 1937. 1937. https://archive.org/details/in.ernet.dli.2015.85700. 
 21. Frank, 2010, p. 121
 22. Sahgal, 2010, p. 7
 23. Nehru, 1936, p.235
 24. Nehru, Jawaharlal, (1962). Glimpses of World History. New York: Asia Publishing House. Second edition. p. 27
 25. Dutt, Nirupama (5 November 2015). "I am a writer and have to share my convictions: Nayantara Sahgal" (en).
 26. Pandet, A. Nayantara (1 April 1954). "Growing up with the Nehrus | Maclean's | 1 April 1954" (en-US).
 27. Gandhi, 2004, p. 326.
 28. 28.0 28.1 Sahgal, Nayantara (7 January 2019). "What Nayantara Sahgal was not allowed to say at Marathi literary meet" (en-US).
 29. Zutshi, Chitralekha (2011). "Translating the Past: Rethinking "Rajatarangini" Narratives in Colonial India". The Journal of Asian Studies 70 (1): 5–27. doi:10.1017/S0021911810002998. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-9118. 
 30. Muhajir, Umair A. (June 2017). "Muhajir on Zutshi, 'Kashmir's Contested Pasts: Narratives, Sacred Geographies, and the Historical Imagination' | H-Asia | H-Net".
 31. Kudaisya, Gyanesh (2006). Region, Nation, "Heartland": Uttar Pradesh in India's Body Politic. New Delhi: SAGE Publishing. பக். 382. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-93-5280-279-1. https://books.google.com/books?id=Ku5jDwAAQBAJ&pg=PT382. 
 32. Pandit, 1945, p.100
 33. Sahgal, 2010, p. 18
 34. Suman, Saket (4 October 2017). "India is a secular democratic".