முத்ரா ராக்ஷஸம்
Appearance
முத்ரா ராட்சசம் என்பது விசாகதத்தர் என்னும் சமசுகிருத மொழிப் புலவரால் எழுதப்பட்ட ஒரு அரசியல் வரலாற்று நாடகமாகும். இந்நூல் வட இந்தியாவில் சந்திர குப்த மௌரியர் ஆட்சிக் கட்டிலில் ஏறியதை விவரிக்கிறது. சாணக்கியர், ராக்சசன் (அமைச்சன்), சந்திரகுப்த மௌரியர் ஆகியோர் முக்கிய கதை மாந்தர்கள் ஆவார்.
தமிழ் மொழிபெயர்ப்புகள்
[தொகு]இந்நூல் 1950 ஆம் ஆண்டில் இ. கே. நடேசசர்மா என்பவரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. மறுபதிப்பு 2000 ஆம் ஆண்டில் வெளிவந்தது[1].
பரிதிமாற் கலைஞர் எனும் வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார், இந்நூலை முத்திராராட்சம் எனும் தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.[2]