இந்தியக் கண்கிலேடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Burhinus|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
இந்தியக் கண்கிலேடி
அழைப்பு ஒலி
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Burhinus
இனம்: வார்ப்புரு:Taxonomy/BurhinusB. indicus
இருசொற் பெயரீடு
Burhinus indicus
(Salvadori, 1866)
     range
வேறு பெயர்கள்
  • Oedicnemus indicus
  • Burhinus oedicnemus indicus

இந்தியக் கண்கிலேடி ( Indian stone-curlew ) என்பது புர்கனிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை இனமாகும். இது முன்னர் ஐரோவாசியா நத்தைக் குத்தியின் கிளையினமாக சேர்க்கப்பட்டது. இந்த இனம் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் சமவெளிகளில் காணப்படுகிறது. இவை பெரிய கண்களுடனும், உடலில் கோடுகள், வெளிறிய அடையாளங்களுடன் பழுப்பு நிறத்தில் உள்ளன. இவற்றை மண், பாறைகளின் பின்னணியில் கண்டறிவது கடினம். பெரும்பாலும் இருட்டில் சுறுசுறுப்பாக இருக்கும்.

வகைபிரித்தல்[தொகு]

1866 ஆம் ஆண்டில் இத்தாலிய விலங்கியல் நிபுணரான டோமாசோ சால்வடோரி, இந்தியாவில் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் இந்தியக் கண்கிலேடியை முறையாக விவரித்தார் . அவர் Oedicnemus indicus என்ற இருசொல் பெயரை உருவாக்கினார். [2] உரிய பண்புச்சொல் இலத்தீன் மொழியில் "இந்தியன்" என்று பொருள்படும். 1811 ஆம் ஆண்டில் செர்மன் விலங்கியல் நிபுணர் யொஃகான் இல்லிகெர் 1811 ஆம் ஆண்டில் நிறுவிய பர்ஹினஸ் பேரினத்தில் இந்திய கண்கிலேடி இப்போது வைக்கப்பட்டுள்ளது [3] இந்த இனத்தில் ஒரு தோற்றமுள்ள எந்த துணையினமும் அங்கீகரிக்கப்படவில்லை. [3]

இந்த இனம் முன்னர் ஐரோவாசியா நத்தைக் குத்தியின் கிளையினமாகக் கருதப்பட்டது. ஆனால் இந்திய கண்கிலேடியின் தனித்துவமான இறகுகள் மற்றும் பெரியதாக வலசை போகாத தன்மை இவற்றால், இது 2005 இல் பமீலா ராஸ்முசென் என்பவரால் முழு இனமாக கருதப்பட்டது [4] ] [5] எவ்வாறாயினும், இந்த இனம் குறித்த பெரிய அளவில் பரிணாம மரபு வழி ஆய்வு எதுவும் இல்லை.

விளக்கம்[தொகு]

பெரிய கண்கள் இரவாடி என்பதைக் குறிக்கின்றன

கௌதாரியைவிட அளவில் பெரியதான இது சுமார் 41 சென்டிமீட்டர் நீளம் கொண்டது. பெரிய கண்கள் கொண்ட இந்தப் பறவை பருமனாக, உடலின் மேற்பகுதி கருங்கோடுகளோடு கூடிய மணல் பழுப்பாக இருக்கும். மேலும் இது உப்புக்கொத்தி போன்றது. இதன் பெரிய தலையில் கண்ணுக்குக் கீழே பாலேடு போன்ற மீசைப் பட்டையின் எல்லையில் இருண்ட பட்டை உள்ளது. ஒரு குறுகிய பாலேடு போன்ற புருவமும் உள்ளது. [6] இதன் நீண்ட கால்களில் மூட்டுக்கள் சற்று பருத்திருப்பதால், "தடித்த-முழங்கால்" ("thick-knee") என்ற பெயரைப் பெற்றுள்ளது. இவை பெரிய மஞ்சள் நிறக் கண்கள் கொண்டவை. இதன் விழிப்படலம் மஞ்சள் நிறம். மூடிய இறக்கைகளின் மேல் ஒரு வெளிர் பட்டை காணப்படும். பாலினங்கள் ஒரே மாதிரியாக இருக்கும், மேலும் முதிர்ச்சியடையாத பறவைகள் முதிர்ச்சியடைந்தவையை விட வெளிர் நிறத்தில் இருப்பதோடு, அடிப்பகுதியில் அதிகக் கோடுகளுடன் காணப்படும். பறக்கும்போது, இரண்டு குறுகிய வெள்ளைப் பட்டைகளும், வெண்மையானகறையும் கருத்த இறக்கைகளும் காணப்படும். [7] [8]

இந்தியக் கிலேடி முதன்மையாக விடியற்காலையிலும் அந்தி நேரத்தில் வெளிபட்டு மேயும். மேலும் இது முக்கியமாக இரவில் ஒலி எழுப்புகிறது. இது பிக்-பிக் , பிக்-பிக் என்று தொடர்ந்து கத்தி பிக்விக் என்று முடிக்கும். சிறு கூட்டமாக காணப்படும் இவை பகலில் புதரின் அடியில் பதுங்கி இருக்கும். [7]

குஞ்சும் அதன் அருகில் இருக்கும் முதிர்ந்த பறவையும்

பரவலும் வாழிடமும்[தொகு]

அதன் சூழலுடன் கலத்தல்

இது வறண்ட இலையுதிர் காடுகள், முள் காடுகளில் காணப்படுகிறது. மேலும் இது புதர்கள் நிறைந்த ஆற்றுப்படுகைகள், தோப்புகள் தோட்டங்களில் கூட காணப்படும். [8] இந்த இனம் வங்காளதேசம், பூட்டான், கம்போடியா, இந்தியா, லாவோஸ், மியான்மர், நேபாளம், பாக்கித்தான், இலங்கை, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளில் மட்டுமே காணப்படுகிறது. [1] இது வறண்ட இலையுதிர் காடுகள், புதர்கள், பாறைக் குன்றுகள், தரிசு நிலங்களில் காணப்படுகிறது. [7]

நிழலில் அமர்ந்துள்ளது

நடத்தை[தொகு]

இனப்பெருக்கம்[தொகு]

இதன் இனப்பெருக்க காலம் முக்கியமாக மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் ஆகும். சாதாரணமாக கற்கள் நிறைந்த தரையில் குழியில் புதர்களின் ஓரத்தில் அல்லது மண் மேட்டின் ஓரத்தில் 2 முதல் 3 வெளிர் மஞ்சள் நிறத்தில் சிவப்புக் கறைகள் கொண்ட முட்டைகளை இடும். முட்டைகள் பொதுவாக பெண் பறவைகளால் அடைகாக்கப்படும். அருகில் ஆண் பறவை காவல் இருக்கும். குஞ்சுகள் பொரித்து வெளிவந்தவுடன் பெற்றோரைப் பின் தொடர்கின்றன. அவை உருமறைப்பு நிறத்தைப் பெற்றுள்ளன. [7]

உணவு[தொகு]

இவற்றின் உணவில் முக்கியமாக பூச்சிகள், புழுக்கள், சிறிய ஊர்வன இடம்பெற்றுள்ளன. இவை எப்போதாவது விதைகளையும் உண்கின்றன. [7]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 BirdLife International (2016). "Burhinus indicus". IUCN Red List of Threatened Species 2016: e.T45111544A95142370. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T45111544A95142370.en. https://www.iucnredlist.org/species/45111544/95142370. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. Tommaso Salvadori (1865). "Descrizione di altre nuove specie di uccelli esistenti nel Museo di Torina: Nota Seconda" (in Italian). Atti della Società italiana di scienze naturali 8: 275–389 [380–381]. https://www.biodiversitylibrary.org/page/10815152. 
  3. 3.0 3.1 "Buttonquail, thick-knees, sheathbills, plovers, oystercatchers, stilts, painted-snipes, jacanas, Plains-wanderer, seedsnipes". International Ornithologists' Union. January 2021. https://www.worldbirdnames.org/bow/buttonquail/. 
  4. Inskipp, Tim; Collar, N.J (2015). "Notable taxonomic changes proposed for Asian birds in 2014". Birding Asia 24: 64–71. http://people.ds.cam.ac.uk/cns26/njc/Papers/2015%20Inskipp%20&%20Collar,%20Taxonomic%20changes%20proposed%20for%20Asian%20birds%202014.pdf. 
  5. Inskipp, Tim; Collar, N.J (2015). "Notable taxonomic changes proposed for Asian birds in 2014". Birding Asia 24: 64–71. http://people.ds.cam.ac.uk/cns26/njc/Papers/2015%20Inskipp%20&%20Collar,%20Taxonomic%20changes%20proposed%20for%20Asian%20birds%202014.pdf. 
  6. Whistler, Hugh (1949). Popular Handbook of Indian Birds (4 ). London: Gurney and Jackson. பக். 450–451. https://archive.org/stream/popularhandbooko033226mbp#page/n499/mode/2up/. 
  7. 7.0 7.1 7.2 7.3 7.4 Ali, Sálim. Handbook of the birds of India and Pakistan : together with those of Bangladesh, Nepal, Bhutan and Sri Lanka. Volume 3 Stone Curlews to Owls (2nd ). New Delhi: Oxford University Press. 
  8. 8.0 8.1 Rasmussen, Pamela C.; Anderton, John C. (2005). Birds of South Asia The Ripley Guide Volume 2: Attributes and Status (2nd ). Washington, D.C and Barcelona: Smithsonian Institution and Lynx Edicions. பக். 181–182. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-84-96553-87-3. 

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Burhinus indicus
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியக்_கண்கிலேடி&oldid=3770835" இருந்து மீள்விக்கப்பட்டது