கண்கிலேடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண்கிலேடி
Burhinus oedicnemus insularum Lanzarote 1.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: Charadriiformes
குடும்பம்: Burhinidae
பேரினம்: Burhinus
இனம்: B. oedicnemus
இருசொற் பெயரீடு
Burhinus oedicnemus
(Linnaeus, 1758)
Burhinus oedicnemus distr.png
Range of B. oedicnemus      Breeding range     Year-round range     Wintering range

கண்கிலேடி ஆங்கிலத்தில் stone-curlew என்றழைக்கப்படும் ஒரு கரையோரப் பறவையாகும் இந்த கண்கிலேடி ஐரோப்பா முழுவதும் காணப்படும் ஒரு இனமாகும்.

உடலமைப்பு[தொகு]

[2] ஆங்கிலப்பெயர்  :Stone - Curlew

அறிவியல் பெயர்  : Burhinus oedicnemus

41 செ.மீ பருத்த தலையை உடைய இதன் உடலின் மேற்பகுதி கருங்கோடுகளோடு மணல்பழுப்பாக இருக்கும். பெரிய விழிகளும், நீண்ட மஞ்சள் நிறக்கால்களும் கொண்டது.

காணப்படும் பகுதிகள்[தொகு]

மலைப்பகுதிகளைச் சார்ந்த வறள்காடுகள், முட்புதர்களோடு கூடிய தரிசுநிலங்கள், ஊர்ப்புறத்தில் அமைந்த மா முதலான மரங்கள் நிறைந்த காடுகள். நீர்வற்றிய ஆற்றுப் பரப்பு ஆகியவற்றிடையே இணையாகவும் சிறு குழுவாகவும் திரியும்.

உணவு[தொகு]

காலை மாலை நேரங்களில், புழு பூச்சிகள், எலி முதலிய சிற்றுயிர்களை இரையாகத் தேடும் பகலில் மரநிழல், புதர்கள் ஆகியவற்றிடையே ஓய்வுகொள்ளும். வேட்டைகாரர்கள் தேடித் திரியும் போது மிக அருகில் வரும் வரை சத்தமின்றிப் பதுங்கியபடி படுத்துக் கிடந்து பின் எழுந்து பறக்கும். பிக். பிக். பிக். எனக் குரல் கொடுப்பதை அந்தி நெருங்கும் போதும் அதிகாலையிலும் கேட்கலாம்.

கண்கிலேடி

இனப்பெருக்கம்[தொகு]

பிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரை கல்லாந்தரையில் புதர் ஓரமாகவும் புல்மேடுகளிலும் தரையில் சிறு குழியில் 2 முட்டைகள் இடும். [3]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Burhinus oedicnemus
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
Wikispecies-logo.svg
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:

மேற்கோள்கள்[தொகு]

  1. "Burhinus oedicnemus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2015.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2014. 28 June 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "stone-curlew கண்கிலேடி". 28 செப்டம்பர் 2017 அன்று பார்க்கப்பட்டது.
  3. தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம்,பக்கம் எண்:55
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்கிலேடி&oldid=3237936" இருந்து மீள்விக்கப்பட்டது