உள்ளடக்கத்துக்குச் செல்

இஞ்சி தேநீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இஞ்சி தேநீர்
வகைமூலிகை தேநீர்

ஏனைய பெயர்கள்
  • சாயெங்காங்-சா
  • சலாபத்
  • சகாயு
  • தே காலியா
  • தே ஜகே
தோற்றம்ஆசியா

சிறு குறிப்புதிசானே தேநீர் இஞ்சி பயன்படுத்தி தயாரித்தது

வெப்பநிலை100 °C (212 °F)
நேரம்மாறுபடக்கூடியது
மண்டல வேறுபாடு
Chinese name
பண்டைய சீனம் 薑母茶
நவீன சீனம் 姜母茶
Literal meaningமுற்றி இஞ்சி தேநீர்
கொரியப் பெயர்
அங்குல் எழுத்துமுறை생강차
Hanja生薑茶
Literal meaningginger tea
சப்பானியப் பெயர்
Kanji 生姜湯
Kana しょうがゆ
msa பெயர்
msateh halia
ind பெயர்
indteh jahe
பிலிப்பினோ பெயர்
tglsalabat

இஞ்சி தேநீர் (Ginger tea) என்பது இஞ்சி வேரினைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் ஒரு மூலிகை பானமாகும். இது கிழக்காசியா, தெற்கு ஆசியா, தென்கிழக்காசியா மற்றும் மேற்கு ஆசியாவில் பாரம்பரிய மூலிகை மருந்தாக நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது.[1]

பிராந்திய வேறுபாடுகள்

[தொகு]

இஞ்சி தேநீரைத் தனியாகக் குடிக்கலாம் அல்லது பால், ஆரஞ்சு துண்டுகள் அல்லது எலுமிச்சை போன்ற பாரம்பரிய உணவுகளுடன் சேர்த்துப் பரிமாறலாம்.[2][3]

கிழக்கு ஆசியா

[தொகு]

சீனா

[தொகு]

தாங் அரசமரபில், இஞ்சி தேநீர் கசப்பான சுவையைக் குறைக்கச் சுவைக்கப்பட்டது. வெங்காயம், ஆரஞ்சு தோல், கிராம்பு மற்றும் மிளகுக்கீரை, தேநீர் குடிப்பவர்களிடையே இஞ்சி விரும்பப்பட்டது.[4]

சப்பான்

[தொகு]

சப்பானில், இது ஷாகாயு (生姜湯) என்று அழைக்கப்படுகிறது.

கொரியா

[தொகு]

கொரியாவில், இஞ்சி தேநீர் saenggang-cha ( 생강차 என்று அழைக்கப்படுகிறது. [sɛ̝ŋ.ɡaŋ.tɕʰa]). புதிய இஞ்சித் துண்டுகளைத் தண்ணீரில் கொதிக்கவைத்து அல்லது சூடான நீரில் இஞ்சி சாற்றைக் கலந்து இஞ்சி தேநீர் தயாரிக்கப்படுகிறது.[5] சாங்காங்- சியோங் என்று அழைக்கப்படும் தேனில் பாதுகாக்கப்பட்ட துண்டு துண்டான இஞ்சியை வெந்நீரில் கலந்தும் இஞ்சி தேநீர் தயாரிக்கலாம்.[6] இப்போதெல்லாம், இஞ்சித் தூளினைப் பயன்படுத்தியும் உடனடியாக இஞ்சி தேநீர் தயாரிப்பது பரவலாக நடைமுறையில் உள்ளது.[7] பரிமாறப்படும் போது, தேநீர் பெரும்பாலும் இலந்தை மற்றும் பைன் கொட்டைகளால் அலங்கரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.[8] புதிய இஞ்சியைப் பயன்படுத்தும் போது, தேநீர் சுவைக்கு ஏற்ப தேன், சர்க்கரை அல்லது பிற இனிப்புகளைக் கலந்து தயாரிக்கலாம்.[5] பூண்டு, இலந்தை மற்றும் பேரிக்காய் சில சமயங்களில் இஞ்சியுடன் சேர்த்துப் பயன்படுத்தப்படுகிறது.[5]

தென்கிழக்கு ஆசியா

[தொகு]

புரூணை, மலேசியா, சிங்கப்பூர்

[தொகு]

புரூணை, மலேசியா மற்றும் சிங்கப்பூர் உணவு வகைகளில், இஞ்சி தேநீர் பொதுவாக தே ஹாலியா என்று அழைக்கப்படுகிறது.[9] இது தூய இஞ்சி தேநீர் அல்ல, ஏனெனில் இது வலுவான இனிப்பு கருப்பு தேநீர், இஞ்சி வேர்த்தண்டுக்கிழங்கு, பால் அல்லது சுண்டவைக்கப்பட்ட பாலுடன் சர்க்கரை காய்ச்சி தயாரிக்கப்படுகிறது.

இந்தோனேசியா

[தொகு]

இந்தோனேசியாவில், இது தே ஜஹே என்று அழைக்கப்படுகிறது. சாவகம் தீவில், வெடாங் ஜாஹே எனப்படும் பனை சர்க்கரை மற்றும் மசாலாப் பொருட்களால் செறிவூட்டப்பட்ட இஞ்சி தேநீரின் உள்ளூர் தயாரிப்பு மிகவும் பிரபலமானது. [10]

வெடாங் ஜாஹே என்பது இந்தோனேசிய இஞ்சி தேநீர் வகையாகும்.[10] சாவக மொழியில் வேடங் என்றால் "சூடான பானம்" என்றும், ஜாஹே என்றால் "இஞ்சி" என்றும் பொருள். இது ஒரு உற்சாகமான தேநீராக அடிக்கடி அருந்தப்படுகிறது. இது இஞ்சி வேர்த்தண்டுக் கிழங்கிலிருந்து தயாரிக்கப்படுகிறது. பொதுவாக புதியது மற்றும் மெல்லிய துண்டுகளாக வெட்டப்பட்டு, பனை வெல்லம் அல்லது கரும்பு சர்க்கரை துகள்கள், பாண்டன் இலைகள் சேர்த்துத் தயாரிக்கப்படுகிறது. பனை சர்க்கரைக்குப் பதிலாகப் பழுப்பு சர்க்கரை அல்லது தேன் கொண்டு தயாரிக்கலாம். பாரம்பரியமாக மக்கள் எலுமிச்சை, கிராம்பு மற்றும் இலவங்கப்பட்டை போன்ற மசாலாப் பொருட்களையும் சேர்த்துத் தயாரிக்கின்றனர்.[10]

புதிய அல்லது செறிவூட்டப்பட்ட பால் சேர்க்கப்படலாம்.[11]

பிலிப்பீன்சு

[தொகு]

பிலிப்பீன்சில், இது சலாபத் என்று அழைக்கப்படுகிறது. பாரம்பரியமாக உரிக்கப்பட்டு மெல்லியதாக வெட்டப்பட்ட அல்லது நொறுக்கப்பட்ட இஞ்சியைத் தண்ணீரில் சில நிமிடங்கள் வேகவைத்து இஞ்சி தேநீர் பிலிப்பீன்சில் தயாரிக்கப்படுகிறது. சர்க்கரை, தேன் மற்றும் பிலிப்பீன்சு எலுமிச்சை ஆகியவை சுவைக்குச் சேர்க்கப்படுகின்றன. மேலும் விரும்பியபடி மற்ற சுவையூட்டும் பொருட்கள் கொண்டும் தயாரிக்கப்படுகிறது.[12][13][14] தற்காலத்தில் சூடான கொதிக்கும் நீரில் இஞ்சி தூள் (பெரும்பாலும் "உடனடி சலாபத் " என்று அழைக்கப்படுகிறது) சேர்த்துத் தயாரிக்கப்படுகிறது.[15] இஞ்சி தேநீர் தயாரிக்கப் பூர்வீக இஞ்சி வகைகள் (சிறிய மற்றும் நார்ச்சத்து கொண்டவை) பயன்படுத்தப்படுகின்றன. ஏனெனில் இவை இறக்குமதி செய்யப்பட்ட இஞ்சி வகைகளை விடக் கடுமையானதாகக் கருதப்படுகிறது.[16]

சலாபத் பொதுவாகத் திசம்பர் மாதம் போன்ற ஒப்பீட்டளவில் குளிரான மாதத்தில் பரிமாறப்படுகிறது.[17] சோகோலேட்டுடன் (பாரம்பரிய சூடான சாக்லேட்), இது பொதுவாக பிபிங்கா அல்லது புட்டோ பம்போங் போன்ற பல்வேறு அரிசி அணிச்சல்களுடன் (ககானின்) பரிமாறப்படுகிறது. சலாபத் பாரம்பரியமாக நத்தார் பண்டிகையின் போது சிம்பாங் காபியில் ( விடியல் திருப்பலி) அதிகாலை தெரு வியாபாரிகளால் விற்கப்படுகிறது.[18][19] [20]

சலாபத் இருமல், தொண்டைப் புண் மற்றும் ஜலதோசத்திற்கு தொண்டைக்கு இதமான தீர்வாகவும் பரவலாக உட்கொள்ளப்படுகிறது. சலாபத் குடிப்பது பாடகரின் குரலை வளத்தினை மேம்படுத்தும் என்று பரவலாக நம்பப்படுகிறது.[13][14]

மஞ்சளைப் பிரத்தியேகமாகவோ அல்லது பகுதியாகவோ பயன்படுத்தும் சலாபத், விசயன் மற்றும் மிண்டானாவோ தீவுகளில் துலாவ், துவாவ் அல்லது துயாவ் என அழைக்கப்படுகிறது. சாங் திலாவ் (அதாவது "மஞ்சள் தேநீர்") பிலிப்பினோவில் வழங்கப்படுகிறது.[21]

தெற்காசியா

[தொகு]

இந்தியா

[தொகு]

இந்தியாவில், இஞ்சி தேநீர் அட்ராக் கி சாய் என்று அழைக்கப்படுகிறது மற்றும் இது பரவலாக உட்கொள்ளப்படும் பானமாகும். இது பால் மற்றும் சர்க்கரையுடன் காய்ச்சப்பட்ட கருப்பு தேநீரில் இஞ்சியை அரைத்து தயாரிக்கப்படுகிறது. பொதுவாக பயன்படுத்தப்படும் மற்றொரு மாறுபாட்டு தயாரிப்பு இஞ்சி எலுமிச்சை தேநீர் ஆகும். இது வெதுவெதுப்பான எலுமிச்சை சாறுடன் இஞ்சி வேரைச் சேர்த்து தயாரிக்கப்படுகிறது.[22]

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Ginger (Overview)". University of Maryland Medical Center. 22 June 2015. Retrieved 21 March 2016.
  2. "Ginger Tea with Orange Slices". Daytona Beach Morning Journal. 29 October 1971. Retrieved 22 March 2016.
  3. "Lemon Ginger Tea". The Evening News (Newburgh). 18 May 1988. Retrieved 22 March 2016.
  4. The Story of Tea: A Cultural History and Drinking Guide. Ten Speed Press. 2011. Retrieved 24 August 2019.
  5. 5.0 5.1 5.2 "Saenggang-cha" 생강차. Doopedia (in கொரியன்). Retrieved 23 October 2009.
  6. "8 Healthy Korean Teas To Enjoy Throughout The Year". 
  7. Korean Food Guide in English.
  8. "Sushi San, Restaurant Review: New sushi spot transforms former Felton home of Mama Mia's". 
  9. "Plen-tea-ful uses". Daily Express (Malaysia). 11 November 2015. Retrieved 22 March 2016.
  10. 10.0 10.1 10.2 Pepy Nasution (12 February 2010). "Wedang Jahe (Indonesian Ginger Tea)". Indonesia Eats. Archived from the original on 1 மார்ச் 2012. Retrieved 22 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  11. Anita (5 August 2013). "Wedang Teh Susu Jahe – Ginger Milk Tea". Daily Cooking Quest. Archived from the original on 27 மார்ச் 2016. Retrieved 22 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  12. Filipino Cookbook: 85 Homestyle Recipes to Delight Your Family and Friends.
  13. 13.0 13.1 Besa-Quirino, Betty. "Ginger Tea- Filipino Salabat with Lemon Honey". Asian in America. Retrieved 12 July 2021.
  14. 14.0 14.1 Baker, Liren. "Homemade Fresh Ginger Tea". Kitchen Confidante. Retrieved 12 July 2021.
  15. Padilla, L.D.E. (2012). "Instant salabat [ginger brew made easier and tastier"]. BAR Chronicle 13 (8): 16-17. https://businessdiary.com.ph/4263/instant-salabat-made-easier-and-tastier/. 
  16. Ginger value chain study in Nueva Vizcaya, Philippines (GCP/RAS/296/JPN).
  17. Caroline Joan Picart (January 2004). Inside Notes from the Outside. Lexington Books. pp. 48–. ISBN 978-0-7391-0763-8.
  18. Walker (1992). Oxford Symposium on Food and Cookery 1991: Public Eating : Proceedings. Oxford Symposium. ISBN 9780907325475.
  19. Long (2015). Ethnic American Food Today: A Cultural Encyclopedia. Rowman & Littlefield. ISBN 9781442227316.
  20. Conopio (4 December 2013). "Christmas special: Top 10 traditional Filipino food". https://www.asianjournal.com/life-style/travel/christmas-special-top-10-traditional-filipino-food/. 
  21. Edgie Polistico (2016). Philippine Food, Cooking, and Dining Dictionary. Anvil Publishing, Inc. ISBN 9786214200870.
  22. "Is Ginger High In Potassium - Dietaketocustomplan". dietaketocustomplan.com (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2021-11-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இஞ்சி_தேநீர்&oldid=4109827" இலிருந்து மீள்விக்கப்பட்டது