எலுமிச்சைப் புல்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
எலுமிச்சைப் புல்/தேசிப் புல் | |
---|---|
Lemon grass plant | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | ஒருவித்திலைத் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | Commelinids |
வரிசை: | Poales |
குடும்பம்: | Poaceae |
பேரினம்: | Cymbopogon Spreng. |
இனங்கள் | |
About 55, see text |
எலுமிச்சைப் புல்/தேசிப் புல் (ஆங்கிலம்: Lemongrass) என்பது ஒரு ஒருவித்திலைத் தாவரம் ஆகும். இது பச்சை நிறத்தில் காணப்படும். இதில் பல வகைகளும் உள்ளன.
இதன் முக்கியத்துவம்[தொகு]
இதில் பல மருத்துவ குணங்கள் உண்டு. இதனால் இதனை மக்கள் பொதுவாக உட்கொள்வது வழக்கம். புற்கள் அல்லது புல்வெளி என்பது பொதுவாக கால்நடைகளுக்கு உணவு அளித்து வருகின்றது. இதனால் இதனை (புல்வெளி) மேய்ச்சல் நிலம் என்றும் கூறுவர். பல கால்நடைகள் இதையே மிக முக்கியமான உணவாக உட்கொள்கின்றன. இது இந்தியாவைச் சார்ந்ததாகக் கருதப்பட்டாலும் தெற்காசியா நாடுகள், தென்கிழக்காசியா நாடுகள் மற்றும் அவுத்திரேலியா போன்ற பகுதிகளிலும் வெவ்வேறு வகையான எலுமிச்சைப் புல் இனங்களைக் காணலாம்.
இலங்கையின் மாத்தறை, அம்பாந்தோட்டை, மாத்தளை மாவட்டங்களில் இது வர்த்தகத்திற்காகப் பயிரிடப்படுகிறது. இலங்கையிலிருந்து அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு இதன் எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் எண்ணெய் பல்வேறு மருத்துவ குணங்களுக்கும் பயன்படுவதால் ஆயுர்வேத மருத்துவத்தில், குறிப்பாக தகர்வு, முறிவு போன்றவற்றுக்கு மருந்தளிப்பதில் இது முக்கியமான ஒன்றாகத் திகழ்கிறது.
உணவு[தொகு]
இப் புல்லின் கீழ் பகுதி ஒரு பணங் கிழங்கு போன்று பழுப்பு நிறத்தில் காணப்படும். அப் பகுதி உணவில் சேர்த்துக் கொள்ளப்படுவதால் உணவுக்கு வாசம் கிடைக்கின்றது.
நம்பிக்கைகள்[தொகு]
இவ்வகைப்புல்லால் செய்யப்படும் ஒரு வகை தேநீரினை பிரேசில் நாட்டுக்காரர்கள் பெரிதும் பயன்படுத்துகிறார்கள். அவை மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மையை குணப்படுத்துவதாக நம்புகிறார்கள். நைஜீரியாவில், இயற்கை மருத்துவர்கள் இதனை தொண்டை கமைச்சலுக்கும், காய்ச்சல் குறையவும் பயன்படுத்துகிறார்கள்.
மருத்துவ ஆராய்ச்சிகள்[தொகு]
இந்திய மருத்துவ ஆராய்ச்சியாளார்கள் புற்றுநோய்க்கான செல்களுடன் நடத்திய ஆராய்ச்சியில், எலுமிச்சைப்புல்லின் எண்ணெயானது அவற்றைக் குறைப்பதை கண்டுபிடித்துள்ளார்கள். பிரேசில் ஆராய்ச்சியாளர்கள் எலிகளை வைத்து நடத்திய சோதனையில், எலுமிச்சைப்புல் மன அழுத்தம் மற்றும் தூக்கமின்னமின்மையை குறைக்கவல்லது என்பதை கண்டறிந்துளார்கள். தென்ஆப்ரிக்க மருத்துவர்களோ வாயின் உள்ளே ஏற்படக்கூடிய பூஞ்சை மற்றும் மதுவம் ஆகியவற்றால் ஏற்படக்கூடிய நோய்களுக்கான தீர்வென தங்கள் ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளார்கள்.