இசுரவேல் நாட்டுப்பண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹா-திக்வா

ஆங்கிலம்: The Hope
הַתִּקְוָה
நம்பிக்கை
'ஹா-திக்வா' பாடல்வரிகள் மங்கலான இசுரேலிய தேசிய கொடியில்

 இசுரேல் தேசியம் கீதம்
இயற்றியவர்நப்தலி எர்ஸ் இம்பர், 1878
இசைசாம்யுஎல் கொஎன், 1888
சேர்க்கப்பட்டது1897 (முதலாவது சீயோனிய சபையில்)
1948 (உத்தியோக பூர்வமற்று)
2004 (உத்தியோக பூர்வமாக)
இசை மாதிரி
இசைக்கருவி

ஹதிக்வா (எபிரேயம்: הַתִּקְוָה, நம்பிக்கை) இசுரவேல் நாட்டுப்பண் ஆகும். இதனை உக்ரைனைச் சேர்ந்த யூத இனத்தவரான நப்தலி எர்ஸ் இம்பர் என்பவர் இயற்றினார்[1]. இவர் இசுரேல் நிலத்திற்கு 1880களில் புலம்பெயர்ந்தார்.

ஏறத்தாழ 2000-ஆண்டுகளாக இசுரேல் நிலப்பரப்பில் யூத இன மக்களின் விடுதலை வேட்கையையும் மற்றும் அவர்களின் இறைமையையும் இப்பாடல் கருப்பொருளாகக் கொண்டிருக்கிறது.

உத்தியோக பூர்வ வரிகள்

எபிரேயம் வட்டெழுத்து தமிழ்
எபிரேயம்: כֹּל עוֹד בַּלֵּבָב פְּנִימָה கொல் ‘ஒத் பலேவாவ் பெனிமா மனதில் இருக்கும் வரை,
எபிரேயம்: נֶפֶשׁ יְהוּדִי הוֹמִיָּה, னெஃபெஷ் யெஹுதி ஹொமியா, யூதனின் ஆன்மா ஏங்குகிறது,
எபிரேயம்: וּלְפַאֲתֵי מִזְרָח, קָדִימָה, உல்ஃபாதே மிஸ்ராக் கடிமா, பின் நோக்கி, கிழக்கே,
எபிரேயம்: עַיִן לְצִיּוֹן צוֹפִיָּה; ஆயின் லெட்சீயொன் ட்சொஃபியா; பார்க்கிறது சீயோன் நோக்கி ஒரு கண்;
 
எபிரேயம்: עוֹד לֹא אָבְדָה תִּקְוָתֵנוּ, ஒத் லொ அவ்தா திக்வதேனு, எம் நம்பிக்கை இன்னும் மறையவில்லை,
எபிரேயம்: הַתִּקְוָה בַּת שְׁנוֹת אַלְפַּיִם, ஹடிக்வஹ் பத் ஷ்னொத் அல்பயீம், 2000 வருடங்களின் நம்பிக்கை,
எபிரேயம்: לִהְיוֹת עַם חָפְשִׁי בְּאַרְצֵנוּ, லீயொத் அம் சொஃப்ஷீ பெ’அட்சேனு, எம் நாட்டில் சுதந்திரமாக,
எபிரேயம்: אֶרֶץ צִיּוֹן וִירוּשָׁלַיִם. எட்-சீயொன் யேருசாலாயேம். சீயோன் நாடு மற்றும் எருசலேம்.

தமிழில் எளிமைப்படுத்திய பாடல்

இதயத்தினுள் இருக்கும்படியே - இன்னும்
யூதனின் ஆன்மா ஏங்குகிறது
முன்னோக்கி, கிழக்கின் இறுதிவரை
சீயோனை ஒரு கண் கூர்ந்து நோக்கிறது

மக்கள் சுதந்திரமாக எம் தாயகம்
சீயோன் பூமியிலும் எருசலேமிலும்
சுதந்திரமாக இருக்க - 2000 வருட
எம் நம்பிக்கை இன்னும் அழியவில்லை.

மேற்கோள்கள்

  1. Jewish-Ukrainian bibliography (ஆங்கில மொழியில்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுரவேல்_நாட்டுப்பண்&oldid=2451406" இலிருந்து மீள்விக்கப்பட்டது