அமர் சோனர் பங்களா
இரவீந்திரநாத் தாகூர், அமர் சோனர் பங்களா பாடலை இயற்றி இசையமைத்தவர் | |
வங்காளதேசம் நாட்டுப்பண் கீதம் | |
இயற்றியவர் | இரவீந்திரநாத் தாகூர், 1906 |
இசை | இரவீந்திரநாத் தாகூர், 1906 |
சேர்க்கப்பட்டது | 1972 |
இசை மாதிரி | |
அமர் சோனர் பங்களா (வாத்தியம்) |
அமர் சோனர் பங்களா (வங்காள மொழி: আমার সোনার বাংলা, ஒலி. ஆமார் ஸோனார் பா₃ங்லா, மொ. 'என் பொன்னான வங்காளமே') என்பது வங்காளதேசத்தின் நாட்டுப்பண் ஆகும். அமர் சோனர் பங்களா எனத் தொடங்கும் இப்பாடலை 1906 ஆம் ஆண்டு இரவீந்திரநாத் தாகூர் எழுதியது. 1905 ஆம் ஆண்டு நடந்த வங்கப் பிரிவினைக்குப் பின் இப்பாடல் எழுதப்பட்டது. 1972 ஆம் ஆண்டு வங்காளதேசம் பாக்கித்தானிடமிருந்து விடுதலை பெற்றது. அப்போது இப்பாடலின் முதல் பத்து வரிகளைத் தமது நாட்டுப்பண்ணாக வங்கத்தேசம் அறிவித்தது. சன கண மன எனத் தொடங்கும் தாகூரின் பாடல் இந்தியாவின் நாட்டுப்பண் என்பது குறிப்பிடத்தக்கது.
வரிகள்
[தொகு]வங்க மொழியில் | தமிழ் ஒலிபெயர்ப்பு | தமிழ் மொழிபெயர்ப்பு[1] |
---|---|---|
আমার সোনার বাংলা |
ஆமார் ஸோநார் பாங்க்லா |
என் பொன்னான வங்காளமே |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி (22 சூன் 2016). "நாட்டுக்கொரு பாட்டு- 11: அண்டை நாட்டின் அழகான கீதம்!". தி இந்து (தமிழ்). பார்க்கப்பட்ட நாள் 22 சூன் 2016.