இசுரவேல் நாட்டுப்பண்
ஆங்கிலம்: The Hope | |
---|---|
הַתִּקְוָה நம்பிக்கை | |
![]() 'ஹா-திக்வா' பாடல்வரிகள் மங்கலான இசுரேலிய தேசிய கொடியில் | |
![]() | |
இயற்றியவர் | நப்தலி எர்ஸ் இம்பர், 1878 |
இசை | சாம்யுஎல் கொஎன், 1888 |
சேர்க்கப்பட்டது | 1897 (முதலாவது சீயோனிய சபையில்) 1948 (உத்தியோக பூர்வமற்று) 2004 (உத்தியோக பூர்வமாக) |
இசை மாதிரி | |
இசைக்கருவி |
ஹதிக்வா (எபிரேயம்: הַתִּקְוָה, நம்பிக்கை) இசுரவேல் நாட்டுப்பண் ஆகும். இதனை உக்ரைனைச் சேர்ந்த யூத இனத்தவரான நப்தலி எர்ஸ் இம்பர் என்பவர் இயற்றினார்[1]. இவர் இசுரேல் நிலத்திற்கு 1880களில் புலம்பெயர்ந்தார்.
ஏறத்தாழ 2000-ஆண்டுகளாக இசுரேல் நிலப்பரப்பில் யூத இன மக்களின் விடுதலை வேட்கையையும் மற்றும் அவர்களின் இறைமையையும் இப்பாடல் கருப்பொருளாகக் கொண்டிருக்கிறது.
உத்தியோக பூர்வ வரிகள்[தொகு]
எபிரேயம் | வட்டெழுத்து | தமிழ் |
---|---|---|
எபிரேயம்: כֹּל עוֹד בַּלֵּבָב פְּנִימָה | கொல் ‘ஒத் பலேவாவ் பெனிமா | மனதில் இருக்கும் வரை, |
எபிரேயம்: נֶפֶשׁ יְהוּדִי הוֹמִיָּה, | னெஃபெஷ் யெஹுதி ஹொமியா, | யூதனின் ஆன்மா ஏங்குகிறது, |
எபிரேயம்: וּלְפַאֲתֵי מִזְרָח, קָדִימָה, | உல்ஃபாதே மிஸ்ராக் கடிமா, | பின் நோக்கி, கிழக்கே, |
எபிரேயம்: עַיִן לְצִיּוֹן צוֹפִיָּה; | ஆயின் லெட்சீயொன் ட்சொஃபியா; | பார்க்கிறது சீயோன் நோக்கி ஒரு கண்; |
எபிரேயம்: עוֹד לֹא אָבְדָה תִּקְוָתֵנוּ, | ஒத் லொ அவ்தா திக்வதேனு, | எம் நம்பிக்கை இன்னும் மறையவில்லை, |
எபிரேயம்: הַתִּקְוָה בַּת שְׁנוֹת אַלְפַּיִם, | ஹடிக்வஹ் பத் ஷ்னொத் அல்பயீம், | 2000 வருடங்களின் நம்பிக்கை, |
எபிரேயம்: לִהְיוֹת עַם חָפְשִׁי בְּאַרְצֵנוּ, | லீயொத் அம் சொஃப்ஷீ பெ’அட்சேனு, | எம் நாட்டில் சுதந்திரமாக, |
எபிரேயம்: אֶרֶץ צִיּוֹן וִירוּשָׁלַיִם. | எட்-சீயொன் யேருசாலாயேம். | சீயோன் நாடு மற்றும் எருசலேம். |
தமிழில் எளிமைப்படுத்திய பாடல்[தொகு]
இதயத்தினுள் இருக்கும்படியே - இன்னும்
யூதனின் ஆன்மா ஏங்குகிறது
முன்னோக்கி, கிழக்கின் இறுதிவரை
சீயோனை ஒரு கண் கூர்ந்து நோக்கிறது
மக்கள் சுதந்திரமாக எம் தாயகம்
சீயோன் பூமியிலும் எருசலேமிலும்
சுதந்திரமாக இருக்க - 2000 வருட
எம் நம்பிக்கை இன்னும் அழியவில்லை.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Jewish-Ukrainian bibliography (ஆங்கில மொழியில்)