உள்ளடக்கத்துக்குச் செல்

கிமி ஙா யொ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிமி ஙா யொ

君が代
இசைஎழுத்து

 சப்பான் தேசிய கீதம்
இயற்றியவர்வகா பாட்டு, ஹெய்யன் காலம் (794-1185)
இசையொஷிஇஸா ஒகு, அகிமொரி ஹயாஷி மற்றும் ஃப்ரான்ஸ் எக்கெர்ட், 1880
சேர்க்கப்பட்டது1999
இசை மாதிரி
Kimigayo (Instrumental)

எம் பேரரசே, நின் இறை, அல்லது சப்பானிய மொழியில் கிமி கா யொ என அழைக்கப்படுகிற பாடல் சப்பானியப் பேரரசரைப் போற்றி பாடும் பாடல், இதுதாண் சப்பானின் நாட்டுப்பண் ஆகும். சப்பானின் நாட்டுப்பண்தான் உலகில் இசைக்கப்படும் நாட்டுப்பண்களில் மிகப் பழமையானது மற்றும் மிகச் சிறியதும் ஆகும். ஐந்து வரிகளுடன் 32 எழுத்துக்கள் கொண்டது. இப்பாடல் கி.பி 794 - கி.பி. 1185-ம் ஆண்டுகளில் சப்பானை ஆண்ட ஹையன் வம்சத்தின் காலத்தில் இயற்றப்பட்டது.[1] இதன் தற்போதைய இசைவடிவத்தில் 1880 முதல் இசைக்கப்படுகிறது. அதற்குமுன் இருந்த பிரபலமல்லாத இசைவடிவத்தில் இருந்து இது தற்போதைய இசைவடிவத்துக்கு மாற்றப்பட்டது. ஃகினொமரு கொடி ஏற்றும்பொழுது இப்பாடலை சப்பானிய குடிமக்கள் பாட கடமைப்பட்டுளார்கள்.பின்னணி இசையெல்லாம் சேர்த்து, இந்த கீதம் பாடி முடிக்க ஆகும் நேரம் - 58 வினாடிகள் ஆகும்.

சப்பானில் 1880-ம் ஆண்டின்போதே நாட்டுப்பண்ணாக இப்பாடல் தேர்வு செய்யப்பட்டு நடைமுறைக்கும் வந்துவிட்டது. 1945-ல், இரண்டாம் உலகப் போரில் தோல்வியை ஒப்புக்கொண்டு, சப்பானின் மன்னர் ஹிரோஹிடோ சரணடைந்தார். ஆனாலும் மன்னர் பதவியிலிருந்து, நீக்கப்படவில்லை. மறு ஏற்பாடு செய்யும் வரை அவரே மன்னராக நீடித்தார். முன்பு இருந்த நாட்டுப்பண்ணே தொடரட்டும் என்று மன்னர் முடிவுசெய்தார். இதனால் 1945-க்குப் பிறகும் அதுவேதான் இசைக்கப்பட்டது. மன்னராட்சியிலிருந்து, சப்பான் மக்களாட்சி மக்களாச்சிக்கு மாறியது. இது நடந்து அரை நூற்றாண்டுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், 1999-ம் ஆண்டில்தான், முறைப்படி சட்டம் இயற்றப்பட்டு, சப்பானின் நாட்டுப்பண் என்ற அங்கீகாரத்தைப் இப்பாடல் பெற்றது.

வாக்கா[தொகு]

இப்பாடல் வாக்கா எனும் யாப்பு வடிவைக்கொண்டது. இந்த யாப்பு வடிவம் மொத்தம் ஐந்து வரிகள் கொண்டது. சப்பானில் பண்டை காலத்தில் இலக்கியங்கள், பழஞ்சீன மொழியிலேயே இயற்றப்பட்டன. இவை ‘கன்ஷி' எனப்பட்டன. பண்டிதர்களின் மொழியாக சீன மொழி கொண்டாடப்பட்டது. சப்பானிய மொழியோ இரண்டாம்பட்சமாகப் பார்க்கப்பட்டது. இந்த அவல நிலையை போக்க சப்பானிய மொழியில் உருவானவையே ‘வாக்கா' பாடல்கள். இவை வெற்றியும் பெற்றன.[2]

வரிகள்[தொகு]

அலுவலியப் பயன்பாடு[3]
君が代は
千代に八千代に
さざれ石の
巌となりて
苔の生すまで

ஹிறகனா
きみがよは
ちよにやちよに
さざれいしの
いわおとなりて
こけのむすまで

உரோமன் எழுத்து[4]
Kimigayo wa
Chiyo ni yachiyo ni
Sazare-ishi no
Iwao to narite
Koke no musu made

ஆங்கிலம்
May your reign
Continue for a thousand, eight thousand generations,
Until the pebbles
Grow into boulders
Lush with moss

வட்டெழுத்து
கிமி ஙா யொ வா
சீயொ நி யாசீயோ நி,
ஸாட்சாரெ-இஷி நொ
இவாஓ தொ நாரித்தே
கோகே நொ மூசு மாதே

தமிழ்[5]
(இன்னும்) ஆயிரம், எண்ணாயிரம் தலைமுறைகளுக்கு,
(இன்றைய) சிறிய கூழாங்கற்கள்,
பச்சைத் தாவரங்கள் நிரம்பிய
குன்றுகளாக உயர்கிற (காலம்) வரை
நினது ஆட்சி தொடரட்டும்!

மேற்கோள்கள்[தொகு]

  1. "Japan – Kimigayo". NationalAnthems.me. பார்க்கப்பட்ட நாள் 2011-11-28.
  2. "உலகின் குட்டி தேசிய கீதம்". தி இந்து (தமிழ்). 4 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 4 மே 2016.
  3. |title=国旗及び国歌に関する法律 |publisher=Government of Japan |language=Japanese |date=1999-08-13 |accessdate=2008-01-17}}
  4. "National Flag and Anthem" (PDF). Web Japan. Japanese Ministry of Foreign Affairs. 2000. பார்க்கப்பட்ட நாள் 2009-12-11.
  5. "நாட்டுக்கொரு பாட்டு- 4: உலகின் குட்டி தேசிய கீதம்!". தி இந்து (தமிழ்). 4 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 17 சூன் 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிமி_ஙா_யொ&oldid=3759226" இலிருந்து மீள்விக்கப்பட்டது