நேபாள நாட்டுப்பண்
ஆங்கிலம்: We are Hundreds of Flowers நூற்றுக்கணக்கான பூக்களால் தொடுக்கப்பட்டது | |
---|---|
सयौं थुँगा फूलका | |
![]() | |
![]() | |
இயற்றியவர் | பிரதீப் குமார் ராய் பையாகுல் மய்லா |
இசை | அம்பீர் குருங் |
சேர்க்கப்பட்டது | 3 ஆகத்து 2007 |
நேபாள நாட்டுப்பண் ("Sayaun Thunga Phool Ka" நேபாள மொழி: सयौं थुँगा फूलका "நூற்றுக்கணக்கான பூக்களால் தொடுக்கப்பட்டது") என்பது நேபாள நாட்டுப்பண்ணாகும். இப்பாடல் நேபாள தேசிய திட்டக் குழுவின் தலைமையகத்தில் உள்ள சிங்க தர்பார் என்னும் அரங்கத்தில் இடைக்கால நாடாளுமன்ற அவைத்தலைவரான சுபாஷ் சந்திர நிம்வாங் என்பவரால் நேபாளத்தின் நாட்டுப்பண்ணாக அதிகாரப்பூர்வமாக 2007 ஆகத்து 3, அன்று அறிவிக்கப்பட்டது.[1][2][3] இதற்கு முந்தைய நாட்டுப்பண்ணான, ராஷ்ட்ரிய காணம் என்னும் பாடல் 1962 இல் இருந்து நாட்டுப்பண்ணாக இருந்துவந்தது.
நேபாள நாட்டுப்பண் வரிகள் கவிஞர் பையாகுல் மய்லா என்னும் பிரதீப் குமார் ராய் என்பவரால் எழுதப்பட்டது. இந்த பாடலுக்கு அம்பீர் குருங் என்பவரால் இசையமைக்கப்பட்டது. இந்த நாட்டுப்பண் எளிமையான சொற்களால் நேபாள இறையாண்மை, ஒற்றுமை, அஞ்சாமை, பெருமை, அழகு, முன்னேற்றம், அமைதி, கலாச்சாரம், உயிரியல் பண்மை போன்றவற்றை புகழ்ந்து எழுதப்பட்டுள்ளது.
வரலாறு[தொகு]
மே 19, 2006, அன்று நேபாள அரச பிரதிநிதிகள் அவை (பிரதிநிதி சபா) பழைய நாட்டுப்பண்ணை தாற்காலிகமாக நீக்கியது. 2006 நவம்பர் 30 ஆம் நாள் நாட்டுப்பண் தேர்வு பணி குழு (NASTT) கவிஞர் பையாகுல் மைலா (இயற் பெயர்: பிரதீப் குமார் ராய் ) என்பவரின் பாடலை நேபாளத்தின் புதிய நாட்டுப்பண்ணாக அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த புதிய நாட்டுப்பண் நாடு முழுவதும் இருந்து தேர்வுக்கு வந்த 1272 பாடல்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டது.[4]
2007 ஆகத்து 3 அன்று, சாயாயும் துங்கா ஃபூல் கா அதிகாரப்பூர்வமாக நேபாள பிரதிநிதிகள் அவையில் இப்பாடலை நேபாள நாட்டின் நாட்டுப்பண் என அறிவித்தது.
வரிகள்[தொகு]
நேபாளி வரிகள் | ||
---|---|---|
|
|
|
தமிழ் மொழிபெயர்ப்பு |
---|
|
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Nepalnews.com Mercantile Communications Pvt". 2009-03-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-05-12 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "eKantipur.com - Nepal's No.1 News Portal". 2007-09-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-05-12 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ officially declared as the new Nepal national anthem on August 3, 2007
- ↑ People's Daily Online - Nepali cabinet approves new national anthem