இசுப்ராட்லி தீவுகள்

ஆள்கூறுகள்: 10°N 114°E / 10°N 114°E / 10; 114
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இசுப்ராட்லி தீவுகள்
Spratly Islands
Kepulauan Spratly
Gugusan Semarang Peninjau
இசுப்ராட்லி தீவுகள்
புவியியல்
அமைவிடம்தென்சீனக் கடல்
ஆள்கூறுகள்10°N 114°E / 10°N 114°E / 10; 114
மொத்தத் தீவுகள்750
முக்கிய தீவுகள்இத்து அபா தீவு; நாம்யிட் தீவு பாரோலா தீவு, சின் கோவ் தீவு; சோங் து தாய் தீவு; இசுப்ராட்லி தீவு; லாயாங் லாயாங் தீவு; தித்து தீவு; யோர் பாராட் தீவு
நிர்வாகம்

இசுப்ராட்லி தீவுகள் ஆங்கிலம்: Spratly Islands; மலாய்: Kepulauan Spratly; பிலிப்பினோ மொழி: Kapuluan ng Kalayaan; சீனம்: 南沙群島/南沙群岛; வியட்நாமியம்: Quần đảo Trường Sa) என்பது தென் சீனக் கடலில் உள்ள சர்ச்சைக்குரிய ஒரு தீவுக்கூட்டம் ஆகும்.[1] இந்தத் தீவுக்கூட்டம் பல சிறிய பெரிய தீவுகள், சிறுதீவுகள், பள்ளத்தீவுகள், மற்றும் 100-க்கும் மேற்பட்ட பவளப் படிப்பாறைகளால் ஆனது. சில இடங்களில் நீரில் மூழ்கிய பழைய பவளப் பாறைகளால் தொகுக்கப்பட்டும் உள்ளது.[2]

இந்தத் தீவுக்கூட்டம் பிலிப்பீன்சு, மலேசியா மற்றும் தெற்கு வியட்நாம் நாடுகளின் கடற்கரைகளில் அமைந்துள்ளது. 1843-ஆம் ஆண்டில் இசுப்ராட்லி தீவுகளைக் கண்டுபிடித்த பிரித்தானிய திமிங்கல வேட்டையாடும் கப்பலின் தலைவர் ரிச்சர்ட் இசுப்ராட்லியின் (Richard Spratly) பெயரால் இந்தத் தீவுக்கூட்டத்திற்குப் பெயரிடப்பட்டது.

பொது[தொகு]

இசுப்ராட்லி தீவில் வியட்நாம் நாட்டின் உரிமை கோரல் நினைவுத்தூண்

இந்தத் தீவுகளில் 2 சதுர கிலோ மீட்டருக்கும் (490 ஏக்கர்) குறைந்த அளவிலான இயற்கை நிலப்பரப்பு மட்டுமே உள்ளது. இருப்பினும், 425,000 சதுர கிலோ மீட்டர் (164,000 சதுர மைல்) பரப்பளவில் பரவியுள்ளது.

இசுப்ராட்லி தீவுகள் தென் சீனக் கடலில் உள்ள முக்கிய தீவுக்கூட்டங்களில் ஒன்றாகும். அதே வேளையில், இந்தத் தீவுகள், தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நாடுகளின் நிர்வாகத்தையும் பொருளாதாரத்தையும் சிக்கலாக்கி வருகின்றன. ஏனெனில் இந்தத் தீவுகள், இந்த வட்டாரத்தின் முதன்மையான கப்பல் போக்குவரத்து வழித்தடங்களில் அமைந்துள்ளன. அதனால் தென் சீனக் கடல் பகுதியில் உள்ள நாடுகள் இந்தத் தீவுகளின் மீது உரிமைகள் கோரி வருகின்றன.[3]

இந்தத் தீவுகளின் பெரும்பாலானவற்றில் மக்கள் வசிக்கவில்லை. ஆனால் மீன்பிடித் தளங்கள் நிறைய உள்ளன. மேலும் அவை குறிப்பிடத்தக்க எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இருப்புக்களைக் கொண்டிருக்கலாம் என்றும் அறியப்படுகிறது.[4]

உரிமைகோரும் நாடுகள்[தொகு]

இவற்றின் காரணமாக, இந்தத் தீவுகளில், பன்னாட்டு எல்லைகளை நிறுவுவதற்கான முயற்சிகளில் உரிமைகோரும் நாடுகள் பற்பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஒரு சில தீவுகளில் மட்டுமே பொதுமக்களின் குடியிருப்புகள் உள்ளன. ஆனாலும் ஏறத்தாழ 45 தீவுகளில், மலேசியா, பிலிப்பீன்சு, சீனா, தைவான், வியட்நாம் ஆகிய நாடுகளின் இராணுவப் படைகளின் கட்டமைப்புகள் உள்ளன.[5]

தற்போது இசுப்ராட்லி தீவுகளின் தென்கிழக்கு பகுதியை, புரூணையின் சிறப்புப் பொருளாதார மண்டலம் என புரூணை நாடும் உரிமை கோரி வருகிறது.[3][4]

நீரகக்கரிம இருப்புகள்[தொகு]

2012-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி இசுப்ராட்லி தீவுகளில் உள்ள நீரகக்கரிம (Hydro Carbon) இருப்புகள், ஏறக்குறைய 26.3 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் என நம்பப்படுகிறது.[6]

இசுப்ராட்லி தீவுகளில் குறைந்தது 3 மீன்பிடி துறைமுகங்கள்; பல கப்பல்துறைகள்; 3 உலுங்கூர்தித் தளங்கள்; மற்றும் 6 - 8 சிறிய வானூர்தி நிலையங்கள் (Short Take Off and Landing Airports STOL) உள்ளன என்று அறியப்படுகிறது. இசுப்ராட்லி தீவுகளில் வேளாண் விளைநிலங்கள் எதுவும் இல்லை. பெரும்பாலான தீவுகளில் மக்களும் வசிக்கவில்லை. ஒரு சில தீவுகளில் மட்டுமே நிரந்தரமான குடிநீர் விநியோகம் உள்ளது. பொதுமக்கள் வாழ்வதற்கான அடிப்படை வசதிகள் இல்லாத சிறுசிறு தீவுகளே இந்தத் தீவுக் கூட்டத்தில் மிகுதியாக உள்ளன.[4][6]

பல வகையான மீன்கள், பறப்பன ஊர்வன எச்சங்கள், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவை இயற்கை வளங்களில் அடங்கும். வணிக அடிப்படையிலான மீன்பிடித்தல், கப்பல் போக்குவரத்து, எண்ணெய் மற்றும் எரிவாயு தன்னலப் படுத்தல்; மற்றும் மிக அண்மையில் சுற்றுலாச் செயல்பாடுகள் போன்றவை பொருளாதார நடவடிக்கைகளாகும்.[7]

பிலிப்பீன்சு - சீனா மனக்கசப்புகள்[தொகு]

இசுப்ராட்லி தீவுகள் பல முதன்மையான கப்பல் பாதைகளுக்கு அருகில் அமைந்துள்ளதால் இந்தத் தீவுகளின் மீது இதுவரையிலும் 7 நாடுகள் உரிமை கோரி உள்ளன. ஐக்கிய நாடுகள் அவையின் கடல் சட்ட சாசனத்தின் (United Nations Convention on the Law of the Sea (UNCLOS) அடிப்படையில் சனவரி 2013-இல், பிலிப்பீன்சு அரசாங்கம் சீனாவுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியது. சூலை 12, 2016 அன்று, ஐக்கிய நாடுகள் அவையின் நடுவர் மன்றம் பிலிப்பீன்சுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.[8][9]

தைவான் மற்றும் சீனா ஆகிய இரண்டும் முழு இசுப்ராட்லி தீவுகள் கூட்டத்தையும் உரிமை கோருகின்றன; மற்ற நாடுகள் அவற்றின் ஒரு சில பகுதிகளை மட்டுமே உரிமை கோருகின்றன.[10]

மலேசியா - சீனா உறவுகள்[தொகு]

2010-இல், மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் பின் முகமது, சீனாவுடனான ஒத்துழைப்பின் மூலம் சீனாவின் பொருளாதார வளர்ச்சியிலிருந்து மலேசியா நன்மை பெற முடியும் என்று கருத்துரைத்தார்.[11] . 'சீனா யாருக்கும் அச்சுறுத்தலாக இல்லை' என்றும்; 'சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து கவலைப்பட வேண்டாம்' என்றும் அவர் கூறினார். சீனாவை ஐக்கிய அமெரிக்கா தூண்டிவிட்டு, சீனாவின் அண்டை நாடுகளைச் சீனாவுக்கு எதிராகத் திசை திருப்ப முயற்சிப்பதாக ஐக்கிய அமெரிக்கா மீது குற்றம் சாட்டினார்.[12]

இருப்பினும் மார்ச் 2013-இல், இசுப்ராட்லி தீவுகளில் உள்ள ஜேம்ஸ் மணல் திட்டில், சீனா நடத்திய இராணுவப் பயிற்சிகள் குறித்து மலேசிய அதிகாரிகள் அதிகமாய் அக்கறை காட்டவில்லை.[13]

சீனா மீது மலேசியாவின் கண்டனம்[தொகு]

அப்போதைய மலேசிய தற்காப்பு அமைச்சர் இசாமுடின் உசேன், சீனாவுடன் மலேசியா இணைந்து செயல்படலாம் என்றும்; தென் சீனக் கடலில் சீனா ரோந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதில் மலேசியாவுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும் கூறினார்.[14] [15]

இருப்பினும், தற்போது வரை இசுப்ராட்லி தீவுகள் சர்ச்சையில் ஈடுபட்டுள்ள நாடுகளுடன் மலேசியா சமநிலை உறவுகளைப் பேணி வருகிறது.[114] ஆனால், 2015-ஆம் ஆண்டுக்குப் பின்னர், மலேசியக் கடல் எல்லைக்குள் சீனா அத்துமீறி நுழையத் தொடங்கியதில் இருந்து, சீனாவைக் கண்டிப்பதில் மலேசியா தீவிரமாக உள்ளது.[16] [17][18][19]

காட்சியகம்[தொகு]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. Anda, Redempto (17 July 2012). "Government told of China buildup 2 months ago". Philippine Inquirer இம் மூலத்தில் இருந்து 2 November 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131102073530/http://globalnation.inquirer.net/44553. 
 2. Claudius Madrolle (1939). "La question de Hai-nan et des Paracels" (in fr). Politique étrangère 4 (3): 302–312. doi:10.3406/polit.1939.5631. http://www.persee.fr/doc/polit_0032-342x_1939_num_4_3_5631. பார்த்த நாள்: 7 May 2016. 
 3. 3.0 3.1 Owen, N. A. and C. H. Schofield, 2012, Disputed South China Sea hydrocarbons in perspective. Marine Policy. vol. 36, no. 3, pp. 809–822.
 4. 4.0 4.1 4.2 "Why is the South China Sea contentious?". BBC. July 12, 2016. https://www.bbc.com/news/world-asia-pacific-13748349?piano-modal. 
 5. "Q&A: South China Sea dispute". BBC News. 13 June 2011 இம் மூலத்தில் இருந்து 17 October 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131017162612/http://www.bbc.co.uk/news/world-asia-pacific-13748349. 
 6. Mark E. Rosen (18 July 2016). "China Has Much to Gain From the South China Sea Ruling" (in en-US). The Diplomat இம் மூலத்தில் இருந்து 28 April 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170428051012/https://thediplomat.com/2016/07/china-has-much-to-gain-from-the-south-china-sea-ruling/. 
 7. "The Impact of Artificial Islands on Territorial Disputes Over The Spratly Islands, by Zou Keyuan". Archived from the original on 10 April 2016. பார்க்கப்பட்ட நாள் 7 May 2016.
 8. "PCA Case Nº 2013–19" (PDF). Permanent Court of Arbitration. 12 July 2016.
 9. Tom Phillips; Oliver Holmes; Owen Bowcott (12 July 2016). "Beijing rejects tribunal's ruling in South China Sea case". The Guardian இம் மூலத்தில் இருந்து 12 July 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160712220441/https://www.theguardian.com/world/2016/jul/12/philippines-wins-south-china-sea-case-against-china. 
 10. Wortzel, Larry M.; Higham, Robin D. S. (1999). Dictionary of Contemporary Chinese Military History (illustrated ed.). ABC-CLIO. p. 180. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-313-29337-5. Archived from the original on 1 January 2016. பார்க்கப்பட்ட நாள் 16 December 2015.
 11. "Mahathir: China no threat to Malaysia". The Star (Malaysia). 27 April 2010 இம் மூலத்தில் இருந்து 30 April 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100430165347/http://biz.thestar.com.my/news/story.asp?file=%2F2010%2F4%2F27%2Fbusiness%2F6136931&sec=business. 
 12. Kazuto Tsukamoto (9 November 2011). "Malaysia's Mahathir says China is no threat". The Asahi Shimbun இம் மூலத்தில் இருந்து 17 May 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140517120553/https://ajw.asahi.com/article/asia/around_asia/AJ2011110916910. 
 13. Shahriman Lockman (24 April 2013). "Why Malaysia isn't afraid of China (for now)". The Strategist: The Australian Strategic Policy Institute Blog. Archived from the original on 17 May 2014. பார்க்கப்பட்ட நாள் 14 May 2014.
 14. Haslinda Amin (29 August 2013). Malaysia Breaks Ranks on South China Sea (video). First Up. Bloomberg. Archived from the original on 17 May 2014. பார்க்கப்பட்ட நாள் 14 May 2014.
 15. "Malaysia splits with ASEAN on China Sea threat". Bloomberg. Business Mirror. 29 August 2013. Archived from the original on 17 May 2014. பார்க்கப்பட்ட நாள் 14 May 2014.
 16. Camille Diola (25 June 2014). "Why Malaysia, unlike Philippines, keeps quiet on sea row". The Philippine Star இம் மூலத்தில் இருந்து 27 June 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140627165932/http://www.philstar.com/headlines/2014/06/25/1338864/why-malaysia-unlike-philippines-keeps-quiet-sea-row. 
 17. "Presence of China Coast Guard ship at Luconia Shoals spooks local fishermen". The Borneo Post. 27 September 2015 இம் மூலத்தில் இருந்து 29 September 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150929005731/http://www.theborneopost.com/2015/09/27/presence-of-china-coast-guard-ship-at-luconia-shoals-spooks-local-fishermen/. 
 18. "Malaysia lodges diplomatic protest against intrusion at Beting Patinggi Ali". Bernama. The Rakyat Post. 15 August 2015. Archived from the original on 29 September 2015. பார்க்கப்பட்ட நாள் 16 August 2015.
 19. Ben Blanchard; Richard Pullin (18 October 2015). "Malaysia slams China's 'provocation' in South China Sea". Channel News Asia. Reuters. Archived from the original on 19 October 2015. பார்க்கப்பட்ட நாள் 20 October 2015.

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுப்ராட்லி_தீவுகள்&oldid=3938398" இலிருந்து மீள்விக்கப்பட்டது