சலாமி வெட்டும் உத்திகள்
சலாமி வெட்டும் உத்திகள் அல்லது சலாமி தந்திரங்கள் அல்லது சலாமி தாக்குதல்கள் [1]என்பது பல சின்னச் சின்ன செயல்கள் செய்வதன் மூலம் முடிவில் ஒரு பெரிய வெற்றியை பெரும் உத்தி ஆகும். எடுத்துக்காட்டாக எதிரி நாட்டின் எல்லைப்புறப் பகுதிகளில் மெல்ல மெல்ல அடி எடுத்து வைத்து உட்புகுந்து ஆக்கிரமிப்பு செய்தல். ஆக்கிரமிப்பை எதிரி தட்டிக் கேட்டால், ஆக்கிரமித்த இடத்திலிருந்து சிறிது தொலைவிற்கு பின்வாங்குவது போல் காண்பித்து, மீண்டும் எதிரி நாட்டின் எல்லைப்புற பகுதிகளில் உட்புகுந்து இராணுவ நிலைகளைப் பலப்படுத்தி, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுடன், ஆக்கிரமித்த பகுதிகளை தங்களதே என சொந்தம் கொண்டாடுவது சலாமி வெட்டும் உத்தியின் நோக்கமாகும்.
அரசியல் ரீதியாக இந்த சொல்லானது, அண்டை நாடுகளின் எதிர்ப்பை சமாளிக்க பயன்படுத்தப்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் கூட்டணிகளின் பிளவு மற்றும் வெற்றி செயல்முறையை விவரிக்க பயன்படுத்தப்படுகிறது. சலாமி வெட்டும் திட்டத்தின் மூலம் ஒரு ஆக்கிரமிப்பாளர் ஒரு நிலப்பரப்பில் செல்வாக்கு செலுத்தி இறுதியில் அந்நிலத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவர். சில சமயங்களில் ஒரு எதிர் அரசியல் கட்சியில் பல பிரிவுகளை உருவாக்குவதும், அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட கட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவோ அல்லது எதிர்வினையாற்றவோ வாய்ப்பளிக்காமல், உள்ளிருந்து சிதைப்பதும் சலாமி வெட்டும் தந்திரங்களில் அடங்கும். சலாமி தந்திரோபாயங்கள் வெற்றியடையும் போது அதன் குற்றவாளிகள் தங்களுடைய உண்மையான நீண்ட கால நோக்கங்களை மறைத்து வைத்துக்கொண்டு, படிப்படியான அடிபணியலில் ஈடுபடும் போது கூட்டுறவு மற்றும் பொருளதவி அல்லது பண உதவி செய்யும் செய்வர்[2]
நிதி ரீதியாக, "சலாமி தாக்குதல்" என்ற சொல், கண்ணுக்குத் தெரியாத சிறிய தொகைகளை திரும்பத் திரும்பப் பரிமாற்றம் செய்வதன் மூலம் பெரிய தொகைகள் மோசடியாகக் குவிக்கப்படும் திட்டங்களை விவரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.[3]
சீனாவின் சலாமி ஸ்லைஸ் உத்தி
[தொகு]தென்சீனக் கடலில் சீனா தனது இருப்பை படிப்படியாக அதிகரிக்க சீனா சலாமி ஆக்கிரமிப்பு உத்தியைப் பயன்படுத்துகிறது என ஐரோப்பிய நாடாளுமன்றம் குற்றம் சாட்டியுள்ளது.[4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Slantchev, Branislav. "Deterrence and Compellence" (PDF). ucsd.edu. University of California at San Diego. Archived (PDF) from the original on February 9, 2018. Retrieved January 18, 2018.
- ↑ "Salami Tactics". www.johndclare.net. Retrieved 2023-03-04.
- ↑ Ince, Darrel (19 September 2013). "Salami attack". Dictionary of the Internet. Oxford University Press. ISBN 978-0-19-174415-0.
- ↑ China tightens its grip over the South China Sea
- ↑ தென்சீனக் கடல் மூதாதையர் வழி சொத்து: ஒரு செ.மீ. பகுதியை கூட இழக்க முடியாது- சீன அரசு திட்டவட்டம்