உள்ளடக்கத்துக்குச் செல்

இசுபிலோர்னிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இசுபிலோர்னிசு
கொண்டை பாம்புண்ணிக் கழுகு (இசுபிலோர்னிசு சீலா)
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
அக்சிப்பிட்ரிபார்மிசு
குடும்பம்:
அக்சிப்பிட்ரிடே
பேரினம்:
ஜி. ஆர். கிரே, 1840[1]

இசுபிலோர்னிசு (Spilornis) என்பது அசிபிட்ரிடே குடும்பத்தில் உள்ள கொன்றுண்ணிப் பறவை பேரினமாகும். முதிர்ச்சியடைந்த பறவைகள் அனைத்தும் அடர்நிற கொண்டைகளுடன் பிரகாசமான மஞ்சள் கண்களையும் அலகுப்பூவினையும் கொண்டது.[2] இந்த நடுத்தர அளவிலான இரைவாரிச் செல்லும் பறவை தெற்கு ஆசியாவின் காடுகளில் காணப்படுகின்றன. இவை பாம்பு-கழுகுகள் என்று அழைக்கப்படுகின்றன. திரையோட்ரியோர்கிசு மற்றும் யூட்ரியோர்கிசு பேரினத்தினைச் சேர்ந்த இரண்டு ஆப்பிரிக்கச் சிற்றினங்களுடன் இதன் பொதுப் பெயர் பகிரப்பட்டுள்ளது.[2]

சொற்பிறப்பியல்

[தொகு]

கிரேக்கம்: σπιλοςspilos “spot”; ορνις ornis, ορνιθος ornithos “bird”.[3]

சிற்றினங்கள்

[தொகு]

பாரம்பரியமாக வரையறுக்கப்பட்டபடி, இந்த பேரினத்தில் 6 சிற்றினங்கள் உள்ளன. பல சிறிய தீவு பறவைகள், பொதுவாகக் கொண்டை பாம்புண்ணிக் கழுகு குழுவில் சேர்க்கப்பட்டவை , தனி சிற்றினங்களாகப் பிரிக்கப்பட வேண்டும் என்று முன்மொழியப்பட்டது.[2]

படம் விலங்கியல் பெயர் பொதுப் பெயர் பரவல்
இசுபிலோர்னிசு எல்கினி அந்தமான் பாம்புக் கழுகு தென்கிழக்கு இந்தியாவில் உள்ள அந்தமான் தீவுகள்
இசுபிலோர்னிசு குளோசி பெரிய நிக்கோபார் பாம்புண்ணிக் கழுகு பெரிய நிக்கோபார் இந்தியத் தீவு
இசுபிலோர்னிசு உரூபிபெக்டசு சுலாவெசி பாம்பு கழுகு இந்தோனேசியாவில் சுலாவெசி
இசுபிலோர்னிசு சீலா கொண்டை பாம்புண்ணிக் கழுகு இந்தியத் துணைக்கண்டம், தென்கிழக்கு ஆசியா மற்றும் கிழக்குகாசியா முழுவதும்
இசுபிலோர்னிசு கோலோசுபிலசு பிலிப்பீன்சு பாம்புக் கழுகு பிலிப்பீன்சு
இசுபிலோர்னிசு கினாபாலுயென்சிசு மலை பாம்புக் கழுகு வடக்கு போர்னியோ

மேற்கோள்கள்

[தொகு]
  1. Gray, George Robert (1840). A List of the Genera of Birds. Richard and John E. Taylor. p. 3.
  2. 2.0 2.1 2.2 Ferguson-Lees & Christie (2001).
  3. Handbook of the Birds of the World Alive.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுபிலோர்னிசு&oldid=3762625" இலிருந்து மீள்விக்கப்பட்டது