பிலிப்பீன்சு பாம்புக் கழுகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிலிப்பீன்சு பாம்புக் கழுகு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இசுபிலோர்னிசு

வெயிலோட், 1816
இனம்:
இ. கோலோசுபிலசு
இருசொற் பெயரீடு
இசுபிலோர்னிசு கோலோசுபிலசு
விகோர்சு, 1831

பிலிப்பீன்சு பாம்புக் கழுகு (Philippine serpent eagle)(இசுபிலோர்னிசு கோலோசுபிலசு) என்பது பிலிப்பீன்சின் முக்கிய தீவுகளில் காணப்படும் கழுகுச் சிற்றினம் ஆகும். இது சில சமயங்களில் கொம்பு பாம்புக் கழுகின் (இசுபிலோர்னிசு சீலா) இனமாக கருதப்படுகிறது. இந்த இனம் பொதுவாக காடுழிக்கப்பட்ட இடங்கள், திறந்த வனப்பகுதிகள் மற்றும் சில சமயங்களில் பரவலான மரங்கள் கொண்ட விவசாய நிலங்களில் காணப்படுகிறது. இது பிலிப்பீசு நாட்டில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும். பலவானைத் தவிர, முக்கிய தீவுகளின் பெரும்பாலான பகுதிகளில் இந்த சிற்றினம் காணப்படுகிறது.

வாழ்விடம்[தொகு]

பிலிப்பீன்சு பாம்புக் கழுகு முதன்மை மற்றும் இரண்டாம் நிலை காடுகளில் வாழ்கிறது. இப்பறவையானது பெரும்பாலும் வெட்டவெளிகள் மற்றும் ஆற்றுப் பள்ளத்தாக்குகள் மீது பறந்து செல்வதைக் காணலாம்.

உணவு[தொகு]

பிலிப்பீன்சு பாம்புக் கழுகு நீர்நில வாழ்வன, ஊர்வன மற்றும் பிற இரைகளை உண்கிறது.

விளக்கம்[தொகு]

பிலிப்பீன்சு பாம்புக் கழுகு

பிலிப்பீன்சு பாம்பு கழுகு மற்ற வகை பாம்பு கழுகுகளிலிருந்து மிகவும் நன்கு வரையறுக்கப்பட்ட புள்ளிகள் மற்றும் இறக்கைகள் மூலம் வேறுபடுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Spilornis holospilus". IUCN Red List of Threatened Species 2016: e.T22695318A93502499. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22695318A93502499.en. https://www.iucnredlist.org/species/22695318/93502499. பார்த்த நாள்: 12 November 2021. 

வெளி இணைப்புகள்[தொகு]