மலை பாம்புக் கழுகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலை பாம்புக் கழுகு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
வெயிலோட், 1816
இனம்:
இ. கினாபலுயென்சிசு
இருசொற் பெயரீடு
இசுபிலோர்னிசு கினாபலுயென்சிசு
இசுகலேட்டர், 1919

மலை பாம்புக் கழுகு (Mountain serpent eagle)(இசுபிலோர்னிசு கினாபலுயென்சிசு), கினாபாலு பாம்பு கழுகு என்றும் அழைக்கப்படுகிறது. இது வடக்கு போர்னியோவில் காணப்படும் கொன்றுண்ணிப் பறவையாகும். இது 1,000–4,100 மீட்டர்கள் (3,300–13,500 அடி) உயரத்தில் காணப்படுகிறது. காட்டில், குறிப்பாக இதன் வளர்ச்சி குன்றியதாக இருக்கும். இவற்றின் பரவலில் ஒன்றுடன் ஒன்று சேரும் இடத்தில், கொண்டை பாம்புண்ணிக் கழுகு பொதுவாகக் குறைந்த உயரத்தில் காணப்படும். மலை பாம்புக் கழுகு, கொண்டை பாம்புண்ணிக் கழுகின் போர்னிய துணையினத்தை விட அடர் நிறத்திலானது.

மலை பாம்புக் கழுகு வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது. இருப்பினும், இவை கினாபாலு தேசிய பூங்கா மற்றும் குனுங் முலு தேசிய பூங்காவில் காணப்படுகின்றன. இவற்றின் உயரமான வாழ்விடங்கள் பொதுவாக மரம் வெட்டுவதற்கும் விவசாயத்துக்கும் பயன்படுத்த வழிவகை இல்லாததால் இதன் வரம்பில் பாதுகாப்பாக உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2022). "Spilornis kinabaluensis". IUCN Red List of Threatened Species 2022: e.T22695306A208073439. https://www.iucnredlist.org/species/22695306/208073439. பார்த்த நாள்: 28 July 2022. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலை_பாம்புக்_கழுகு&oldid=3759797" இலிருந்து மீள்விக்கப்பட்டது