ஆல்பிரட் ரோசன்பெர்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆல்பிரட் ரோசன்பெர்க்

ஆல்பிரட் ரோசன்பெர்க் -(இந்த ஒலிக்கோப்பு பற்றி Alfred Rosenberg),(ஜனவரி 12, 1893அக்டோபர் 16, 1946) , ஜெர்மன் நாசிக் கட்சியின் அறிவுத்திறன் மிக்கத் தலைவர்களில் ஒருவராவார். இவர் கட்டிடக்கலையை ரஷ்யாவிலுள்ள ரிகா தொழிற்கல்வி நிலையத்திலும், பொறியாளராக மாஸ்கோ உயர் தொழில் நுட்பப் பள்ளியிலும் பயின்றார். அதேப்பள்ளியில் 1917 ம் ஆண்டில் முனைவர் பட்டமும் பெற்றார். அப்பொழுது ரஷ்யப்புரட்சி ரஷ்யாவில் நடைபெற்றுக்கொண்டிருந்தது இவர் ரஷ்யப்புரட்சி எதிர்ப்பாளர்களுக்கு அப்பொழுது இவர் ஆதரவளித்தார். இவரை டையட்ரிச் எக்கார்ட் என்னும் தேசிய ஜெர்மன் தொழிலாளர் கட்சித் தலைவர் இட்லரிடம் அறிமுகம் செய்தார். அது முதல் நாசி அரசாங்கத்தின் செயல் வடிவங்களை உருவாக்குவதில் பெரும்பங்காற்றினார். இனவெறிக்கொள்கை, யூதபகைமை, வெர்செய்ல் ஒப்பந்தங்களை மீறுதல் போன்ற செயல்களில் இவருடைய தாக்கம் அதிகமிருந்தது. கிருத்துவத்தை (Christianity) வெறுத்தார். கிருத்துவத்தை நடைமுறைக்குகந்த சமயமாக (Positive Christianity) மாற்ற முனைந்தார். இவர் இரண்டாம் உலகப்போருக்குப்பின் அமைக்கப்பட்ட நியூரம்பெர்க் விசாரணை ஆணையத்தினால் யுத்த விதி மீறல் குற்றத்திற்காக தூக்குத்தண்டணை விதிக்கப்பட்டு அக்டோபர் 16, 1946 ,ல் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டார். எர்மன் கோரிங் க்கும் இவருக்கும் ஒரே நாளில் தூக்குத்தண்டணை விதிக்கப்பட்டது ஆனால் முன் நாள் இரவில் கோரிங் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்பிரட்_ரோசன்பெர்க்&oldid=1352332" இருந்து மீள்விக்கப்பட்டது