ஆர். பால்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆர்.பால்கி
R. Balki.jpg
பிறப்புகும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு
மற்ற பெயர்கள்ஆர்.பால்கி
பணிமுன்னாள் குழுத் தலைவர் உலோவா இலிந்தேசு, திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர்
வாழ்க்கைத்
துணை
கெளரி சிண்டே (2007)

ஆர். பாலகிருட்டிணன் (R. Balakrishnan) என்பவர் ஆர். பால்கி [1][2] என பிரபலமாக அழைக்கப்படும் ஓர் இந்தியத் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். ஒரு திரைக்கதை ஆசிரியராகவும் உலோவா இலிந்தேசு என்ற இந்திய விளம்பர நிறுவனத்தின் குழுத் தலைவராகவும் பால்கி அறியப்படுகிறார், 2007 ஆம் ஆண்டு அமிதாப்பச்சன், தபு நடித்து வெளிவந்த சீனிக் கம் 2007) மற்றும் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த பா, அக்சய குமார், சோனம் கபூர் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த பேடு மேன் போன்ற திரைப்படங்களை இயக்கியதன் மூலம் ஓர் இயக்குனராகவும் இவர் அறியப்படுகிறார்.

தொழில்[தொகு]

இவர் தனது 23 ஆவது வயதில் முத்ரா என்ற செய்தி நிறுவனத்தில் ஒரு பணியாளராக தன் வாழ்க்கையைத் தொடங்கினார். இவரது விருப்பம் எப்போதும் திரைப்படம் தயாரிப்பது என்பதாகவே இருந்தது. கல்லூரி படிப்பு முடிந்ததும் சென்னை திரைப்படக் கல்லூரியில் இயக்குனர் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பித்தார். ஆனால் நேர்முக தேர்வு நடத்திய குழுவினருடன் இருந்த கருத்து வேறுபாடு காரணமாக பால்கி அங்கிருந்து வெளியேறினார். அதற்குப்பின் கணினி அறிவியல் பயன்பாடு பாடத்தில் முதுகலை பட்டப் படிப்பில் சேர்ந்தார். அவருக்கு கணினி விருப்பமானதாக இருந்ததால் இந்த படிப்பை சிறப்பாக முடித்துவிடலாம் என எண்ணினார். மூன்று ஆண்டு கால படிப்பின் இறுதி ஆண்டில் கல்லூரிக்கான வருகை பதிவு குறைந்ததால் கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

முத்ரா விளம்பர நிறுவனத்தில் பணிபுரிவதற்கான செய்தித்தாள் விளம்பரத்தை பார்க்க நேரிட்டது. அந்த விளம்பரத்தில் விண்ணப்பிக்கும் நபர்கள் அவர்கள் யார் என்று விவரித்து 100 வார்த்தைகளை அனுப்புமாறு கேட்கப்பட்டிருந்தது. கல்லூரி தேர்வை எழுதமுடியாத நிலையில் இருந்த காரணத்தால் பால்கி வேலைக்காக விண்ணப்பித்தார். வேலை கிடைத்தது. முத்ரா நிறுவனத்தின் நிறுவனர் ரமேசு சிப்பியை தனது குருவாக ஏற்று அவரைப் பின்பற்றி வாழ்க்கையை தொடங்கினார். விளம்பரத்துறையில் ரமேசு சிப்பி போல் வரவேண்டும் என நினைத்தார்.

ஐடியா செல்லுலார், டாடா தேநீர், சர்ப் எக்சல் போன்ற பொருட்களின் தொலைக்காட்சி விளம்பரங்களுக்காக இவர் உருவாக்கிய புதிய உத்திகள் மற்றும் வசன்ங்கள் பெரும் வெற்றியைக் கொடுத்து இவருக்கு அடையாளமாயின. அமிதாப்பச்சனும் தபுவும் நடித்த சீனிக்கம் என்ற திரைப்படத்தை 2007-ஆம் ஆண்டில் திரைக்கதை எழுதி இயக்கினார், இரண்டாவது திரைப்படமான பா என்ற திரைப்படம் வியாபார நோக்கில் பெரிய வெற்றியை கொடுத்தது. சுனில் மஞ்சந்தா இப்படத்தை தயாரித்திருந்தார். 2009 டிசம்பர் 4 ஆம் தேதி படம் திரையிடப்பட்டது. படத்தில் அமிதாப், அவரது மகன் அபிசேக்பச்சன் மற்றும் வித்யாபாலன் ஆகியோர் நடித்திருந்தனர், பால்கியின் மூன்றாவது திரைப்படம் சமிதாப். இதில் பாலிவுட் நட்சத்திரம் அமிதாப்பச்சன், கோலிவுட் நடிகர் தனுசு மற்றும் புதுமுக நடிகை அக்‌சராகாசன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இப்படம் 2015 பிப்ரவரி 6 ஆம் தேதி திரையிடப்பட்டது. அண்மையில் கி அண்டு கா என்ற திரைப்படத்தை பால்கி இயக்கினார். இப்படம் 2016 ஏப்ரல் 1 ஆம் தேதி திரையிடப்பட்டது. இதில் கரீனா கப்பூர் மற்றும் அர்ச்சூன் கப்பூர் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள் [3]

இசையமையப்பாளர் இளையராசா பால்கியின் விருப்பமான இசையமைப்பாளர் ஆவார். இளையராஜா இசைதான் எனக்கு மிகப்பெரிய தூண்டுதலாக இருந்தது என்றும் தன் வாழ்வில் சினிமாவை முதலிடத்திற்கு கொண்டு வந்ததற்கும் அவருடைய இசைதான் ஆர்வத்தை தூண்டியது என பால்கி ஒரு முறை கூறியுள்ளார்.[4].அவர் பி.சி.சிறீராம் அவர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

சொந்த வாழ்க்கை[தொகு]

பால்கி 2007-ல் கெளரி சிண்டேவை திருமணம் செய்து கொண்டார். கெளரி சிண்டே இந்திய விளம்பரப்படம் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார்.[5]

திரைப்பட வரலாறு[தொகு]

ஆண்டுகள் திரைப்படம் குறிப்புகள் நட்சத்திரங்கள்
2007 சீனக்கம் இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் அமிதாப்பச்சன், தபு, பரேசு ராவல்
2009 பா இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் அமிதாப்பச்சன், அபிசேக் பச்சன், வித்யா பாலன்
2012 இங்கிலீசு விங்கிலீசு தயாரிப்பாளர் சிறீதேவி,பிரியா ஆனந்த்
2015 சமிதாப் இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் நடிகர் தனுசு, அமிதாப் பச்சன், அக்சராகாசன்
2016 கி அண்டு கை இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் கரீனா கபூர், அர்ச்சூன் கபூர்
2016 டியர் ஸிண்டாஹி தயாரிப்பாளர் அலீயா பட், சாருக் கான் , அங்கட் பேடி,இராதுபே
2017 பேட் மேன் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் அக்சய குமார், சோனம் கபூர்

விருதுகள்[தொகு]

16 ஆவது நட்சத்திர திரைப்பட விருது வழங்கும் விழாவில் பா திரைப்படம் 14 பிரிவுகளில் பரிந்துரைகளைப் பெற்றது. அதில் இப்படத்திற்கு 5 விருதுகள் கிடைத்தன.

மேற்கோள்[தொகு]

  1. "Kamal Haasan’s younger daughter Akshara to jump into Bollywood arena". Tamilstar.
  2. CF (4 September 2013). "Akshara to follow Shruti’s footsteps into tinsel town". KOLLY TALK.
  3. "Revealed – Kareena Kapoor’s Look As ‘KI’ In R. Balki’s ‘Ki And Ka’" (29 July 2015).
  4. LUNCH WITH BS: R Balki, Business Standard, Shobhana Subramanian.
  5. , Hindustan Times, 14 August 2012.

புற இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஆர். பால்கி
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._பால்கி&oldid=2738285" இருந்து மீள்விக்கப்பட்டது