உள்ளடக்கத்துக்குச் செல்

ஆர்மேனிய மேட்டுநிலங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர்மேனிய மேட்டுநிலங்கள்
துருக்கி ஈரான் எல்லையிலுள்ள ஆர்மேனிய மலைத்தொடர்
நாடு ஆர்மேனியா
அசர்பைசான்
ஜோர்ஜியா (நாடு)
ஈரான்
துருக்கி
பகுதி சிறிய காகசஸ்
மிகவுயர் புள்ளி அரராத் மலை
 - உயர்வு 5,137 மீ (16,854 அடி)
 - ஆள்கூறுகள் 39°43′N 44°16′E / 39.717°N 44.267°E / 39.717; 44.267
பரப்பு 4,00,000 கிமீ² (1,54,441 ச.மைல்)
செயற்கைக்கோள் படம்
செயற்கைக்கோள் படம்
செயற்கைக்கோள் படம்
இப்பகுதியின் அரசியல் நிலப்படம், 2002
ஹென்றி லின்ச்சின் படி ஆர்மேனிய மேட்டுநிலத்தின் இயற்கை எல்லைகள், 1901

ஆர்மேனிய மேட்டுநிலங்கள் (Armenian Highlands) (ஆர்மீனியம்: Հայկական լեռնաշխարհ, Haykakan leṙnašxarh); என்றறியப்படும் ஆர்மேனிய உயர்நிலம் அல்லது ஆர்மேனிய பீடபூமி ,[1][2] சுருக்கமாக ஆர்மேனியா மத்திய கிழக்கு நாடுகளின் தென்பகுதியிலுள்ள மிகவும் உயர்ந்த மூன்று பீடபூமிகளுள் ஒன்றாகும்.[2] மேற்கில் ஏகேயன் கடற்கறைத் தாழ்நிலப் பகுதிகளிலிருந்து அனடோலியன் பீடபூமிவரை மெல்ல மெல்ல உயர்ந்து, கப்பதோக்கியாவின் கிழக்குப் பகுதிவரை பரவியுள்ளது. தென்கிழக்கில் கடல் மட்டத்திலிருந்து ஈரானியப் பீடபூமிவரை 600 மீட்டர்கள் (2,000 அடி) சட்டென உயர்கிறது. [2] காகஸ் மலைத்தொடர் வடகிழக்கே ஆர்மேனிய பீடபூமி வரை விரிவடைகிறது. இதன் தென்கிழக்கில் ஆர்மேனிய மெசபடோமியா அமைந்துள்ளது.

பண்டைய காலத்தில் இப்பகுதி ஆர்மேனிய வரலாற்றில் ஆர்மேனியா மேஜர் என அழைக்கப்பட்டது ஆர்மேனியாவுடன் தொடர்புடைய பண்டைய அரசியல் நிலப்பிரிவுகளில் ஆர்மேனிய மேட்டுநிலமும் ஒன்றாக அறியப்படுகிறது. மற்றவை முறையே ஆர்மேனியா மைனர் (Armenia Minor), சிசிலியாவின் ஆர்மேனியப் பேரரசு அல்லது சிசிலியா (Cilicia]), கொம்மாகீன் (Commagene) ஆகியவையாகும்.[3][4] மத்திய காலத்தில் துருக்கியர்கள் பெருமளவில் ஆர்மேனிய மேட்டு நிலங்களில் குறியேறினார்கள்.

இப்பகுதியில் வரலாற்று காலத்திலிருந்தே ஆர்மேனியர்கள் பெரும்பான்மையின்ர் வாழ்கின்றனர். மேலும் சிறுபான்மை ஜியார்ஜியன்கள், அசிரியர்கள், கிரேக்கர்கள் ஆகியோரும் வாழ்கின்றனர். இதன் மேற்குப் பகுதியில் குடியேறிய கிறித்துவர்கள், ஆர்மேனிய இனப்படுகொலை காரணமாக அழிக்கப்பட்டனர். மேலும் சிறிதளவு கிரேக்க இனப்படுகொலைகள், அசிரிய இனப்படுகொலைகள் ஆகியவற்றின் காரணமாகவும் இப்பகுதியின் மக்கள் இனங்கள் அழிக்கப்பட்டுள்ளன. தற்போது இங்கு ஆர்மேனியர்கள், குர்துகள், அசர்பைஜான்கள், துருக்கியர்கள், ஜியார்ஜியர்கள் ஆகியோர் வாழ்கின்றனர்.

வரலாறு[தொகு]

கி.மு. 4000 முதல் கி.மு.1000 வரை இங்கு இரும்பு, செம்பு, வெண்கலம் ஆகியவற்றாலான கருவிகளும், ஆபரணங்களும் பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. மேலும் அவை இதன் அண்டைய நாடுகளுக்கு வணிகப்பரிமாற்றங்களும் செய்யப்பட்டன. மேலும் இப்பகுதி ஏதேன் தோட்டங்களில் ஒன்றாக இருக்கலாம் என தொன்மவியல் நம்பிக்கைகளும் பாரம்பரியமாக காணப்படுகிறது.[5]

மேலும் ஆர்மேனிய பீடபூமியானது இரும்புகால மையமாகக் கருதப்படுகிறது மேலும் கி.மு இரண்டாயிரம் ஆண்டுகளின் பிந்தைய இரும்பு காலம் பற்றிய ஆதாரஙகள் கிடைத்த முதல் பகுதி இதுவேயாகும்.[6] முந்தைய இரும்பு காலத்தில் இதன் பெரும்பகுதி வான் பேரரசுவிற்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. பின்னர் இது மேதார்கள் மற்றும் ஒரோன்டிட் பேரரசின் கட்டுப்பாட்டில் வந்தது.

கில்காமேசு என்ற பண்டைய கிரேக்க நூலில் ஆர்மேனிய பீடபூமியில் அமைந்திருந்த அராட்டா என்ற பகுதியைப் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.[7]

பண்டையக் காலம் முழுவதும் மற்றும் மத்திய காலங்களில் ஆர்மேனிய மேட்டுநிலமானது, சாசானியப் பேரரசு, பைசாந்தியப் பேரரசு, பார்த்தீனியப் பேரரசு, அரபுக் கலீபா ஆகியவற்றின் போட்டிப்பிரதேசமாக இருந்தது.[8] தொடக்க நவீன காலகட்டத்திலிருந்து இப்பகுதி ஈரானிய சபாவிட் பேரரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் வந்தது. பதினேழாம் நூற்றாண்டில் பொங்கியெழுந்த் ஒட்டோமான் பேரரசு மற்றும் சாபாவிடியப் பேரரசு ஆகியவற்றுக்கிடையே ஏற்பட்ட பல்வேறு போர்களில் இறுதியாக ஓட்டோமான்-சாபாவிடியப் போரின்(1623-39) விளைவாக மேற்கு ஆர்மேனியப் பகுதி சுஹாப் உடன்படிக்கையின் படி ஓட்டோமான் பேரரசின் வசமானது.[9]

கிழக்கு ஆர்மேனியா 19 ஆம் நூற்றாண்டு வரை ஈரானியர்களின் கையில் இருந்தது. அதன் பின்னர் ஏற்பட்ட துருக்கிமென்சாய் உடன்படிக்கையின் படி உருசியப் பேரரசிடம் கொடுக்கப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் முதற்பகுதியின் முடிவில் மேற்கு ஆர்மேனியாவை உள்ளடக்கிய ஆர்மேனிய பீடபூமியில் ஓட்டாமான் பேரரசின் செல்வாக்கு நிறைந்த பகுதிகள் ஓட்டோமான் கோளம் எனவும் உருசியச் செல்வாக்கு மிக்க இடங்கள் உருசிய கோளம் எனவும் எல்லைகள் உருவாயின. பின்னர் பல நூற்றாண்டுகளாக நடைபெற்ற பல்வேறு உருசியப - பாரசீகப் போர்களின் காரணமாக குவஜார் ஈரானியப் பகுதியில் உருசியப் பேரரசிற்கு ஏற்பட்ட இழப்பிற்கு ஈடு செய்யும் பொருட்டும் காகசீயம் மற்றும் கிழக்கு ஆர்மேனியா பகுதிகள் உருசியாவால் கைப்பற்றப்பட்டது.[10]

ரிச்சர்ட் ஹோவன்னிசன் என்பவரது கூற்றின் படி ஆர்மேனிய இனப்படுகொலையானது சிறந்த மேட்டு நிலமான ஆர்மோனியாவில் வாழ்ந்த அம்மக்களின் உடல் மற்றும் ஆர்மோனியர்களது உடல் மற்றும் அவர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளை அழித்து அப்பகுதிக்கு கிழக்கு அனடோலியா என்ற பெயரைப் பெற்றுத் தந்தது.[11] ஆர்மீனிய இனப்படுகொலை மற்றும் முதல் உலகப்போரினால் ஓட்டோமான் பேரரசு கலைக்கப்படும் வரை இப்பகுதி துருக்கி, ஈரான், சோவியத் ஒன்றியம், ஆகியவற்றின் எல்லைகளாக இருந்தது. பின்னர் ஜியார்ஜியா மற்றும் அசர்பைஜானின் பகுதிகளாக மாறியது.[7]

தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள்[தொகு]

ரோமானியர்களால் ஆர்மேனிய இலந்தை என்றழைக்கப்பட்டு ஐரோப்பாவிற்கு கொண்டு செல்லப்பட்ட சர்க்கரை பாதாமி ஆர்மேனிய மேட்டுநிலத்தைத் தாயகமாகக் கொண்டது..[2]


குறிப்பிடத்தக்க முகடுகள்[தொகு]

அக்தாமர் தீவுகளிலுள்ளஅர்தோசு மலை, வான் ஏரி
தரம் மலை உயரம் அமைவிடம்
1 அரராத் மலை 5,137 m துருக்கி ஆக்ரீ பிராந்தியம்
2 அராகத் மலை 4,095 m ஆர்மீனியா அரகசோன் பிராந்தியம்
3 சுபான் மலை 4,058 m துருக்கி பிட்லிசு பிராந்தியம்
4 கபுட்சுக்கு மலை 3,906 m ஆர்மீனியா சியூனிக் பிராந்தியம் / அசர்பைஜான் Ordubad
5 அசாதகாக் மலை 3,597 m ஆர்மீனியா ஜெகார்குனிக் பிராந்தியம்
6 கசீல்போகசு மலை 3,594 m ஆர்மீனியா சியூனிக் பிராந்தியம்
7 ஆர்தோசு மலை 3,515 m துருக்கி வான் பிராந்தியம்

மேற்கோள்கள்[தொகு]

 1. Google Books search - Armenian tableland
 2. 2.0 2.1 2.2 2.3 Hewsen, Robert H. "The Geography of Armenia" in The Armenian People From Ancient to Modern Times Volume I: The Dynastic Periods: From Antiquity to the Fourteenth Century. Richard G. Hovannisian (ed.) New York: St. Martin's Press, 1997, pp. 1-17
 3. Adalian, Rouben Paul (2010). Historical dictionary of Armenia (2nd ed.). Lanham, MD: Scarecrow Press. pp. 336–8. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0810874504.
 4. Grierson, Otto Mørkholm ; edited by Philip; Westermark, Ulla (1991). Early Hellenistic coinage : from the accession of Alexander to the Peace of Apamea (336-188 B.C.) (Repr. ed.). Cambridge: Cambridge University Press. p. 175. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0521395046. {{cite book}}: |first= has generic name (help)CS1 maint: multiple names: authors list (link)
 5. Mesopotamian Trade. Noah's Flood: The Garden of Eden, W. Willcocks, H. Rassam pp. 459-460
 6. Lang, David M. Armenia: Cradle of Civilization. London: George Allen & Unwin, 1970, pp. 50-51, 58-59.
 7. 7.0 7.1 Encyclopedia of the Peoples of Asia and Oceania, By Barbara A. West, 2009, p. 47
 8. "Conflict and Security in Central Asia and the Caucasus". பார்க்கப்பட்ட நாள் 26 December 2014.
 9. "Armenia: with Nagorno Karabagh". பார்க்கப்பட்ட நாள் 26 December 2014.
 10. "Russia at War: From the Mongol Conquest to Afghanistan, Chechnya, and Beyond ..." பார்க்கப்பட்ட நாள் 26 December 2014.
 11. The Armenian Genocide: Cultural and Ethical Legacies - Page 3, by Richard G. Hovannisian - 2011