ஆப்பனாடு கொண்டையங் கோட்டை மறவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆப்பனாடு கொண்டையங் கோட்டை மறவர் என்பது தமிழ்நாட்டிலுள்ள, முக்குலத்தோரின் ஒரு பிரிவான மறவர் இனக்குழுவின் உட்பிரிவுகளில் ஒன்றாகும்.

வரலாறு[தொகு]

கொண்டை கட்டி மறவர், அதாவது ஆண்கள் தலைமுடியை கொண்டை போடும் வழக்கம் கொண்ட மறவர்களுக்கு அப்பெயர் ஏற்பட்டு, காலப்போக்கில் மறுவி கொண்டையங் கோட்டை மறவர் என்றாகியது.[சான்று தேவை] தற்போதுள்ள இராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களின் மையப்பகுதி அகப்பைப் போன்ற (அகப்பை என்பது தேங்காயின் மூடியில் ஒரு கைமுழ மூங்கிலை செருகி தயாரிப்பது) அமைப்புள்ள நிலப்பகுதி அகப்பைநாடு, இதுவும் காலப்போக்கில் மறுவி ஆப்பனாடு என்றாகியது. அகப்பைநாடு மற்றும் அப்பகுதி மறவர்கள் இணைந்து அகப்பைநாடு கொண்டை கட்டி மறவர் என்பது "ஆப்பனாடு கொண்டையங்கோட்டை மறவர்" என்றாயிற்று.

உறவுமுறைகள்[தொகு]

இச்சாதியில் கிளைகள் எனும் பிரிவு உள்ளது. அதாவது ஒரு கொத்து இரு கிளைகள் கொண்டது. மொத்தம் 9 கொத்தும், 18 கிளையும் உள்ளது. ஒரு கொத்தைச் சேர்ந்த இரு கிளைகளுக்குள் திருமணம் இல்லை. ஒரே கிளைகளுக்குள் திருமண உறவு இருக்காது (ஏனென்றால் இவர்கள் அண்ணன் தங்கை உறவு முறை)

பண்பாடு[தொகு]

இந்த சாதிப் பெண்கள் காது வளர்த்து (தமிழ் பண்பாட்டுக்கு உட்பட்ட நடப்பு நிகழ்வுகள்) தண்டட்டி (பாப்படம்) அணியும் வழக்கம் உடையவர்கள். இந்த வழக்கம் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், கமுதி வட்டங்களிலும், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் வட்டங்களிலும், திருநெல்வேலி மாவட்டம் தூத்துக்குடி மாவட்டம் மற்றும் விருதுநகர் மாவட்டத்திலும் தற்போதும் நடைமுறையில் உள்ளது.

புகழ் பெற்றவர்கள்[தொகு]

  1. யோகி முத்துமணி சுவாமிகள்
  2. புலித்தேவர்

மேற்கோள்கள்[தொகு]