ஆன்றி மட்டீசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆன்றி மட்டீசு
கர்ல் வான் வெக்டென் என்பவரால் எடுக்கப்பட்ட என்றி மத்தீசின் நிழற்படம், 1933.
தேசியம் பிரான்சியர்
அறியப்படுவது ஓவியம், அச்சோவியம், சிற்பம், வரைதல், கலப்பொட்டு (collage)
குறிப்பிடத்தக்க படைப்புகள் ஒரு தொப்பியுடன் பெண் (சீமாட்டி மட்டீஸ்), 1905
அரசியல் இயக்கம் பளீர்நிறமியம் (ஃவாவியம், Fauvism), நவீனத்துவம்

ஆன்றி மட்டீசு அல்லது ஆன்றி மட்டீஸ் (Henri Matisse, டிசம்பர் 31, 1869நவம்பர் 3 1954) ஒரு பிரான்சிய ஓவியர். ஒரு வரைவாளராகவும், அச்சோவியம் செய்பவராகவும், சிற்பியாகவும், முதன்மையாக ஓர் ஓவியராகவும், 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் அறியப்பட்ட கலைஞர்களுள் ஒருவராகவும் மத்தீசு இருந்தார். இவருடைய ஒரு குறிப்பிட்ட பாணி ஓவியம் பளீரென்ற நிறங்கள் மிக்கதாய் இருந்ததால், தொடக்கத்தில் இவர் ஒரு "காட்டு விலங்கு" என முத்திரை குத்தப்பட்டாலும், 1920களில், பிரான்சின் செந்நெறி ஓவிய மரபின் காவலர் எனப் புகழப்பட்டார். நிறம், வரைதல் ஆகிய வெளிப்பாட்டு மொழிகளில் அவருக்கிருந்த திறமை அவரது அரை நூற்றாண்டுக்கால ஆக்கங்களில் வெளிப்பட்டது. இதன் மூலம் அவரை தற்கால (நவீன) ஓவியத்தில் ஒரு முக்கிய கலைஞராக அடையாளம் காண முடிந்தது.

என்றி மத்தீசின் ஓவியம். ஒரு பெண் படித்துக்கொண்டிருக்கும் படம்; 1894, தற்கால கலைக் காட்சியகம், பாரிசு


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆன்றி_மட்டீசு&oldid=2154684" இருந்து மீள்விக்கப்பட்டது