நெய்யோவியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோனா லிசா , லியொனார்டோ டா வின்சி, ஏ. 1503–06

நெய்யோவியம் என்பது நிறமிகளைக் கொண்டு தீட்டிப் பின் ஒருவகை நெய் அல்லது எண்ணெய் கொண்டு காயவைக்கும் ஒரு வகை ஓவியமாகும். ஆளிவிதைநெய், கசகசா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் போன்றவை பொதுவாக இவ்வகை ஓவியங்களுக்குப் பயன்படுத்தப்படும் நெய்கள் ஆகும். பயன்படுத்தப்படும் நெய்யைப் பொறுத்துக் காயும் நேரம், பழுப்படையும் தன்மை போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும். வெவ்வேறு வித விளைவுகளை ஏற்படுத்தவும், வெவ்வேறு நிறமிகளைப் பயன்படுத்தவும், ஒன்றிற்கும் மேற்பட்ட எண்ணெய்களை ஒரே ஓவியத்தில் ஓவியர்கள் பயன்படுத்துவதும் உண்டு.

முதன்முதலில் நெய்யோவியங்கள் புத்தமத ஓவியங்களைத் தீட்ட, இந்திய ஓவியர்களாலும் சீனத்து ஓவியர்களாலும் மேற்கு ஆப்கானிசுத்தான் பகுதியில் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்கும் பத்தாம் நூற்றாண்டுக்கும் இடையில் பயன்படுத்தப் பட்டிருக்கலாம். [1]. ஆனால் பதினைந்தாம் நூற்றாண்டு காலப் பகுதி வரை நெய்யோவியங்கள் பெரிதும் புகழ் பெறவில்லை.

References[தொகு]

  1. Barry, Carolyn. "Earliest Oil Paintings Found in Famed Afghan Caves". National Geographic Society. பார்க்கப்பட்ட நாள் 7 January 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெய்யோவியம்&oldid=2229309" இலிருந்து மீள்விக்கப்பட்டது