அலாவுதீன் உசைன் சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலாவுதீன் உசைன் சா
வங்காள சுல்தான்
வங்காளத்தின் சா
கலீபகத்தின் வலது கை மற்றும் பாதுகாவலர்
அமீர் அல்-முமினின் (நம்பிக்கையானத் தளபதி)
அலாவுதீன் உசைன் சா ஆட்சிக் காலத்திய வெள்ளி நாணயம் (தங்கா)
வங்காளத்தின் சுல்தான்
ஆட்சிக்காலம்1494–1519
முன்னையவர்சம்சுதீன் முசாபர் சா
பின்னையவர்நசிருதின் நசரத் சா
பிறப்புசயது உசைன்
இறப்பு1519
வாழ்க்கைத் துணைகள்சந்த்பூரின் நீதிபதியின் மகள்
குழந்தைகளின்
பெயர்கள்
நசிருதின் நசரத் சா சா
கியாசுதீன் மக்முத் சா
சாசதா தன்யால்
மற்றும் பிறர்
தந்தைசயிது அசரப் அல்-உசைனி
மதம்இசுலாம்

அலா-உத்-தின் உசைன் சா (Ala-ud-din Husain Shah) (1494-1519) [1] ஓர் வங்காள சுல்தானாவார்.. இவர் உசைன் ஷாஹி வம்சத்தை நிறுவினார்.[2] தான் பிரதம அமைச்சராக பணியாற்றிய அபிசீனிய சுல்தான் சம்சு-உத்-தின் முசாபர் ஷாவை படுகொலை செய்துவிட்டு இவர் வங்காளத்தின் ஆட்சியாளரானார். 1519 இல் இவர் இறந்த பிறகு, இவரது மகன் நசிருதின் நசரத் சா பதவியேற்றார். இவர்கள் இருவரின் ஆட்சிகாலங்கள் பொதுவாக வங்காள சுல்தானகத்தின் "பொற்காலம்" என்று கருதப்படுகிறது.[3]

தோற்றம் மற்றும் ஆரம்ப வாழ்க்கை[தொகு]

உசைன் சாவால் கட்டப்பட்ட முதல் மசூதிகளில் ஒன்றான கெரூர் மசூதி, சந்த்பாராவில் அமைந்துள்ளது. இங்கு இவர் தனது குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதியைக் கழித்ததாகக் அறியப்படுகிறது.

அலாவுதீன் உசைன் ஷா அரேபிய[4][5][6] அல்லது சையிது பூர்வீக வம்சாவளியைச் சேர்ந்தவராவார்.

இவரது தந்தை அசுரப் அல்-உசைனி ஆரம்பத்தில் துர்கெஸ்தானின் டெர்மெஸ் நீண்ட காலம் வாழ்ந்த பின்னர் மேற்கு வங்காளத்தின் சந்த்பூரில் குடியேறியதாக வங்காளத்தில் முஸ்லிம் ஆட்சி பற்றிய ரியாஸ்-உஸ்-சலாடின் முதல் பிரித்தானிய கால வரலாற்று புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளார். இவரும் இவரது மூத்த சகோதரர் யூசுப் ஆகியோர் தங்கள் குழந்தைப் பருவத்தை உள்ளூர் இசுலாமியச் சட்டப்பள்ளின் ஆசிரியரின் கீழ் படித்தனர். பின்னர் அவர் தனது மகளை உசைனுக்கு திருமணம் செய்து வைத்தார்.[7] சந்த்பூரில் உசைனின் ஆட்சியின் ஆரம்ப காலத்தில் பல கல்வெட்டுகள் நிறுவப்பட்டிருக்கலாம். உசைன் தனது ஆட்சியின் முதல் ஆண்டில் 1494 இல் சந்த்பாராவில் கெரூர் மசூதியைக் கட்டினார். இந்த கிராமத்தில் உள்ள ஷேகர் திகி என்ற ஏரியும் உசைனுடன் தொடர்புடையது.[8]

கலாச்சாரப் பங்களிப்பு[தொகு]

அலாவுதீன் உசைன் சா ஆட்சியின் போது கட்டப்பட்ட சோட்டோ சோனா மசூதி

உசைன் சாவின் ஆட்சியின்போது வங்காள இலக்கியம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டது.[1] சிட்டகாங்கின் இவரது ஆளுநரான பரகல் கானின் ஆதரவின் கீழ், கபீந்திர பரமேசுவர் என்பவர் மகாபாரதத்தின் வங்காளத் தழுவலான தனது பாண்டபிஜய் என்ற நூலை எழுதினார். இதேபோல், பரகலின் மகன் சுட்டி கானின் ஆதரவின் கீழ், சிறீகர் நந்தி என்பவர் மகாபாரதத்தின் மற்றொரு வங்காளத் தழுவலை எழுதினார். கபீந்திர பரமேஷ்வர் தனது பாண்டபிஜயில் உசைன் சாவைப் புகழ்ந்து எழுதியுள்ளார்.[9] விஜய் குப்தா என்பவர் தனது மானசமங்கல் காவியத்தையும் இவரது ஆட்சிக் காலத்தில் எழுதினார். அவர் உசைன் சாவை அருச்சுனனுடன் ( சம்கிராம் அர்ஜுன் ராஜா பிரபாதர் ரபி ) ஒப்பிட்டுப் புகழ்ந்துள்ளார்.[10] அவர் இவரை நிருபதி-திலக் (அரசர்களின் திலகம்) மற்றும் ஜகத்-பூசன் (பிரபஞ்சத்தின் அலங்காரம்) என்றும் குறிப்பிட்டுள்ளார். உசைன் ஷாவின் அதிகாரியான யசோராஜ் கான், தான் எழுதிய வைணவப் பாடல்களில் உசைன் சாவைப் புகழ்ந்துள்ளார்.[11] உசைன் சாவின் ஆட்சிக் காலத்தில் குறிப்பிடத்தக்க பல நினைவுச் சின்னங்கள் கட்டப்பட்டன. இவர், வாலி முகம்மது கவுரில் சோட்டா சோனா மசூதியைக் கட்டினார்.[12]

இவரது ஆட்சியின் போது, சேக் முகம்மது இபின் யசுதான் பக்சு பெங்காலி என்று அழைக்கப்படும் ஒரு இசுலாமிய அறிஞர், எக்தாலாவுக்குச் சென்றார். அங்கு அவர் சாகிக் அல்-புகாரி என்ற நூலை எழுதி, சோனார்கானில் இருந்த சுல்தானுக்கு பரிசளித்தார். கையெழுத்துப் பிரதி தற்போது பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள பாங்கிப்பூரில் உள்ள குடா பக்ச் கிழகத்திய நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.[13]

மத சகிப்புத்தன்மை[தொகு]

உசைன் ஷா தனது ஆட்சிக்காலத்தில் குடிமக்களிடம் மத சகிப்புத்தன்மையுடனே நடந்து கொண்டார். இருப்பினும், தனது ஒடிசாப் போரின் போது, சில இந்துக் கோயில்களை அழித்தார் என்று எழுதுகிறார். பிருந்தாவன தாச தாக்கூர் என்பவர் தனது சைதன்ய பாகவதத்தில் குறிப்பிட்டுள்ளதாக வரலாற்றாசிரியர் ஆர்.சி. மஜும்தார் கூறுகிறார்.[14] எனினும் கோயில்களின் அழிவு சுல்தானின் கட்டளையால் மேற்கொள்ளப்படவில்லை. இடைக்காலத் துறவி, சைதன்யர் மற்றும் அவரது சீடர்கள் இவரது ஆட்சியின் போது வங்காளத்தில் பக்தி நெறியைப் பரவச் செய்தனர்.[15] உசைன் சா சைதன்யரை தனது குடிமக்களில் பெரும்பாலோனோர் பின்தொடர்வதைப் பற்றி அறிந்ததும், அவரை எந்த வகையிலும் காயப்படுத்த வேண்டாம் என்றும் அவர் விரும்பும் இடத்திற்குச் செல்ல அனுமதிக்குமாறும் அவர் தனது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.[14] பின்னர், உசைன் சாவின் நிர்வாகத்தில் பணியாற்றிய இரண்டு உயர் இந்து அதிகாரிகளும், அவரது தனிச் செயலாளர்களான ரூபா கோஸ்வாமி மற்றும் அவரது அந்தரங்க அமைச்சர் சனாதன கோஸ்வாமி ஆகியோர் சைதன்யரின் சீடர்களாக ஆனார்கள்.[15]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Majumdar, R.C. (ed.) (2006). The Delhi Sultanate, Mumbai: Bharatiya Vidya Bhavan, pp.215-20
  2. Sen, Sailendra (2013). A Textbook of Medieval Indian History. Primus Books. பக். 120–121. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-9-38060-734-4. 
  3. "The Rise of Islam and the Bengal Frontier, 1204–1760". publishing.cdlib.org. பார்க்கப்பட்ட நாள் 2021-03-20.
  4. Eaton, Richard M. (1993) (in en). The Rise of Islam and the Bengal Frontier, 1204-1760. University of California Press. பக். 63. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-520-20507-9. https://books.google.com/books?id=gKhChF3yAOUC&pg=PA63. "Ala al-Din Hasan, a Mecan Arab..." 
  5. Markovits, Claude (2004-09-24) (in en). A History of Modern India, 1480-1950. Anthem Press. பக். 38. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-84331-152-2. https://books.google.com/books?id=r2OKvG5wbaAC&pg=PA38. 
  6. Jr, Everett Jenkins (2015-05-07) (in en). The Muslim Diaspora (Volume 1, 570-1500): A Comprehensive Chronology of the Spread of Islam in Asia, Africa, Europe and the Americas. McFarland. பக். 335. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4766-0888-4. https://books.google.com/books?id=xBIkCQAAQBAJ&pg=PA335. 
  7. Salim, Gulam Hussain; tr. from Persian; Abdus Salam (1902). Riyazu-s-Salatin: History of Bengal. Asiatic Society, Baptist Mission Press. பக். 127–131. https://archive.org/details/riyazussalatinhi00saliuoft/page/130/mode/2up?q=ashraf. 
  8. "Chronological History of Murshidabad". Independent Sultanate of Gauda. District Administration. Archived from the original on 2011-07-16. பார்க்கப்பட்ட நாள் 2011-05-04.
  9. Sen, Sukumar (1991, reprint 2007). Bangala Sahityer Itihas, Vol.I, (in வங்காள மொழி), Kolkata: Ananda Publishers, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7066-966-9, pp.208-11
  10. Sen, Sukumar (1991, reprint 2007). Bangala Sahityer Itihas, Vol.I, (in வங்காள மொழி), Kolkata: Ananda Publishers, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7066-966-9, p.189
  11. Sen, Sukumar (1991, reprint 2007). Bangala Sahityer Itihas, Vol.I, (in வங்காள மொழி), Kolkata: Ananda Publishers, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7066-966-9, p.99
  12. Majumdar, R.C. (ed.) (2006). The Delhi Sultanate, Mumbai: Bharatiya Vidya Bhavan, p.693
  13. Mawlana Nur Muhammad Azmi. "2.2 বঙ্গে এলমে হাদীছ" (in bn). Emdadia Library. பக். 24. 
  14. 14.0 14.1 Majumdar, R.C. (ed.) (2006). The Delhi Sultanate, Mumbai: Bharatiya Vidya Bhavan, p.634
  15. 15.0 15.1 Majumdar, R.C. (ed.) (2006). The Delhi Sultanate, Mumbai: Bharatiya Vidya Bhavan, pp.513-4
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலாவுதீன்_உசைன்_சா&oldid=3924528" இலிருந்து மீள்விக்கப்பட்டது