ஈசா கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈசா கான்
ঈশা খাঁ
மசுநத்-இ-ஆலா
பரோ-புயான் கூட்டமைப்பின் தலைவர்
ஆட்சிக்காலம்1576–1599
பிறப்புசுமார் 1529
சரயில், பதி, வங்காள சுல்தானகம் தற்போதைய பிரம்மன்பரியா மாவட்டம்
இறப்புசெப்டம்பர் 1599 (வயது 70)
பக்தர்பூர், பதி, , முகலாயப் பேரரசு
புதைத்த இடம்
பக்தர்பூர், வங்காளதேசம்
துணைவர்பாத்திமா காதுன்
சோனா பீபி
குழந்தைகளின்
பெயர்கள்
மூசா கான்
தாவூது கான்
மக்முது
அப்துல்லா
இலியாசு கான்
மரபுசரயில் கோட்டை
தந்தைசுலைமான் கான்
தாய்சையதா மொமெனா காதுன்
மதம்சுன்னி இசுலாம்

ஈசா கான் (Isa Khan) , (பிறப்பு சுமார் 1529 - செப்டம்பர் 1599) வங்காளத்தின் 16 ஆம் நூற்றாண்டின் பரோ-புயான் கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரும், சோனார்கானின் ஜமீந்தாரும் ஆவார்.[1][2]}} இவரது ஆட்சியின் போது, இவர் வங்காளத்தின் தலைவர்களை வெற்றிகரமாக ஒன்றிணைத்தார்.[3] வரலாற்றாசிரியர் அப்துல் கரீம், ஈசா கான் 1581-1582 க்குப் பிறகு தானே பட்டத்தை ஏற்றுக்கொண்டார் என்று நம்புகிறார்.[4] மேலும் வங்காளத்தின் மீதான முகலாயப் படையெடுப்பை எதிர்த்தார். இவரது மரணத்திற்குப் பிறகுதான் இப்பகுதி முற்றிலும் முகலாயர்களின் கட்டுப்பாட்டில் வந்தது. தனது கிளர்ச்சி மனப்பான்மை மற்றும் ஒற்றுமையின் அடையாளமாக மேற்கு வங்காளம் மற்றும் வங்காளதேசம் முழுவதிலும் இவர் ஒரு முக்கியமான நபராக இருந்தார்.[5][6]

ஆரம்பகால வாழ்க்கையும் பின்னணியும்[தொகு]

ஈசா கான் 16 ஆம் நூற்றாண்டில் வங்காள சுல்தானகத்தின் பதி நிலப்பகுதியில் சரயிலின் திவான்கள் என்று அழைக்கப்படும் ஒரு பிரபுத்துவ வங்காளி சுன்னி இசுலாம் ஜமீந்தார் குடும்பத்தில் பிறந்தார். இவரது தாத்தா, திவான் பகீரத், அயோத்தியைச் சேர்ந்த பைசு இராஜ்புத்திரக் குலத்தைச் சேர்ந்தவர். அவர், வங்காளத்தின் சுல்தான் கியாசுதின் மக்மூத் ஷாவின் திவானாக நியமிக்கப்பட்ட பிறகு சரையில் குடியேறினார். இசா கானின் தந்தை, திவான் சுலைமான் கான் (முன்னர் காளிதாஸ் கஜ்தானி), இந்த பதவியை மரபுரிமையாக பெற்றார். அவர் சோனார்கானின் இசுலாமிய அறிஞரான இப்ராகிம் தேனிசுமந்தின் வழிகாட்டுதலுடன் முஸ்லிமாக மாறினார். [7] இசா கானின் தாயார், சையதா மொமெனா காதுன், சுல்தான் மக்மூத் ஷாவின் மகள். இவரது தாய்வழி அத்தை வங்காளத்தின் ஆளுநர் கிதர் கான் சுரக் என்பவரை மணந்தார். இசாவுக்கு இசுமாயில் கான் என்ற ஒரு தம்பியும், சாகின்சா பீபி என்ற ஒரு சகோதரியும் இருந்தனர். [8][9]

மேற்கோள்கள்[தொகு]

  1. Akbarnama, Volume III, Page 647
  2. Chowdhury, Kamal (2005). Banglar Baro Bhuiyan and Maharaj Pratapaditya. பக். 163. 
  3. Abdul Karim (historian) (1992). History of Bengal: Mughal Period. 1. Institute of Bangladesh Studies, University of Rajshahi. பக். 79–80. இணையக் கணினி நூலக மையம்:28183749. https://books.google.com/books?id=jzluAAAAMAAJ. 
  4. Abdul Karim (historian) (1992). History of Bengal: Mughal Period. 1. Institute of Bangladesh Studies, University of Rajshahi. பக். 84–85. இணையக் கணினி நூலக மையம்:28183749. https://books.google.com/books?id=jzluAAAAMAAJ. 
  5. Chakrabarti, Kunal; Chakrabarti, Shubhra (2013). Historical Dictionary of the Bengalis. Scarecrow Press. பக். 257–258. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8108-8024-5. https://books.google.com/books?id=QVOFAAAAQBAJ&pg=PA257. 
  6. Eaton, Richard Maxwell (1996). The Rise of Islam and the Bengal Frontier, 1204–1760. University of California Press. பக். 147. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-520-20507-9. https://books.google.com/books?id=gKhChF3yAOUC&pg=PA147. 
  7. Hussainy Chisti (1999).
  8. Abdul Karim (1991). "Masnad-I-Ali Isa Khan". Journal of the Institute of Bangladesh Studies (Rajshahi University: Institute of Bangladesh Studies) 14. 
  9. Chowdhury, Kamal (2005). Banglar Baro Bhuiyan and Maharaj Pratapaditya. பக். 143. 
  • Hussainy Chisti, Syed Hasan Imam (1999), Sharif Uddin Ahmed (ed.), "Arabic and Persian in Sylhet", Sylhet: History and Heritage, Bangladesh Itihas Samiti, ISBN 978-984-31-0478-6
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈசா_கான்&oldid=3837098" இலிருந்து மீள்விக்கப்பட்டது