பதி (நிலப் பகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பதி (Bhati ( என்பது இடைக்கால வங்காளத்தின் ஒரு பெரிய பகுதியாகும். இது முகலாயப் பேரரசின் காலத்தில் குறைந்தது 17 ஆம் நூற்றாண்டு வரை அபுல்-ஃபாஸ்ல் இபின் முபாரக் மற்றும் பிறரால் குறிப்பிடப்பட்டது. இது இப்போது வங்காளதேசத்தின் எல்லைக்குள் அமைந்துள்ள ஆற்றுப் பகுதியை உள்ளடக்கியது .பெரும்பாலும் கிழக்கு வங்காளம் என்று குறிப்பிடப்படுகிறது. [1] அக்பர் மற்றும் ஜஹாங்கீர் காலத்தில் டாக்கா, மைமன்சிங், கொமிலா மற்றும் சில்ஹெட் ஆகிய பெரிய மாவட்டங்களின் தாழ்வான பகுதிகளை பதி பகுதி உள்ளடக்கியது. [2]

முகலாயர்கள் விளை நிலமாக மாறத் தொடங்கிய வனப் பகுதிகளில் பதியும் ஒன்று.[3]வரலாற்றாசிரியர் இரிச்சர்ட் ஈடன் இவ்வாறு கூறுகிறார்:

முகலாயர் காலத்தில் கிழக்கு வங்காளத்தின் ஒரு தனித்துவமான அம்சம் - அதாவது, "பதி" - சமகால மேற்கு வங்காளத்துடன் ஒப்பிடுகையில் அதன் அதிக விவசாய உற்பத்தி மற்றும் மக்கள்தொகை வளர்ச்சி ஆகும். இறுதியில், இது வங்காளத்தின் முக்கிய ஆற்று அமைப்புகளின் நீண்ட கால கிழக்கு நோக்கி நகர்வதிலிருந்து எழுந்தது. இது ஈரமான அரிசியை பயிரிடுவதை சாத்தியமாக்கிய செழுமையான வண்டல் மண்ணை தேக்கி வைத்தது.[4]

அதன் ஆட்சியாளர்களில் மூசா கான், முகலாயர்களை எதிர்த்தார். ஆனால் அவர்களால் தோற்கடிக்கப்பட்டு, டாக்காவில் சில காலம் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் 1613 இல் விடுவிக்கப்பட்டார். அதன்பின் பல்வேறு இராணுவப் பயணங்களில் தனது முன்னாள் எதிரிகளுடன் ஒத்துழைத்தார்.[5]

சான்றுகள்[தொகு]

  1. Eaton (1996).
  2. "Bara-Bhuiyans, the - Banglapedia".
  3. Eaton (1996), ப. 150
  4. Eaton (1996), ப. 194
  5. Eaton (1996), ப. 155-156

ஆதாரங்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பதி_(நிலப்_பகுதி)&oldid=3937411" இலிருந்து மீள்விக்கப்பட்டது