சையதா மொமெனா காதுன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சையதா மொமெனா காதுன்
வங்காள சுல்தானகத்தின் இளவரசி
பிறப்பு16ஆம் நூற்றாண்டு
வங்காள சுல்தானகம்
இறப்பு16ஆம் நூற்றாண்டு
வங்காள சுல்தானகம்
வாழ்க்கைத் துணைகள்காளிதாஸ் கஜ்தானி
குழந்தைகளின்
பெயர்கள்
ஈசா கான்
இசுமாயில் கான்
மரபுஉசைன் ஷாஹி வம்சம்
தந்தைகியாசுத்தீன் மக்முத் சா
மதம்சுன்னி இசுலாம்

சையதா மொமெனா காதுன் ( Syeda Momena Khatun ) வங்காள சுல்தானகத்தின் உசைன் ஷாஹி வம்சத்தின் இளவரசி ஆவார். இவர் பரோ-புயான் கூட்டமைப்பின் தலைவரான ஈசா கானின் தாயார்.

சுயசரிதை[தொகு]

காதுன் 16 ஆம் நூற்றாண்டில் வங்காள சுல்தானகத்தில் உசைன் ஷாஹி வம்சத்தில் வங்காள சுன்னி முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை, சுல்தான் கியாசுதீன் மக்மூத் ஷா, வம்சத்தை நிறுவிய அலாவுதீன் உசைன் ஷாவின் மகன். இவரது சகோதரி வங்காளத்தின் ஆளுநர் கிதர் கான் சுரக்கின் மனைவி.[1]

இவர் தனது தந்தையிடம் திவானாகவும், சரயிலின் ஜமீந்தராகவும் இருந்த சுலைமான் கான் என்கிற காளிதாஸ் கஜ்தானியை மணந்தார். வரலாற்றாசிரியர் எம். அப்துல் காதரின் கூற்றுப்படி, கஸ்தானி திருமணத்திற்கு முன்பே காதுனை காதலித்து வந்ததாக அறியப்படுகிறது.[2] தம்பதியினருக்கு சுல்தானகத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் பரோ-புயான் கூட்டமைப்பின் தலைவரான ஈசா கான்[3] மற்றும் இசுமாயில் கான் என்ற இரு மகன்கள் பிறந்தனர்.[4] மேலும், சாகின்சா பீபி என்று ஒரு மகளும் இருந்தாள்.[5]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Chandra Kumar De (1926). Eastern Bengal Ballads, Mymensing: Volume 2, Issue 1. University of Calcutta. பக். 304. 
  2. Abdul Kader, Mohammad (1988). Historical Fallacies Unveiled. Islamic Foundation Bangladesh. 
  3. வார்ப்புரு:Cite Banglapedia
  4. Abdur Rahim, Mohammad, தொகுப்பாசிரியர் (1995). Islam in Bangladesh Through Ages. Islamic Foundation Bangladesh. பக். 30. "Isamil and Isa were his sons by this wife" 
  5. Abdul Karim (1991). Akanda, Safar A.. ed. "Masnad-I-Ali Isa Khan". Journal of the Institute of Bangladesh Studies (Rajshahi University: Institute of Bangladesh Studies) 14. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சையதா_மொமெனா_காதுன்&oldid=3837117" இலிருந்து மீள்விக்கப்பட்டது