உள்ளடக்கத்துக்குச் செல்

உசைன் ஷாஹி வம்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உசைன் ஷாஹி
  • حسين شاهی
  • হুসেন শাহী
அரசமரபு
வங்காள சுல்தானகத்தின் உசைன் ஷாஹி வம்சத்தின் வரைபடம்[1]
நாடுவங்காள சுல்தானகம்
தற்போதைய பகுதிவங்காளம், பீகார்
சொற்பிறப்பியல்அலாவுதீன் உசைன் ஷாவின் பெயரால் வந்தது
நிறுவப்பட்டது1494 (1494)
நிறுவனர்அலாவுதீன் உசைன் ஷா
இறுதி ஆட்சியாளர்கியாசுதீன் மக்மூத் ஷா
பட்டங்கள்சுல்தான்
உறுப்பினர்கள்நசிருதீன் நஸ்ரத் ஷா
இரண்டாம் அலாவுதீன் பிரூசு ஷா
சையதா மொமெனா காதுன்
தொடர்புள்ள உறுப்பினர்கள்இப்ராகிம் தனிஷ்மந்த், கிதி கான் சுரக், இசா கான்
பாரம்பரியங்கள்சுன்னி இசுலாம்
Estate(s)கௌடா
பதவி பறிப்பு1538 (1538)

உசைன் ஷாஹி வம்சம் (Hussain Shahi dynasty) கி.பி. 1494 முதல் 1538 வரை இடைக்கால சுல்தானகத்தை ஆண்ட சுன்னி இசுலாம் குடும்பமாகும்.[2] இந்த வம்சம் ஆப்கானிய வம்சமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.[3][4]

வரலாறு

[தொகு]

அரபு சயிது வம்சாவளியைச் சேர்ந்த அலாவுதீன் உசைன் ஷா என்பவர் வம்சத்தை நிறுவினார்.[5][6][7] இவர் தனது ஆட்சியின் போது ஒரு கலாச்சார மறுமலர்ச்சியைக் கொண்டு வந்ததற்காக வங்காளத்தின் அனைத்து சுல்தான்களிலும் சிறந்தவராகக் கருதப்படுகிறார். இவரது ஆட்சி பொதுவாக வங்காள சுல்தானகத்தின் "பொற்காலம்" என்று கருதப்படுகிறது.[8] இவரது ஆட்சியின் போது கி.பி.1493 மற்றும் 1519 க்கும் இடையில் சோட்டா சோனா மசூதி (சிறிய தங்க மசூதி) கட்டப்பட்டது. மசூதியின் பதினைந்து குவிமாடங்கள் ஒரு காலத்தில் தங்கத்தால் பூசப்பட்டிருந்ததால், மசூதிக்கு இப்பெயர் பெயர் வந்தது.[9] கட்டட்டப்பட்டது. இவர் காமரூபம் மற்றும் ஒடிசாவைக் கைப்பற்றினார். மேலும், சுல்தானகத்தை சிட்டகொங் துறைமுகம் வரை நீட்டித்தார். இவரது காலத்தில் போர்த்துகீசிய வணிகர்கள் முதன்முதலில் இந்தியா வந்தனர். 1498 இல் காமதா இராச்சியம் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து இவரது மூத்த மகன் தன்யால் அப்பகுதியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஆனால் அங்கு கலகக்காரர்களால் கொல்லப்பட்டார்.

நசிருதீன் நஸ்ரத் ஷா

[தொகு]

பின்னர் ஆட்சிக்கு வந்த அலாவுதீன் உசைன் ஷாவின் இரண்டாவது மகன் நசிருதீன் நஸ்ரத் ஷா, பாபுர் படையெடுப்பின் போது நடுநிலை வகித்தாலும் ஆப்கானியர்களுக்கு அடைக்கலம் கொடுத்தார். வங்காளத்தின் அக்பர் என்று அழைக்கப்படும் நஸ்ரத், வங்காள இந்துக்களால் நிருபதி திலகர் மற்றும் ஜகத்பூசன் என்றும் அழைக்கப்பட்டார். இவர் சமசுகிருத இலக்கியங்களை வங்காள மொழியில் மொழிபெயர்க்க ஊக்குவித்தார். மேலும், சோட்டா சோனா மசூதியைக் கட்டினார். நஸ்ரத் ஷாவின் பாபுருடனான ஒப்பந்தம் வங்காளத்தை முகலாயப் படையெடுப்பிலிருந்து காப்பாற்றியது.

பின்னர் ஆட்சிக்கு வந்தவர்கள்

[தொகு]

சோனார்கானில் இருந்து தொடர்ந்து ஆட்சி செய்த வம்சத்தின் கடைசி சுல்தானான கியாசுதீன் மக்மூத் ஷா, தனது வடமேற்கு எல்லையில் அதிகரித்து வந்த ஆப்கானிய நடவடிக்கைகளுடன் போராட வேண்டியிருந்தது. இறுதியில், சூர் பேரரசின் கீழ் ஆப்கானியர்கள் 1538 இல் தலைநகரை தாக்கி சூறையாடினர். மேலும், அங்கு அவர்கள் பல தசாப்தங்களாக தங்கியிருந்தனர். அடுத்தடுத்து இரண்டு சுயாதீன வம்சங்களை ( முகம்மது ஷாஹி மற்றும் கர்ரானி ) நிறுவினர்.[10] இருப்பினும், வங்காள சுல்தானகம் சிறிது காலத்திற்குப் பிறகு சரிந்தது. வங்காளத்தை பரோ-புய்யன்கள் என்று அழைக்கப்படும் தலைவர்களின் கூட்டமைப்பாக மாற்றியது. வங்காளத்தின் இந்த தளர்வான கூட்டமைப்பை கியாசுதீன் மக்மூத் ஷாவின் பேரன்களில் ஒருவரான இசா கானின் மகள் சையதா மொமெனா காதுன் மூலம் ஆளப்பட்டது. கானுக்குப் பிறகு அவரது மகன் மூசா கான் பதவியேற்றார். இருப்பினும் அவரது பேரன் மாசும் கான் வெறும் ஜமீந்தாராகவே இருந்தார்.[11]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "-- Schwartzberg Atlas -- Digital South Asia Library". dsal.uchicago.edu. பார்க்கப்பட்ட நாள் 2023-09-14.
  2. For a map of their territory see: Schwartzberg, Joseph E. (1978). A Historical atlas of South Asia. Chicago: University of Chicago Press. p. 147, map XIV.4 (f). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0226742210.
  3. Subrahmanyam, Sanjay (2012). The Portuguese Empire in Asia, 1500-1700: A Political and Economic History. John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781118274026. In their embassy to Bengal, at the time under the control of the Afghan Hussain Shahi dynasty,
  4. Chatterjee, Pranab (2010). A Story of Ambivalent Modernization in Bangladesh and West Bengal: The Rise and Fall of Bengali Elitism in South Asia. Peter Lang. p. 84. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781433108204.
  5. Eaton, Richard M. (1993). The Rise of Islam and the Bengal Frontier, 1204-1760 (in ஆங்கிலம்). University of California Press. p. 63. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-20507-9. Ala al-Din Hasan, a Mecan Arab...
  6. Markovits, Claude (2004-09-24). A History of Modern India, 1480-1950 (in ஆங்கிலம்). Anthem Press. p. 38. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84331-152-2.
  7. Jr, Everett Jenkins (2015-05-07). The Muslim Diaspora (Volume 1, 570-1500): A Comprehensive Chronology of the Spread of Islam in Asia, Africa, Europe and the Americas (in ஆங்கிலம்). McFarland. p. 335. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4766-0888-4.
  8. "The Rise of Islam and the Bengal Frontier, 1204–1760". publishing.cdlib.org. பார்க்கப்பட்ட நாள் 2021-03-20.
  9. Chhota Sona Masjid. Gaur | By Bangladesh Channel. Bangladesh.com. Retrieved on 2012-08-22.
  10. "The Hussain-Shahi Dynasty".
  11. Abdul Kader, Mohammad (1988). Historical Fallacies Unveiled. Islamic Foundation Bangladesh.

ம்சம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=உசைன்_ஷாஹி_வம்சம்&oldid=3834640" இலிருந்து மீள்விக்கப்பட்டது