உள்ளடக்கத்துக்குச் செல்

குதா பக்ச் கிழக்கத்திய நூலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குதா பக்ச் கிழக்கத்திய நூலகம்
நாடுஇந்தியா
வகைதேசிய நூலகம்
தொடக்கம்29 அக்டோபர் 1891 (1891-10-29)[1]
அமைவிடம்பட்னா, பீகார், இந்தியா
Collection
Items collectedகையெழுத்துப்படி, நூல்கள், கல்வி இதழ்கள், நாளிதழ்கள், இதழ்கள், பைதிவு செய்யப்பட்ட ஒலிகளும் இசையும், காப்புரிமம்கள், தரவுத்தளம்கள், நிலப்படங்கள், அஞ்சல் தலைகள், அச்சுகள், வரைந்தவைகள் போன்றவை
அளவு2,082,904 (அச்சு நூல்கள்)
21,136 (கையெழுத்துப்படிகள்)
(5,000,000 மொத்த உருப்படிகள்)
Legal depositஆம், நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம், 26 திசம்பர் 1969
Access and use
Access requirementsதொகுப்பைப் பயன்படுத்த உண்மையான தேவை உள்ள எவருக்கும் திறந்திருக்கும்
ஏனைய தகவல்கள்
இயக்குநர்சயெச்தா பேதர், (சனவரி, 2019 முதல்)
இணையதளம்http://kblibrary.bih.nic.in/

குதா பக்ச் கிழக்கத்திய நூலகம் (Khuda Bakhsh Oriental Library) இந்தியாவின் தேசிய நூலகங்களில் ஒன்றாகும்.[2] இது பீகாரின் பட்னாவில் அமைந்துள்ளது.[3] இது அக்டோபர் 29, 1891 அன்று கான் பகதூர் குதா பக்ச் என்பவரால் 4,000 கையெழுத்துப் பிரதிகளுடன் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது. இதில் அவர் 1,400 நூல்களை தனது தந்தை மௌல்வி முகமது பக்சிடமிருந்து பெற்றார். இது இந்திய அரசாங்கத்தின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும். மேலும் பீகார் ஆளுநரை பதவி வழி தலைவராகக் கொண்ட ஒரு வாரியத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இது பாரசீக மொழி அத்துடன் அரபு கையெழுத்துப்படிகளின் அரிய சேகரிப்புக்காக அறியப்படுகிறது. இது இந்தியாவின் இராஜ்புத்திரர்களுடன் முகலாயக் காலங்களில் தீட்டப்பட்ட ஓவியங்களையும் கொண்டுள்ளது.

இது, இந்திய சுவடிகள் இயக்கத்தின் கீழ் நிறுவப்பட்ட 'கையெழுத்துப் பிரதி பாதுகாப்பு மையம்' ஆகும்.[4]

வரலாறு

[தொகு]
மௌல்வி குதா பக்ச்

மௌல்வி குதா பக்ச், 1895 ஆம் ஆண்டில், ஐதராபாத் நிசாமின் இராச்சியத்தின் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஏறக்குறைய 3 ஆண்டுகள் அங்கு பணிபிரிந்த இவர் மீண்டும் பாட்னாவுக்குத் திரும்பி வழக்கறிஞராகப் பயிற்சி செய்யத் தொடங்கினார். ஆனால் விரைவில் இவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். இவர் தனது செயல்பாட்டை நூலகத்திற்கு மட்டுமே மட்டுப்படுத்தினார். இவரது உடல்நிலை காரணமாக, இவரால் தனது நடவடிக்கைகளை தொடர முடியவில்லை. நூலக செயலாளராக இருந்த இவருக்கு ரூ.8000 ஊதியமாகவும் பின்னர், ரூ. 200 பேர் ஓய்வூதியமாக அனுமதிக்கப்பட்டது. முடக்குவாதத்திலிருந்து குணமடைய முடியாமல் ஆகத்து 3, 1908 இல் இறந்தார்.

நூலகம்

[தொகு]

நூலகம் அதன் தோற்றத்தை ஒரு நூல் விரும்பியான முகமது பக்சின் தனிப்பட்ட சேகரிப்பில் கண்டறிந்து, அவரது மகன் குதா பக்சால் விரிவுபடுத்தப்பட்டது. இவர் 1,400 கையெழுத்துப் பிரதிகளை தனது தந்தையின் சேகரிப்பாகப் பெற்றார். மேலும் தொடர்ந்து சேகரிப்பில் ஈடுபட்டு பல புத்தகங்களையும் சேர்த்தார். இறுதியில் 1880 வாக்கில் அதை ஒரு தனியார் நூலகமாக மாற்றினார். அக்டோபர் 5, 1891 அன்று வங்காள ஆளுநர் சர் சார்லசு ஆல்பிரட்டு எலியட்டு அவர்களால் திறக்கப்பட்டது. பின்னர் இந்த நூலகம் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. 1947 இல் இந்தியப் பிரிப்புக்குப் பிறகு, முனைவர் எஸ். வி. சகோனி இந்தியாவில் நூல் சேகரிப்பில் முக்கிய பங்கு வகித்தார். 1969ஆம் ஆண்டில் 'குதா பக்ச் கிழகத்திய பொது நூலகச் சட்டம்' (1969) என்ற நாடாளுமன்ற சட்டத்தின் ஒரு கூட்டாட்சி சட்டத்தின் மூலம், இந்திய அரசு குதா பக்ச் கிழகத்திய பொது நூலகத்தை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மையமாக அறிவித்தது. மேலும், நிதி, நூலகத்தின் பராமரிப்பையும் மேம்பாட்டையும் அரசாங்கம் எடுத்துக் கொண்டது. இன்று இது உலகம் முழுவதிலுமிருந்து அறிஞர்களை ஈர்க்கிறது.[5]

2021 ஆம் ஆண்டில், வரலாற்று நூலக கட்டிடத்தின் சில இடங்களை இடித்து ஒரு மேம்பாலம் கட்டும் திட்டத்தின் ஒரு பகுதியாக முன்மொழியப்பட்டது.[6] இது சர்ச்சையைத் தூண்டியுள்ளது. கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளை உள்ளிட்ட அமைப்புகளும் பல ஆர்வலர்களும் இடிப்புக்கு எதிராக முறையிட்டனர்.

சேகரிப்பு

[தொகு]

முகலாய அரசர்கள், இளவரசர்களின் வரலாறு, மகாராஜா ரஞ்சித் சிங்கின் இராணுவ கணக்குகள் ஆகியவற்றைப் பற்றிய புத்தகமான தைமூர் நாமா, உட்பட சா நாமா, பாதுசா நாமா, திவான்-இ- ஹபீசு, சஃபினாதுல் ஆலியா ஆகிய குறிப்பிடத்தக்க கையெழுத்துப் பிரதிகள் இங்கு சேகரிப்பில் உள்ளது. இது தவிர முகலாய ஓவியங்கள், கையெழுத்து வனப்புகள், புத்தக அலங்காரம், அரபு, உருது கையெழுத்துப் பிரதிகளின் மாதிரிகள் ஆகியவையும் நூலகத்தில் உள்ளன. இதில் திருக்குர்ஆனின் ஒரு பக்கம் மான் தோலில் எழுதப்பட்டுள்ளது.[7][8] நூலகத்தில், அரபு, பாரசீகம், உருது, துருக்கியம், பஷ்தூ மொழிகளின் 21,136 கையெழுத்துப் பிரதிகள் உள்ளன.[9]

கிழக்கு வங்காளத்தின் ஏக்தாலாவின் சேக் முகம்மது இப்னு யச்தான் பக்ச் என்பவர் வங்காள மொழியில் எழுதிய சாஹிஹ் அல் புகாரி என்ற கையெழுத்துப் பிரதியும் இந்த நூலகத்தில் உள்ளது. இந்த கையெழுத்துப் பிரதி வங்காள சுல்தானுக்கு அலாவுதீன் ஹுசைன் ஷா அளித்த பரிசாகும்.[10]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Khuda Bakhsh Oriental Public Library (Historical Perspective)". kblibrary.bih.nic.in. Archived from the original on 2019-06-03. பார்க்கப்பட்ட நாள் 2018-01-21. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. "Destinations :: Patna". Archived from the original on 2014-09-18.
  3. "Patna's Khuda Bakhsh library continues to draw foreign scholars". 10 May 2019.
  4. Manuscript Conservation Centres பரணிடப்பட்டது 6 மே 2012 at the வந்தவழி இயந்திரம் National Mission for Manuscripts.
  5. "Islamic knowledge house, Khuda Bakhsh Library retains glory". Outlook. 8 July 2005. Archived from the original on 31 January 2013.
  6. Kuchay, Bilal. "Portion of India's historic Khuda Bakhsh library faces demolition". www.aljazeera.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-25.
  7. "Islamic knowledge house, Khuda Bakhsh Library retains glory". Outlook. 8 July 2005. Archived from the original on 31 January 2013."Islamic knowledge house, Khuda Bakhsh Library retains glory".
  8. "Ahluwalia, wife visit Khuda Bakhsh Library". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 19 November 2009 இம் மூலத்தில் இருந்து 2012-11-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121103212439/http://articles.timesofindia.indiatimes.com/2009-11-19/patna/28076763_1_khuda-bakhsh-oriental-public-deer-skin-visit. 
  9. "Khuda Baksh Oriental Public Library, Patna | Ministry of Culture, Government of India".
  10. Mawlana Nur Muhammad Azmi. "2.2 বঙ্গে এলমে হাদীছ". (in Bengali). Emdadia Library. p. 24. {{cite book}}: Missing or empty |title= (help)

மேலும் படிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]