அந்தமான் வாத்து
அந்தமான் வாத்து | |
---|---|
![]() | |
படம் கிலெமானட்சு (1908) | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | அனாடிடே
|
துணைக்குடும்பம்: | அனடினே
|
பேரினம்: | அனாசு
|
இனம்: | அ. அல்போகுலாரிசு
|
இருசொற் பெயரீடு | |
அனாசு அல்போகுலாரிசு (ஹியூம், 1873) | |
வேறு பெயர்கள் [2] | |
மரேகா அல்போகுலாரிசு ஹியூம், 1873 |
அந்தமான் வாத்து (அனாசு அல்போகுலாரிசு) என்பது வங்காள விரிகுடாவில் உள்ள அந்தமான் தீவுக்கூட்டத்தில் காணப்படும் ஒரு வாத்து சிற்றினமாகும். இந்தச் சிற்றினம் முன்பு சுந்தா வாத்தின் துணையினமாகக் கருதப்பட்டது.
வகைப்பாட்டியல்
[தொகு]அந்தமான் வாத்து குறித்து முதல் முறையான விளக்கம் 1873ஆம் ஆண்டில் இங்கிலாந்து பறவையியலாளர் ஆலன் ஆக்டவியன் ஹியூம் என்பவரால் மாரேகா அல்போகுலாரிசு என்ற இருசொற் பெயரில் பதிவுச்செய்யப்பட்டது.[3] இது இப்போது அனாசு பேரினத்தில் உள்ள பல வாத்துச் சிற்றினங்களுடன் வைக்கப்பட்டுள்ளது.[4] இது முன்பு இந்தோனேசியாவில் காணப்படும் சுந்தா வாத்து (அனாசு கிபரிப்ரான்சு) சிற்றினத்தின் துணையினமாக கருதப்பட்டது.[4]
விளக்கம்
[தொகு]இந்த சிற்றினம் அடர் பழுப்பு நிறத்தில் பஃபி அடையாளங்களுடன் உள்ளது. கண் மற்றும் தொண்டை வெளிர் நிறத்தில் இருக்கும், கண்ணைச் சுற்றி வெள்ளை வளையம் காணப்படும். இதன் அலகு நீல சாம்பல் நிறத்திலும் கருவிழி சிவப்பு நிறத்திலும் உள்ளது.
பரவலும் வாழிடமும்
[தொகு]அந்தமான் தீவுகள் (இந்தியா) மற்றும் கோக்கோ தீவு (மியான்மர்) ஆகியவற்றில் அந்தமான் வாத்து காணப்படுகிறது. இவை உள்நாட்டுக் குளங்கள் மற்றும் சதுப்பு நிலங்கள் மற்றும் கடற்காயல்களில் காணப்படுகின்றன.[5][6] 1995-98-இல் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் 500 முதல் 600 வாத்துக்கள் இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டது. மேலும் 674 வாத்துக்கள் உள்ளது 2005-இல் கணக்கிடப்பட்டது.[7] கடந்த சில தசாப்தங்களாக இவற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2014ஆம் ஆண்டில் 1,000க்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான வாத்துகள் காணப்படுவதாக மதிப்பிடப்பட்டது.[1]
நடத்தை
[தொகு]இவை இரவில் நெல் வயல்களில் இரைத்தேடுகின்றன. இதன் இனப்பெருக்க காலம் சூலை முதல் அக்டோபர் வரையும் நாணல் திட்டுகளில் கூடுகள் கட்டும் பழக்கத்தினையும் கொண்டுள்ளன. கூடு புற்களை கொண்டு கட்டப்படுகிறது. இதில் சுமார் ஒன்பது முட்டைகள் வரை இடுகின்றன.[8] இவை முன்பு மரப் பொந்துகளில் இனப்பெருக்கம் செய்வதாகக் கருதப்பட்டன. ஆனால் சமீபத்திய ஆய்வுகளில் எந்த ஆதாரமும் இது தொடர்பாகக் கிடைக்கவில்லை. இவை முக்கியமாக மெல்லுடலிகள் மற்றும் கணுக்காலிகளை உணவாகக் கொள்கின்றன.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 BirdLife International (2017). "Anas albogularis". IUCN Red List of Threatened Species 2017: e.T22727280A110106998. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T22727280A110106998.en. https://www.iucnredlist.org/species/22727280/110106998. பார்த்த நாள்: 20 November 2021.
- ↑ Richmond Index card
- ↑ Allan Octavian Hume (1873). "Novelties: Mareca albogularis, Sp. Nov.". Stray Feathers 1 (2, 3, 4): 303–304. https://www.biodiversitylibrary.org/page/30007209.
- ↑ 4.0 4.1 Gill, Frank; Donsker, David, eds. (2017). "Screamers, ducks, geese & swans". World Bird List Version 7.3. International Ornithologists' Union. Retrieved 23 July 2017.
- ↑ Inglis, C. M. (1904). "The Oceanic, or Andaman Teal Nettium alligulare". J. Bombay Nat. Hist. Soc. 15 (3): 525. https://www.biodiversitylibrary.org/page/2097157.
- ↑ Wilson, N. F. (1904). "The Oceanic, or Andaman Teal Nettium albigulare". J. Bombay Nat. Hist. Soc. 15 (3): 525–526. https://www.biodiversitylibrary.org/page/2097157.
- ↑ 7.0 7.1 Vijayan, L (2006). "Ecology and conservation of the Andaman Teal". J. Bombay Nat. Hist. Soc. 103 (2): 231–238.
- ↑ Kulkarni, S.; Chandi, M. (2003). "Note on breeding of Andaman Teal Anas gibberifrons in south Andaman Islands, India". Journal of the Bombay Natural History Society 100 (1): 112–113. https://www.biodiversitylibrary.org/page/48602686#page/122/mode/1up.
