அஜய் மணிக்ராவ் கான்வில்கர்
அஜய் மணிக்ராவ் கான்வில்கர் ( Ajay Manikrao Khanwilkar 30, சூலை 1957) என்பவர் இந்திய உச்சமன்ற நீதிபதி ஆவார். 2016 மே மாதம் 13 முதல் இப்பதவியை வகித்து வருகிறார்.
மும்பை கீழமை நீதி மன்றங்களிலும் உயர்நீதிமன்றத்திலும் வழக்குரைஞராகப் பணியாற்றினார். 1982 பிப்பிரவரி 10 இல் முதன் முதலாக வழக்குரைஞராகப் பதிவு செய்து கொண்டார். குடிமையியல், குற்றவியல், அரசியல் சட்ட சம்பந்தமான வழக்குகளில் தம் பணிகளை ஆற்றினார்.
மும்பை உயர்நீதி மன்றத்தில் 2002 எப்பிரல் 8 இல் நிலையான நீதிபதி ஆனார். பிறகு 2013 ஏப்பிரல் 4இல் இமாச்சல பிரதேச உயர்நிதிமன்ற முதன்மை நீதிபதியாகவும் 2013 நவம்பர் 24 இல் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்ற முதன்மை நீதிபதியாகவும் ஆனார். [1][2]
மேற்கோள்[தொகு]
- ↑ "Ajay Manikrao Khanwilkar,Chief Justice of H.P. High Court". HimSatta இம் மூலத்தில் இருந்து 4 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304115914/http://www.himsatta.com/fullstory.php?&newsid=2893. பார்த்த நாள்: 8 January 2016.
- ↑ "HON'BLE THE CHIEF JUSTICE SHRI AJAY MANIKRAO KHANWILKAR, B.Com., LL.B.". High Court of Madhya Pradesh இம் மூலத்தில் இருந்து 31 அக்டோபர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181031054130/https://mphc.gov.in/?q=node%2F274. பார்த்த நாள்: 8 January 2016.