அசாமிய தேநீர் மல்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அசாமிய தேநீர் மல்லி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
தாரகைத் தாவரம்
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
J. lanceolaria
இருசொற் பெயரீடு
Jasminum lanceolaria
Roxb.[1]

அசாமிய தேநீர் மல்லி (தாவர வகைப்பாட்டியல்: Jasminum lanceolaria) என்பது மல்லிப் பேரினத்தைச் சார்ந்த, இருநூற்றிற்கும் மேற்பட்ட மல்லிகை இனங்களில் ஒன்றாகும். இப்பேரினம், பன்னாட்டு பூக்கும் தாவர மரபுநெறிமுறை குழுமத்தின் (APG IV) நான்காவது பதிப்பின் படி[2], முல்லைக் குடும்பத்திலுள்ள 29 பேரினங்களில்[3] ஒன்றாக இடம் பெற்றுள்ளது. இத்தாவரயினம், யாசுமினம் லான்சியோலாரியம் என்ற தாவரவியல் பெயரால் அழைக்கப்படுகிறது. 1820 ஆம் ஆண்டு இவ்வினத்தினைப் பற்றிய தாவரவியல் முதற்குறிப்பு உள்ளது. மல்லிகைத் தேநீர் தயாரிப்பில் ஒரு குறிப்பிட்ட அளவு இம்மல்லிகையும் கலந்து உருவாக்கப்படுகிறது.[4] இது கொடி வகையாகும். துணை வெப்ப மண்டலம் இதன் உயிரிலம் ஆகும். இச்சூழ்நிலையில், இத்தாவரயினம் முதன்மையாக வளர்கின்றன.

பேரினச்சொல்லின் தோற்றம்[தொகு]

அரபி மொழியில், யாச(அ)மின் (ياسمين), என்றும்; இந்த அரபிச்சொல்லுக்கு "இனிய நுறுமணமுள்ள தாவரங்கள்" என்பது பொருளாகும்.[5] பாரசீக மொழியில் யாசுசுமின் (یاسمین) என்றும்; உருது மொழியில் یاسمینی அல்லது یاسمین بو என்றும் அழைப்பர். மேலும், மல்லிப்பூவின் வாசனை எண்ணெக்கான பெயர்கள், சில கிரேக்க சொற்களோடு (iasme, iasmelaion) ஒப்பீடும் செய்யப்படுகிறது. 1570 ஆம் ஆண்டுகளில், பிரஞ்சு மொழியில் jasmin என்ற சொல்லும், அதற்கு முன்னர் jessemin என்ற சொல்லும் பயன்பாட்டில் இருந்துள்ளன. பிரஞ்சு மொழியில் இருந்து, பல செருமானிய மொழிகளில் இச்சொல்லின் வேறுபட்ட வடிவங்கள் தோன்றியது எனலாம். பதினாறாம் நூற்றாண்டில் இத்தாவர வகை இங்கிலாந்தில் முதன்முதலாக வளர்க்கப்பட்டதாக அறிய முடிகிறது.[6]

வாழிடம்[தொகு]

பிறப்பிடம்: அந்தமான், அசாம், வங்காளதேசம், கம்போடியா, வடநடுசீனா(China North-Central), தென்நடுசீனா(China South-Central), தென்கிழக்கு சீனா, (China Southeast), கிழக்கு இமயமலைப் பகுதிகள், ஆய்னான், மலாயா, மியான்மர், இரியூக்கியூ தீவுகள், தைவான், தாய்லாந்து, வியட்நாம் ஆகியன, இத்தாவரயினத்தின் பிறப்பிடங்களாக பன்னாட்டு அறிஞர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.[7]

இதன் அகஇனங்கள்[தொகு]

  1. Jasminum lanceolaria subsp. lanceolaria[8]
  2. Jasminum lanceolaria subsp. scortechinii[9]

ஆகியன இதன் அகஇனங்களாக (Infra species) அறிவிக்கப்பட்டுள்ளன. இவைகளை துணை இனங்கள் (Sub species) எனவும் அழைப்பர்.

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Jasminum lanceolaria". Plants of the World Online (POWO) (in பிரித்தானிய ஆங்கிலத்திலுள்ள இணையப்பக்கம்). Royal Botanic Gardens, Kew. பார்க்கப்பட்ட நாள் 27 அக்டோபர் 2023.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. Angiosperm Phylogeny Group (2016), "An update of the Angiosperm Phylogeny Group classification for the orders and families of flowering plants: APG IV", இலின்னேயசு சமூகத்தின் தாவர ஆய்விதழ், 181 (1): 1–20, doi:10.1111/boj.12385
  3. முல்லைக் குடும்பம் (Oleaceae Hoffmanns. & LinkFirst published in Fl. Portug. [Hoffmannsegg] 1: 62. 1809 [1 Sep 1809] (as "Oleinae") (1809) nom. cons.)
  4. https://tropical.theferns.info/viewtropical.php?id=Jasminum+lanceolaria
  5. Gledhill, David (2008). "The Names of Plants". Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521866453 (hardback), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521685535 (paperback). pp 220
  6. etymonline
  7. https://powo.science.kew.org/taxon/urn:lsid:ipni.org:names:609573-1#distributions
  8. https://powo.science.kew.org/taxon/urn:lsid:ipni.org:names:77170877-1
  9. https://powo.science.kew.org/taxon/urn:lsid:ipni.org:names:984191-1
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசாமிய_தேநீர்_மல்லி&oldid=3926984" இலிருந்து மீள்விக்கப்பட்டது