அகர்வால் கண் மருத்துவமனை
![]() | |
வகை | பொது நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 1957 |
சேவை வழங்கும் பகுதி | இந்தியா, கானா, கென்யா, மடகாஸ்கர், மொரிசியஸ் மொசாம்பிக், நைஜீரியா, உருவாண்டா, தான்சானியா, உகாண்டா, சாம்பியா |
முதன்மை நபர்கள் | மருத்துவர் அமர் அகர்வால் |
தொழில்துறை | நலம் பேணல் |
உற்பத்திகள் | கண் மருத்துவம் கண் மருத்துவப் படிப்புகள் |
இணையத்தளம் | www |
அகர்வால் கண் மருத்துவமனை (Dr. Agarwal's Eye Hospital) தமிழ்நாட்டின் சென்னை மாநகரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது. இதனை கண் மருத்துவர்களான ஜெய்வீர் அகர்வால்[1] டாக்டர் ஜெய்வீர் அகர்வாலின் மனைவி மற்றும் மகன் ஆகியோரும் கண் மருத்துவர் ஆவர். ஜெய்வீர் அகர்வால் 16 நவம்பர் 2009 அன்று காலமானார்.[2][3][4] மற்றும் அவரது மனைவி தாகிரா அகர்வால் ஆகியோர் இணைந்து 1957ஆம் ஆண்டில் நிறுவினர். இந்த மருத்துவமனையின் கிளைகள் இந்தியா மட்டுமல்லாமல் 10 ஆப்பிரிக்கா நாடுகளில் 15 கண் மருத்துவ மையங்களைக் கொண்டுள்ளது. இந்தியாவில் 103 கண் மருத்துவ மையங்களுடன் இயங்குகிறது.[5][6][7] அகர்வால் மருத்துவமனையின் தற்போதைய தலைவராக, மேலாண்மை இயக்குநரான அமர் அகர்வால் உள்ளார்.[8]
கண் மருத்துவ மையங்கள்
[தொகு]இந்தியா
[தொகு]அகர்வால் மருத்துவமனைக்கு சென்னையில் 16 கிளைகளும், பிற மாவட்டங்களில் 16 கிளைகளும் உள்ளன. பெங்களூரு]] நகரத்தில் 11 கிளைகளும்; தெலங்காணா மாநிலத்தில் 8 கிளைகளும்; ஆந்திர மாநிலத்தில் 5 கிளைகளும்;[9] ஜெய்ப்பூரில் ஒரு கிளையும், அந்தமானின் போர்ட் பிளேரில் ஒரு கிளையும்; கேரளா மாநிலத்தில் 2 கிளைகளும்; கர்நாடகாவில் 3 மூன்று கிளைகளும்; ஒடிசா மாநிலத்தில் 2 கிளைகளும்; மகாராட்டிரா மாநிலத்தில் 4 கிளைகளும்; மத்தியப் பிரதேசத்தில் 3 கிளைகளும்; குஜராத்தில் 6 கிளைகளும் கொண்டுள்ளது.[10]
5 ஆகஸ்டு 2022 அன்று மகாராட்டிரா மாநிலத்தில் மேலும் 5 கண் மருத்துவமனைகளை துவங்கத் திட்டமிடப்பட்டது.
வெளிநாடுகளில்
[தொகு]அகர்வால் மருத்துவமனை கானா, கென்யா, மடகாஸ்கர், மொரிசியஸ் மொசாம்பிக், நைஜீரியா, உருவாண்டா, தான்சானியா, உகாண்டா மற்றும் சாம்பியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் 15 கண் மருத்துவமனைகளைக் கொண்டுள்ளது.[7]
கல்வியும் பயிற்சியும்
[தொகு]சென்னை அகர்வால் மருத்துவமனையின் கண் மருத்துவக் கல்லூரியில் கண் மருத்துவம் தொடர்பான மருத்துவப் படிப்புகளும், இளநிலை, முதுநிலை பார்வைத் திறனளவீடு படிப்புகளும் கற்றுத்தரப்படுகின்றன.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Padma Awards presented". தி இந்து. 21 March 2006. http://www.thehindu.com/todays-paper/tp-national/padma-awards-presented/article3167353.ece.
- ↑ "Founder of Dr Agarwal's Eye Hospital Passes Away". The Financial Express (India). November 2009. http://healthcare.financialexpress.com/200912/market41.shtml.
- ↑ Kannan, Ramya (16 November 2009). "Ophthalmologist Jaiveer Agarwal passes away". தி இந்து. https://www.thehindu.com/news/cities/chennai/Ophthalmologist-Jaiveer-Agarwal-passes-away/article16892538.ece.
- ↑ "Services at Dr. Agarwal's Eye Hospital". Dr. Agarwal's Eye Hospital. Archived from the original on 2014-02-21.
- ↑ "Insight into Healthcare - Dr Agarwal's Eye Hospital, Chennai". The Financial Express (India). July 2008. http://healthcare.financialexpress.com/200807/coverstory09.shtml.
- ↑ Bureau, BL Chennai (2022-08-05). "Dr Agarwals acquires five eye hospitals in Pune". www.thehindubusinessline.com (in ஆங்கிலம்). Retrieved 2022-08-05.
{{cite web}}
:|last=
has generic name (help) - ↑ 7.0 7.1 "110+ Eye Hospitals - Find Eye Hospitals Near You for Eye Check-up & Treatment Online". Dr. Agarwals (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-08-05.
- ↑ www.ETHealthworld.com. "Interview: Dr. Amar Agarwal, Chairman & MD, Dr. Agarwal's Eye Hospital, Chennai - ET HealthWorld". ETHealthworld.com (in ஆங்கிலம்). Retrieved 2019-07-11.
- ↑ "Dr Agarwal's Eye Hospital entered Andhra Pradesh with five branches". தி இந்து. 9 May 2012 இம் மூலத்தில் இருந்து 19 February 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20140219162216/http://www.thehindubusinessline.com/industry-and-economy/dr-agarwals-eye-hospital-enters-ap/article3401314.ecep.
- ↑ "Dr. Agarwal's Eye Hospitals Branches". Dr. Agarwal's Eye Hospital. Archived from the original on 2014-02-23.