அகத்திய மல்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அகத்திய மல்லி
Jasminum agastyamalayanum, JNTBGRI, கேரளம்
மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்
பரப்பளவு:1, 60,000 சதுர கி. மீ. , நீளம்:1600 கி. மீ.
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
தாரகைத் தாவரம்
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
J. agastyamalayanum
இருசொற் பெயரீடு
Jasminum agastyamalayanum
Sabeena, Asmitha, Mulani, E.S.S.Kumar & Sibin[1]
வேறு பெயர்கள்

இதன் இனங்கள்[2][3]

அகத்திய மல்லி (தாவர வகைப்பாட்டியல்: Jasminum agastyamalayanum) என்பது மல்லிப் பேரினத்தைச் சார்ந்த, இருநூற்றிற்கும் மேற்பட்ட மல்லிகை இனங்களில் ஒன்றாகும். இப்பேரினம், பன்னாட்டு பூக்கும் தாவர மரபுநெறிமுறை குழுமத்தின் (APG IV) நான்காவது பதிப்பின் படி[4], முல்லைக் குடும்பத்திலுள்ள 29 பேரினங்களில்[5] ஒன்றாக இடம் பெற்றுள்ளது. இத்தாவரயினம், யாசுமினம் அகசுதியமாலயனும் என்ற தாவரவியல் பெயரால் அழைக்கப்படுகிறது. இங்கிலாந்திலுள்ள கியூ தாவரவியற் பூங்கா, இக்குடும்பத்தைக் குறித்து வெளியிட்ட, முதல் ஆவணக் குறிப்பு 2007[கு 1] ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.

வாழிடம்[தொகு]

இவ்வினத் தாவரங்களின் தாயகம் இந்தியா என கணித்துள்ளனர்.[6] குறிப்பாக இது தென்னிந்திய மாநிலங்களில் ஒன்றான கேரளத்தில் அதிகம் இருப்பதால், இவ்வினப் பெயரை, அம்மாநில மொழியான மலையாளம் என்பதையும், அம்மாநில மலைகளுள் ஒன்றான அகத்திய மலை என்பதையும் இணைத்து உருவாக்கியுள்ளனர்.

வளரியல்பு[தொகு]

இத்தாவரம் படரும் புதர் வகையாகும். இதன் தண்டு அழுத்தமாகவும், வட்டவடிமாகவும் இருக்கிறது. இலைகள் எதிர்இலைகளாகவும், மூவிதழ்களைப் பெற்றும், இலைப்பரப்பின் நுனி நீள்வட்ட முட்டைவடிவத்திலும் அமைந்துள்ளன. இலையின் அளவு 5.5-7 x 3-3.5 செ. மீ. இருக்கிறது. இலையின் அடிப்புறம் வட்டவடிவத் தோற்றத்திலும், இலை நுனி நோக்கி குவிந்தும், இலைப்பரப்பில் இலைமுடி அற்றும், இலையுறை கொண்டும் இருக்கிறது. இலையின் பக்கவாட்டு நரம்புகள் 6-8 வரை இணைநரம்புகளாக அமைந்துள்ளன. இலைக்காம்பு வட்டவடிவிலும், 3.5 செ. மீ. வரை இருக்கிறது. சிற்றிலைக் காம்பு 2 செ. மீ நீளமாகவும், நுனியில் வளைந்தும் காணப்படுகிறது. கருவகம் உருளை வடிவத்தில் உள்ளது.[கு 2][7]

பேரினச்சொல்லின் தோற்றம்[தொகு]

அரபி மொழியில், யாச(அ)மின் (ياسمين), என்றும்; இந்த அரபிச்சொல்லுக்கு "இனிய நுறுமணமுள்ள தாவரங்கள்" என்பது பொருளாகும்.[8] பாரசீக மொழியில் யாசுசுமின் (یاسمین) என்றும்; உருது மொழியில் یاسمینی அல்லது یاسمین بو என்றும் அழைப்பர். மேலும், மல்லிப்பூவின் வாசனை எண்ணெக்கான பெயர்கள், சில கிரேக்க சொற்களோடு (iasme, iasmelaion) ஒப்பீடும் செய்யப்படுகிறது. 1570 ஆம் ஆண்டுகளில், பிரஞ்சு மொழியில் jasmin என்ற சொல்லும், அதற்கு முன்னர் jessemin என்ற சொல்லும் பயன்பாட்டில் இருந்துள்ளன. பிரஞ்சு மொழியில் இருந்து, பல செருமானிய மொழிகளில் இச்சொல்லின் வேறுபட்ட வடிவங்கள் தோன்றியது எனலாம். பதினாறாம் நூற்றாண்டில் இத்தாவர வகை இங்கிலாந்தில் முதன்முதலாக வளர்க்கப்பட்டதாக அறிய முடிகிறது.[9]

இவற்றையும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Indian J. Forest. 30: 123 (2007)
  2. தாவரவியல் வளரியல்பு துறைச் சொற்கள்: Climibing shrubs; stem rounded, glabrous. Leaves trifoliolate, opposite, terminal leaflet ovate-elliptic, 5.5-7 x 3-3.5 cm, rounded at base, acuminate at apex, entire at margin, membranous, glabrous; lateral nerves 6-8 pairs, obscure, midrib impressed above, raised beneath; lateral leaflets ovate, 4.5-6 x 2-3 cm, rounded, obtuse or rarely subequal at the base, acuminate at the apex; petiole to 3.5 cm long, rounded, glabrous; petiolule to 2 cm long, bent near the apex. Inflorescence a short axillary cyme usually 1-3 together from the node, to 5 cm long, with 3-5 flowers. Flowers white, to 2.5 cm across, fragrant. Calyx glabrous, 5-toothed, to 3 mm long. Corolla tube 3 cm long; lobes 6, to 1.2 x 0.6 cm, elliptic-oblong, acute at apex, obscurely nerved. Stamens 2; anthers apiculate, to 0.7 cm long, rounded at base. Ovary cylindrical, glabrous; style to 3 cm long, slender, glabrous; stigma bifid, verrucose. Berry ovoid, single or often paired; seed 1 in each lobe. Dr. N Sasidharan (Dr. B P Pal Fellow), Kerala Forest Research Institute, Peechi

மேற்கோள்கள்[தொகு]

  1. "Jasminum agastyamalayanum". World Flora Online Plant List (in ஆங்கில இணையப்பக்கம்). இணையவழி பன்னாட்டு கூட்டுப் பகிர்வு, 2021. பார்க்கப்பட்ட நாள் 28 அக்டோபர் 2023.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. Jasminum agastyamalayanum, பன்னாட்டு தாவரப் பெயர்கள் குறிப்பேடு (IPNI)
    Jasminum agastyamalayanum, மிசோரி தாவரவியல் தோட்டம் - டிராபிகோசு இணையம்
  3. "Jasminum agastyamalayanum". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2 திசம்பர் 2023.
    "Jasminum agastyamalayanum". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2 திசம்பர் 2023.
  4. Angiosperm Phylogeny Group (2016), "An update of the Angiosperm Phylogeny Group classification for the orders and families of flowering plants: APG IV", இலின்னேயசு சமூகத்தின் தாவர ஆய்விதழ், 181 (1): 1–20, doi:10.1111/boj.12385
  5. முல்லைக் குடும்பம் (Oleaceae Hoffmanns. & Link First published in Fl. Portug. [Hoffmannsegg] 1: 62. 1809 [1 Sep 1809] (as "Oleinae") (1809) nom. cons.)
  6. "Jasminum agastyamalayanum". Plants of the World Online (POWO) (in ஆங்கில இணையப்பக்கம்). Royal Botanic Gardens, Kew. பார்க்கப்பட்ட நாள் 29 அக்டோபர் 2023.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  7. https://indiabiodiversity.org/species/show/263650
  8. Gledhill, David (2008). "The Names of Plants". Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521866453 (hardback), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521685535 (paperback). pp 220
  9. etymonline
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகத்திய_மல்லி&oldid=3926934" இலிருந்து மீள்விக்கப்பட்டது